• Archive for January, 2005

    என்னுடைய இன்றைய வானொலி நிகழ்ச்சி

    by  • January 30, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    இப்பொழுது கனேடியத் தமிழ் வானொலி மீண்டும் வலைவழியே கிடைப்பதால் என்னுடைய வாராந்திர அறிவியல் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகளை இங்கே தரலாம் என்று நினைக்கிறேன். இந்த அறிவியல் நிகழ்ச்சி டொராண்டோ நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை ஒலிபரப்பாகிறது. முதல் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு இந்த வாரத்தில் வெளியான முக்கிய அறிவியல் செய்திகள் பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன. தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான ‘விஞ்ஞான அலசல்’ பகுதி 25 முதல் 30 நிமிடங்கள் வரை வரும். [...]

    Read more →

    சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? – 2

    by  • January 29, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    சரி இப்பொழுது ஒரு இணையதளத்தின் பெயரை உங்களுக்காகப் பதிவு செய்துவிட்டீர்கள். இனி என்ன செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்ததும் அது இணையம் முழுவதும் இருக்கும் பெயர்காட்டிகளில் (Domain Name Servers) பரவுத் தொடங்கும். உடனே அந்தப் முகவரியை யாராவது தேடியலைந்தால் என்ன செய்வது? இதற்காகப் பதிவாளரே ஒரு வெற்றுப் பக்கத்தைப் போட்டு வைத்திருப்பார் (யோவ், ஆளு வரும்யா, துண்டு போட்டுட்டுப் போயிருக்காரு).

    Read more →

    சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? – 1

    by  • January 28, 2005 • அறிவியல்/நுட்பம் • 6 Comments

    சமீபத்தில் என்னிடம் சிலபேர் உன்னுடைய domesticatedonion.net தளத்தை எப்படி உருவாக்கினாய்? இதைப் போல நானும் சொந்தத்தில் இணையதளம் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பதில் தரும் முகமாகவும் தமிழ் வலைப்பதிவு விக்கியை வளப்படுத்துவதற்காகவும் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சொந்த வலைப்பதிவு அமைப்பதைப் பற்றி என்றாலும் இது பொதுவில் வலைப்பதிவு கடந்த விஷயங்களையும் தொடுகிறது. பல நாட்களாக ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த இதற்கான இன்றைய வினையூக்கி மூக்கு சுந்தரின் இந்த வலைக்குறிப்பு. நன்றி சுந்தர்.

    Read more →

    தமிழ் லின்கஸ் குறித்த பழைய பிபிஸி செவ்வி

    by  • January 27, 2005 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    தமிழ் லின்கஸ் குறித்து நான் பிபிஸி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் ஒலிக்கோப்பினை மறுபடியும் வலையேற்றியிருக்கிறேன். எம்பி3 கோப்பு சமீபத்திய இயற்பியல் ஆண்டு குறித்த பேட்டியைப் போலவே இதுவும் அவசரமாக அளிக்கப்பட்டதுதான். கவனமாகக் கேட்டால் பின்னால் என் மகன் என்னிடம் பேசுவதுகூடப் புரியலாம் . சில சமயங்களில் நிதானமாக யோசித்துப் பேசினால் இன்னும் கொஞ்சம் கோர்வையாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றும்.

    Read more →

    விண்கல்லுக்கு டக்ளஸ் ஆடம் பெயர்

    by  • January 26, 2005 • இலக்கியம் • 3 Comments

    சந்தோஷம் தரும் செய்தியன்றை இன்றைக்குப் படித்தேன். விண்கல் (Asteroid) ஒன்றுக்கு அறிவியல் புனைகதை, (சரியாகச் சொல்லப்போனால் அறிவியல் ‘நகை’கதை என்றுதான் இருக்கவேண்டும்) எழுத்தாளர் மறைந்த டக்ளஸ் ஆடமின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டக்ளஸ் நோயல் ஆடம் (DNA) சம்பந்தமான எல்லா விஷயங்களையும் போலவே இதுவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. விண்கற்கள் (பொதுவில் செவ்வாய்க்கும் ஜுபிடருக்கும் இடையில் விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் கற்கள்) விண்ணியலார் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது காணக்கிடைக்கின்றன. இவற்றை அடையாளம் கண்டுபிடித்துப் பெயரிடுவது வழக்கம். இவற்றில் பலவற்றுக்குச் சரித்திரத் தொடர்பு இருக்கின்றன. [...]

    Read more →

    இயற்பியல் ஆண்டு குறித்த பிபிஸி செவ்வி

    by  • January 25, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    பிபிஸி தளத்தில் இருக்கும் என்னுடைய இயற்பியல் குறித்த செவ்வியைக் கேட்பதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் சொன்னதால், அந்த 30 நிமிட நிகழ்ச்சியை இறக்கி அதிலிருந்து ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்கு ஒலிபரப்பான என்னுடைய பகுதியை மாத்திரம் தனியே வெட்டி, என் வசமிருக்கும் வழங்கியொன்றில் போட்டுவைத்திருக்கிறேன். இதன் முகவரி http://www.optics.utoronto.ca/venkat/bbc_venkat_physics.mp3 பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 வடிவம் அது. ஒலிபரப்பை மோனோ வடிவில் மாற்றியிருக்கிறேன். இருந்தும் கோப்பின் அளவு சற்றுப் பெரிது (6.9 மெகாபைட்கள்). ரியல் கேட்கும் வசதியில்லாதவர்களுக்காக. மோடம் [...]

    Read more →

    பிபிஸி தமிழோசையில் என்னுடைய பேட்டி

    by  • January 25, 2005 • பொது • 13 Comments

    அரைமணி நேரத்திற்கு முன்பு லண்டன் பிபிஸி தமிழோசையிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு 2005 ஆம் ஆண்டு இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டதைப் பற்றி ஒரு பேட்டியைப் பதிவு செய்தார்கள். இது இன்றைக்கு 15:15 UTC (GMT) -க்கு முதல் முறையாக ஒலிபரப்பாகும் என்று சொன்னார்கள். இந்திய, இலங்கை நேரம் இரவு21:15; அமெரிக்கக் கிழக்கு மாநிலங்களில் காலை 10:45 கனேடியத் தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, இலங்கையில் சக்தி எ·ப் எம் உட்பட பல வானொலிகள் தமிழோசையை மறு ஒலிபரப்பு [...]

    Read more →

    கண்ணில் தெரியும் கதைகள் – நானொரு பொன்னோவியம்

    by  • January 23, 2005 • இசை • 9 Comments

    ஐந்து இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக இசையமைத்தது எனக்குத் தெரிந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரண்டு முறைதான் நடந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ‘ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று அபத்தமாகத் தலைப்பிடப்பட்டு ஒரு திரைப்படம் வந்தது. அதற்கு ஸ்ரீனிவாஸ், ராகவ்-ராஜா, முருகவேல், ரமேஷ் விநாயகம், அரவிந்த்-ஷங்கர் (அஞ்சா, இல்ல ஏழா?) ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு பாடலுக்கு இசையமைத்தார்கள். கேளடி கண்மணி, ரிதம் போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்ட படங்களை இயக்கிய வஸந்துக்கு [...]

    Read more →

    இராக்கியருடன் போரிட இயந்திரன்களை அனுப்புகிறது அமெரிக்கா

    by  • January 22, 2005 • பொது • 4 Comments

    அடுத்த இரண்டு மாதங்களில் பதினெட்டு இயந்திரன்களை இராக் போருக்கு அனுப்பவிருக்கிறதாம் அமெரிக்கா. உண்மையில் இவை கதைகளில் வருவனவற்றைப் போல தன்னிச்சையாக மனிதர்களைச் சுட்டுத்தள்ளும் இயந்திரன்கள் அல்ல. போரில் முன்னால் நிறுத்தப்பட்டு இவற்றின் உணரிகள் வாயிலாகக் காண்பதை அனுமானித்து பொத்தானை அமுக்கினால் மாத்திரமே சுடக்கூடியவை. பனியோ, பாலைப்புயலோ இனி ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. துப்பாக்கி பிடித்த சந்தோஷத்தில் அழுத்துவது என்பார்களே, அதேபோல வெப்பச்சமன் செய்யப்பட்ட அறைகளில் உட்கார்ந்து கொண்டு, பனியிலோ பாலைப்புயலிலோ அலையும் எதிரியைச் சுட்டுத்தள்ளும் போர்முறை. மனிதத்தன்மையற்ற [...]

    Read more →

    குவாண்டம் கணினி – அ. முத்துலிங்கத்தின் விமர்சனம்

    by  • January 21, 2005 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    இந்த வாரத் திண்ணையில் என்னுடைய ‘குவாண்டம் கணினி’ புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் விமர்சனம் வந்திருக்கிறது. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் முகந்தெரியாமல் என்னைப் பாராட்டி, ஊக்குவித்துக் கடிதம் எழுதியவர் திரு. முத்துலிங்கம். எதேச்சையாக அவர் வசிக்கும் ஊருக்கு நானும் வந்து சேர்ந்தது விந்தை. விமர்சனத்தின் துவக்கத்தில் அவர் எழுதியிருக்கும் தமிழகத்தின் ‘பிரபல எழுத்தாளர்’ சம்பவத்தை அவர் எனக்கு முதலில் எழுதியபொழுது நான் பெரிதாக நம்பவில்லை (என்னைப் பற்றி ‘இன்னார்’ சொல்வதாவது என்றுதான் நான் நினைத்திருந்தேன்). சிறியவனான [...]

    Read more →