• Archive for February, 2005

    என்னுடைய இன்றைய வானொலி நிகழ்ச்சி

    by  • February 13, 2005 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    கனேடியத் தமிழ் வானொலியில் வாரம் தோறும் நான் பங்கேற்கும் அறிவியல் செய்தி-விளக்கம்-நேரடி தொலைபேசி பதில்கள் நிகழ்ச்சியில் இன்று இரவு அறிவியல் விளக்கம் பகுதியில் அறை ஒளியூட்டல் தொழில்நுட்பத்தின் நடப்பும் நாளையும் தலைப்பாக இடம்பெறும். 1. சாதாரண மின்விளக்குகள் (Incandescent light bulb), 2. ஒளிரும் குழல் விளக்குகள் (Fluorescent bulbs), 3. நியான் விளக்குகள் (Neon lights) மற்றும் 5. ஒளியுமிழ் டையோடுகள் (LED lights). இவற்றைப் பற்றிய விளக்கங்கள் இடம்பெறும். இதன் நேரடி வலைபரப்பை கனேடியத் [...]

    Read more →

    மதம் பிடிக்கும் முறை

    by  • February 13, 2005 • பொது • 0 Comments

    சத்தியமாக இது யானை பற்றிய பதிவு கிடையாது. என்னுடைய அயலில் ஒரு வீட்டிற்குப் போகவேண்டியிருந்தது. அங்கே, என் மகனின் பள்ளியில் படிக்கும் ஒரு பத்து வயதுப் பையன் இருக்கிறான். காரியம் அவனுடன் இல்லை; அவன் தோப்பனாருடன். பெரியவர் வீட்டின் கீழடுக்கில் துணிகளைத் துவைக்க (மெசினுக்குள் போட்டுத்தான்) சென்றிருப்பதாகச் சொல்லி பையன் என்னைக் காத்திருக்கச் சொன்னான். என்னை யாரென்று அவனுக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் உள்ளே வந்து உட்காருங்கள் என்று சொல்லவில்லை.

    Read more →

    எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது – வடகொரியா

    by  • February 13, 2005 • பொது • 0 Comments

    தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக வடகொரியா வாக்குமூலம் தந்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவே அணு ஆயுதத்தைத் தயாரித்திருப்பதாகச் சொல்லுகிறது. இன்னும் சிலகாலங்களுக்கு இதுகுறித்து யாருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அணு ஆயுத சோதனையாளர்களை தங்கள் நாட்டைவிட்டு 2002ல் வெளியேற்றிவிட்டார்கள். அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்ததிலிருந்து 2003ஆம் ஆண்டு வெளியேறினார்கள். இப்பொழுது முதன் முறையாக அதிகார்வபூர்வமாக தங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    Read more →

    ஜெயலலிதா என்ற பாடகி

    by  • February 13, 2005 • இசை • 0 Comments

    1970களில் வெகுவாக முன்னணிக்கு வரத்தொடங்கிய ஜெயலலிதா திரைப்பட உலகில் ஒரு முக்கிய அறிவாளியாக அடையாளம் காணப்பட்டார். அந்த நாட்களில் அவருக்குக் கவர்ச்சியுடன் கூடவே மூளையுள்ளவர் என்ற மதிப்பும் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இதயம் பேசுகிறது, விகடன், உள்ளிட்ட சில இதழ்களில் தொடர்களை எழுதியிருக்கிறார் (கோஸ்ட் ரைட்டர் யார் என்று பா.ரா அல்லது சி·பி வெங்கடேஷைக் கேட்டால் தெரியலாம்). தொடர்ந்து சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார். அம்மணி சினிமா செட்களில் இங்கிலீசு புத்தகம் (மாத்திரமே) படிப்பதாகப் பேசிக் கொள்வார்கள். பாடல் [...]

    Read more →

    கிராமங்களில் அணைவருக்கும் உணவளிப்பது

    by  • February 6, 2005 • பொது • 2 Comments

    இன்றைய வலைப்பதிவில் பத்ரி கிராமங்களில் அனைவருக்கும் உணவளிப்பது அதனால் ஆகும் செலவுகள் பற்றிய மேலோட்ட மதிப்பீட்டு இவற்றைக் காட்டி, அரசு முன்வந்து கிராமங்களில் அணைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்றும் அதனால் பசி பற்றிய பயத்தையும் கவலையையும் மறந்த மக்கள் அதனால் உழைப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். எனக்கென்னமோ இது நடைமுறையில் சாத்தியமான காரியம் இல்லை என்று தோன்றுகிறது. முதலில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பத்ரியே காட்டியிருப்பதைப் போல இதில் இடைத்தரகர்கள், தாதாக்கள், அரசியல்வாதிகள் என்று [...]

    Read more →

    தமிழ் வழிக்கல்வி – தொடரும் அடிமை மனோபாவம்

    by  • February 4, 2005 • பொது • 6 Comments

    கடந்த வாரம் முழுவதும் அளவுக்கதிகமான வேலையிருந்ததால் ஆய்வகத்திலிருந்து தினசரி தாமதமாக வந்து கொண்டிருந்தேன். இதனால் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளைக் கூடப் படிக்க முடியவில்லை. இன்று மாலை படிக்கத் துவங்கியதில் உடனடியாக மனதை உறுத்தியது தங்கமணியின் “மெல்லத் தமிழினி சாகும்; வேகமாய்த் தமிழர்கள் சாவர்” என்ற பதிவுதான். என்னுடைய ஆரம்பப் பள்ளிக் கல்விகள் முழுவதையும் தமிழிலேயே கற்றவன், கல்லூரியில் படிக்கும் பொழுதும் தமிழ் வழி அறிவியல் புத்தகங்களைத் தேடிப்படித்தவன் (இப்பொழுதும் அவற்றைத் தேடிப்படித்துக் கொண்டிருப்பவன்) என்ற முறையில் என் [...]

    Read more →

    சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? -3

    by  • February 1, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    உங்கள் வீட்டில்ருந்து இணையதளம் நடத்துவது எப்படி என்று இன்றைக்கு விளக்குகிறேன். இந்தத் தொடரில் முன்னர் வந்தவை – பகுதி -1 தளத்தின் பெயரைப் பதிவுசெய்வது எப்படி? பகுதி -2 சேவை வழங்கு நிறுவனங்கள் முதலில் இதை முயன்று பார்க்க உங்களிடம் அகலப்பாட்டை (Broadband) இணைப்பு இருக்க வேண்டும். தொலைபேசிக் கம்பியின் வழியே எண்களைச் சுழற்றி இணைய இணைப்பு பெறுபவராக இருந்தால் இது சாத்தியமில்லை. (ஏற்றிறக்கி (Modem – MOdulator DEModulator) வழி இணைப்பில் உங்களுக்கு ஒரு ஐபி [...]

    Read more →