• Archive for February, 2005

    தற்பால் நாட்டம் – ஒரு அறிவியல் பார்வை

    by  • February 27, 2005 • பொது • 29 Comments

    நேற்று கார்த்திக்கின் கேள்விக்கு விடை சொல்வதாக நிறுத்திவிட்டுப் போனேன். ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. “பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா” என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது. இந்தக் கேள்வியின் அடிப்படையே தவறு. இது தற்பால் நாட்டத்திற்கு உயிரியல் ரீதியில் அடிப்படை கிடையாது என்பதை அறுதியிட்டுத் தீர்மானமாக மொழிகிறது. [...]

    Read more →

    தற்பால் நாட்டம்

    by  • February 25, 2005 • பொது • 9 Comments

    ராமச்சந்திரன் உஷா இன்றைய வலைப்பதிவில் ஹோமோஷெக்வல்/லெஸ்பியன் என்ற தலைப்பிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். சில ஆணித்தரமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். அதை முன்வைத்து சில எண்ணங்கள்; உஷா சொல்லியிருப்பது ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, [...]

    Read more →

    பிரிட்டிஷ் அரசின் வைரஸ் அறிவிப்புகள்

    by  • February 24, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பிரிட்டிஷ் அரசு கணினி, செல்பேசி போன்ற தகவல் சாதனங்களில் வைரஸ்கள் பற்றிய அறிவிப்புகளை (அதிகார்வபூர்வமாக) வெளியிடத் துவங்கியிருப்பதாக இன்றைக்கு பிபிஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. IT Safe என்று பெயரிடப்பட்ட இந்தச் சேவை வைரஸ் தொந்தரவுகள் தலையெடுக்கும்பொழுது IT Safe இணைய தளத்தின் வழியாகவும், பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கைகளை வெளியிடப் போகிறது. தளத்திற்குப் போய்ப் பார்த்தபொழுது அங்கே மைக்ரோஸாப்ட் சம்பந்தமான சமாச்சாரங்கள் மாத்திரமே இருக்கின்றன. ஆப்பிள், லினக்ஸ் உள்ளிட்ட பிற இயக்குதளங்களுக்கும் இந்தச் சேவை [...]

    Read more →

    ‘வெளி’ இணையதளம்

    by  • February 22, 2005 • இலக்கியம் • 9 Comments

    ‘எங்க ஊரு’க் கவிஞர் திருமாவளவன். இவரது கவிதைத் தொகுப்புகளான ‘பனிவயல் உழவு’, ‘அஃதே இரவு, அஃதே பகல்’ இரண்டும் முக்கியமானவை. (இவரது கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துப் பலநாட்களாக ஒத்திப்போட்டு வருகிறேன். சில சமயங்களில் என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே சலிப்பாக இருக்கிறது). டொராண்டோவிலிருந்து வெளிவந்த ‘ழ’கரம் சிற்றிதழின் இணையாசிரியராகவும் இருந்திருக்கிறார். இன்று காலை என்னை அழைத்து vezhi.com பாருங்கள் என்றார். அறிவுப்புகள் ஏதுமில்லாமல், அழகான வடிவமைப்புடன் ‘வெளி’ இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சேரன், செழியன், [...]

    Read more →

    இந்தியா :அடுத்த அறிவு அதிசக்தி – New Scientist

    by  • February 20, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பிரிட்டனிலிருந்து வெளிவரும் அறிவியல் வார இதழான நியூ சயன்டிஸ்ட் இவ்வாரத்தை இந்தியாவை மையமாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. முன்னட்டை India – The next knowledge superpower என்ற தலைப்பைத் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழில் இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பல கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் சில அவர்கள் தளத்திலிருந்து நேரடியாகக் கிடைக்கின்றன.

    Read more →

    ட்சூனாமியில் வெளிவந்த புத்தர்

    by  • February 18, 2005 • பொது • 3 Comments

    {நான் இதைப்பற்றி சென்ற வாரமே எழுத ஆரம்பித்து நேரமில்லாமல் ஐந்து வரிகளுடன் நிறுத்திவிட்டேன். ஆச்சரியமாக, நம் வலைப்பதிவு நண்பர்கள் யாருமே இதைப் பற்றி எழுதவில்லை. இது எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுவதால் இப்பொழுதுதாவது எழுதுகிறேன்}. இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் சமீபத்திய ட்சூனாமியின் விளைவாக மகாபலிபுரத்தில் பழைய நகரத்தின் ஒரு பகுதி வெளிப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறது. இது பழைய மாமல்லபுரத்தின் (1200 வருடங்களுக்கு முந்தையது) ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். பாறைச் சிற்பங்களைக் கொண்ட தொகுதி கடலிருந்து [...]

    Read more →

    H2G2 Trailer

    by  • February 16, 2005 • கலைகள் • 0 Comments

    நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த Hitchhiker’s Guide to the Galaxy (H2G2) திரைவடிவம் வரும் ஏப்ரிலில் வெளியாகவிருக்கிறது. இன்றைக்கு அமேசான்.காமில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் கதையிலிருந்து இது மாறுபட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். (டக்ளஸ் ஆடம் வானொலி நாட்கம், புத்தகம், திரைப்படம் இவற்றின் வடிவங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்க வேண்டும் என்று சொன்னார். முடிந்தால் ஒன்றுக்கொன்று முரண்படுவதும் நல்லது என்று விரும்பினார்). எனவே திரைவடிவத்தில் நிறைய புதுமைகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. முன்னோட்டத்தில் இருப்பதைப் பார்த்தால் நடிகர்கள் [...]

    Read more →

    அல்லிக் குளத்தருகே

    by  • February 16, 2005 • பொது • 9 Comments

    என் சிறுவயது நினைவுகளில் அல்லி, ஆம்பல் குளங்களுக்கு நிறையவே இடமுண்டு. நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும்பொழுது குளிக்கக் குளத்திற்குச் செல்லும் அப்பாவுடன் கூடப்போவது வழக்கம். அதிகாலை எழுந்தவுடன் அம்மா தரும் கோதுமை அல்லது கேழ்வரகுக் கஞ்சியைக் குடித்துவிட்டு நானும் அப்பாவும் குளத்திற்குக் கிளம்புவோம். வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மைல் தொலைவிலிருக்கும் குளம் அது. அதைவிட அருகில் மூன்று குளங்கள் உண்டு. ஆனாலும் ஊருக்கு வெளியே இருக்கும் கருங்குழி என்ற அந்தக் குளத்திற்குத்தான் அப்பா செல்வார். வழிமுழுகக் கேள்விகளும், [...]

    Read more →

    என் புது மடிக்கணினியில் லினக்ஸ்

    by  • February 15, 2005 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    சென்றவாரம் என் அலுவலில் எனக்குப் புது மடிக்கணினி கிடைத்தது. பெண்டியம் 3 (700 மெஹாஹெர்ட்ஸ்) கொண்ட பழைய சோனி வாயோ என் வேலைக்குப் போதவில்லை என்று அழுது அடம்பிடித்துப் புதிய வாயோவை வாங்கிக் கொண்டேன். இதனுடைய விபரங்கள் இங்கே. விலை வேண்டுமானால் இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.

    Read more →

    தளத்தில் மாற்றங்கள்

    by  • February 14, 2005 • பொது • 1 Comment

    ஒரு வழியாக பழைய BLOG:CMS வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்த என் தளத்தை இப்பொழுது இற்றைப்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் என் படைப்புகளுக்காகத் தனியாக இயங்கிக் கொண்டிருந்த இன்னொரு தளத்தின் தேவையை நீக்க முடியும். இங்கிருக்கும் விக்கியின் வழியாக என் பழைய கட்டுரைகள், கதைகள் போன்றவற்றையும், குவாண்டம் கணினி புத்தகத்திற்கான தளத்தையும் ஒன்றாக இணைக்க முடியும். இதனால் தள நிர்வாகம் எனக்கு எளிமைப்படும். என்னுடைய தளத்திற்கு வருபவர்களுக்கும் ஒரு முன்னேற்றம் இருக்கிறது. பழைய தமிழ் லினக்ஸ் தளத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் [...]

    Read more →