ஹிந்துவின் சினிமா விமர்சனத் திருட்டு
by வெங்கட் • November 29, 2005 • பொது • 17 Comments
நீனா என்ற (ஆங்கில) வலைப்பதிவர் தி ஹிந்துவில் கௌதமன் பாஸ்கரன் என்பவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் எப்படித் தொடர்ச்சியாக நியூ யார்க் டைம்ஸ் பதிப்பிலிருந்து திருட்டுத்தனமாக உருவப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறார்.
Alexander, Mona Lisa Smile, The Forgotten, Troy, Aviator போன்ற படங்களுக்கான விமர்சனங்களில் நி.யா.டைம்ஸின் விமர்சன வார்த்தைகள் எப்படி உருவிச் செருகப்பட்டிருக்கின்றன என்று விபரமாக எழுதியிருக்கிறார் நீனா.
இதைப் போன்ற பத்தித்திருட்டுகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்துவருவதை பல ஆங்கில வலைப்பதிவுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.
நம்ம தமிழில் இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஒரு முறை இங்கே டொராண்டோவில் வெளியாகும் குமுதம் சைஸ் பத்திரிக்கையில் என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு நண்பர் தொலைபேசியில் நன்றாக இருப்பதாகச் சொன்னார். அப்படியொரு பத்திரிக்கையை நான் பார்த்ததேயில்லை; சொல்லப்போனால் அவர் சொல்வதற்கு முன்னால் கேள்விப்பட்டதுமில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதம் கழித்து நண்பர் என் வீட்டுக்கு வந்தபொழுது மறக்காமல் அந்தப் பத்திரிக்கையை எடுத்துவந்து கண்ணில் காட்டினார். இதன் பின் பல முறை இது நிகழ்ந்துவிட்டது; இங்கேயே சில வலைத்தளங்களில், இலங்கையில் ஒரு பத்திரிக்கையில். ஆனால் இவற்றில் எதிலுமே என்னுடைய பெயர் நீக்கப்படவில்லை. (அண்மையில் டுபுக்குகூட இப்படி எழுதியிருந்தார்). ஒருவகையில் இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது. உண்மையில் இலங்கையில் என்னுடைய கட்டுரை ஒன்று ஒரு தினசரியில் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபொழுது எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அது தமிழ் லினக்ஸ் பற்றிய கட்டுரை, என்னுடைய தமிழில் லினக்ஸ் பற்றி பலருக்கும் சொல்லவேண்டும் என்றா நோக்கத்தை என் அனுமதியில்லாமல் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்ற மனநிலை வித்தியாசமானது. ஆனால் ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பணபலம், ஆட்பலம், பல வருட சரித்திரம் கொண்ட ஒரு பெரிய நிறுவனங்களில் இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது என்னும் பொழுது எரிச்சல்தான் வருகிறது.
கௌதமன் பாஸ்கரன் தனக்கென்று ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார். அதில்
My task was to write on cinema in The Hindu in a manner that befitted its editorial poise. This is what I have since been doing and there hasn�’t been a dull moment for me and hopefully for the reader.�
No domain experience is worthwhile unless it connects to the larger picture. This is even truer of a medium like cinema that draws its strength from and impacts a slew of broader social issues. In keeping with this spirit, my work content has expanded over the years. Today, my writing extends to health, environment, wildlife,�civil rights and child welfare.
இவர் உடல்நலம், சுற்றாடல், வனவிலங்குகள், மனித உரிமைகள் இவற்றைப்பற்றியெல்லாமும் எழுதுகிறாராம்! No domain experience is worthwhile unless it connects to the larger picture என்று கௌதமன் சொல்கிறார். உண்மைதான்; அந்தக் காரியத்தை இப்பொழுது நீனா செய்து நம் அனுபவத்தை முழுமையாக்கியிருக்கிறார்.
வாரா வாரம் இது போல ஒவ்வொருத்தர் அகப்படுகிறார்கள். வரீசையாக DNA, TOI, HT, Indian Express என்று… இந்த வாரம் ஹிந்து..நான் எதிர்பார்க்கவே இல்லை…., அதிலும் அவர் கிட்டதட்ட இருபது வருடங்களாக எழுதி வருகிறாராம்..வலைப்பதிவாளர்கள் நிறைய பேர், ஹிந்துவுக்கு மின்னஞ்சல்களாகப் பொழிந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.. மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு ( இதை எங்க படிச்சேன்? ) எப்படி ரீயாக்ட் செய்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதலிலே நான் தியோடர் பாஸ்கரனையும் இவரையும் குழப்பிக்கொண்டேன். அவரும் திரைப்படங்கள், சுற்றாடல், காட்டுவாழ்க்கை பற்றி எழுதுகின்றவர். ஆனால், ஹொலிவுட் படங்களுக்கு விமர்சனங்கள் எழுகின்றவரில்லை.
[2] இரமணி – தியோடர் பாஸ்கரனை ரொம்ப நாளைக்கு தியேட்டர் பாஸ்கரன் என்று படித்துக் கொண்டிருந்ததாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.
தியோடரின் சில சுற்றாடல் கட்டுரைகளும் திரைவிமர்சனக் கட்டுரைகளும் மிக நன்றாக எழுதப்பட்டவை. என்னுடைய மதிப்பீட்டில் தமிழில் சுற்றாடல் குறித்து எழுதுபவர்களில் அவர்தான் தலையானவர்.
//தியோடரின் சில சுற்றாடல் கட்டுரைகளும் திரைவிமர்சனக் கட்டுரைகளும் மிக நன்றாக எழுதப்பட்டவை.//
ஆமாம். சமீபத்தில் கூட ஏதோ ஒரு நூல் வெளிட்டார் என நினைவு.
இந்துவுக்கு 125வருட பாரம்பரியம் என்று இங்கு சில எழுத்தாளர்கள் குறிப்பிட்டு அதனால் அது நம்பத்தக்கது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
Venkat,
Thanks for that info.
There was a similar incident happened in the Toronto Star. A senior reporter modified a report published in a US daily and compiled for the Star. The report was published in the Star. Later, a reader lodged a complaint about this report to the ombudsperson of the Star. The ombudsperson carried out a investigation and found out that the report, indeed, was not original. The reporter was forced to go on a medical leave and the Star apologized for that incident.
While plagiarism should be condemned, it also should be noted that the tight dead lines and higher expectations in news biz from the reporters are part of reasons for it.
(sorry posting this in english.. no time to type it in tamil)
[4தங்கமணி
>இந்துவுக்கு 125வருட பாரம்பரியம் என்று இங்கு சில எழுத்தாளர்கள் குறிப்பிட்டு அதனால் அது நம்பத்தக்கது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
இந்தமாதிரி எண்ணத்தில் எதுவும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பத்திரிக்கை 125 வருடங்கள் நிலைத்திருப்பது அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்வதில் எந்த வியப்புமில்லையே.
ஒரு புறத்தில் 125 வருடங்களில் கற்ற பாடங்கள் அதற்குக் கைகொடுக்க வேண்டும். மறுபுறத்தில் நம்பகத்தன்மை இல்லையென்றால் அது இத்தனை வருடங்கள் நீடித்திருக்காது.
ஆனால் இதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடுகள்தான். இதேபோலத்தான் ஒருசில கருத்துகளில் அதன் பிடிவாதமான அபத்தநிலைப்பாட்டை முன்வைத்து அதில் வருவன எல்லாமே தவறு என்று சொல்வதும்.
நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போவது/ஏற்க முடியாதது வேறுவிடயம். இன்னொரு பத்திரிக்கையில் வருவதை உருவிப்போடுவது என்பது அதனுடன் ஒத்துப்போகிறவர்களுக்குக் கூட சீரணிக்க முடியாத விஷயமாக இருப்பதைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.
[5] தர்ஸன் – டொரண்டோ ஸ்டாரின் மீது எனக்கு எப்பொழுதுமே நல்ல மதிப்பீடு கிடையாது. (அதில் வரும் சில Op-Ed மிக அற்புதமாக இருக்கும் என்பதைத் தவிர).
திருட்டு வீசீடி, போலி மென்பொருள், திருட்டு எம்பிதிரி என நம்மவர்களின் வாழ்க்கை "மீடியோகிரிட்டி" ஆக இருக்கும் போது "மீடியாவை" குறை சொல்லி என்ன பயன்.
He says
My task was to write on cinema in The Hindu in a manner that befitted its editorial poise. This is what I have since been doing and there hasn’'t been a dull moment for me and hopefully for the reader.
I never thought that Hindu's editorial poise included verbatim copying and other tricks. The Hindu should
investigate this and sack him if he is proved to have
copied so, that too many times. This guy serves as
a jury in film festivals, oh my god.
[8]மீனாட்சி சுந்தரம் – இல்லை, விசிடி, மென்கலன், எம்பி3 போன்றவற்றுடன் இதை ஒப்பிட முடியாது. சாதாரணர்களால் திருடப்படும் (எடுத்தாளப்படும் என்றும் படிக்கலாம்) இவற்றுக்கும் ஒரு நிறுவனம் பிறருடைய உழைப்பில் வந்ததைத் திருடி மறுபதிப்பு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
உற்பத்திப்பொருளின் நியாயவிலைக்கு மேலதிகமாக (ஒன்றுக்குப் பத்தாக) வைத்து விற்கப்படுவதால்தான் எம்பி3 வடிவில் படியெடுக்கப்படுகிறது. இதேபோல மென்கலன் நிறுவனங்கள் அடாவடியாக விலைவைத்து விற்பதும் திருட்டுக்கு அடிகோலுகிறது. இவற்றிலெல்லாம் முட்டை முந்தியா கோழி முந்தியா என்ற தீர்க்கமுடியாத கேள்வி இருக்கிறது. மறுபக்கத்தில் பெரிய பத்திரிக்கை நிறுவனம் சுருட்டிப்போடுவது என்பது வேறுவகையைச் சேர்ந்தது. இதில் எடுப்பவரை நியாப்படுத்த எள்ளவும் சாத்தியமில்லை.
இது எனக்கும் நடந்திருக்கிறது. எனது ராமன் பாலம் பற்றிய ஒரு கட்டுரை அப்படியே இன்னொரு வலைத்தளத்தில் காப்பி+பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது-எனது பெயரே இல்லாமல்
.
எனது வலைபூவில்சுடப்பட்டது
Venkat,
saw a news item that Canadian PM – Paul Martin lost the Vote of confidence and elections will take place soon. Looking forward to your views on that.
- Alex
PS: Not only Goutaman – there have been many newbie reporters nowadays in Hindu who do it regularly. The Metro Plus section of Hindu is a proof of junk. Can you imagine – 2 days back Hindu had a quarter page Ad of a photo from http://www.triumph.com/
Venkat, how do you think Hindu could have caught this? Is there any software that will search numerous papers/web sites and find out if anything is copied?
[13] Balaji – This issue cannot be brushed off like this. While it may be impossible to dig blogs and find if the print media lifts, it is much easier to find if someone copied from NY Times. NYT is definitely not one of the numerous sites/papers.
And this is not an one-off incident. He has been proven to have done this more than once. The onus is on The Hindu to come clean by sacking this guy and issuing an unconditional apology. It is plain arrogance to assume that no one in India will read NYT reviews and more importantly it is the ignorance of the new media.
I may very well empathize with the editor if he says there was no way to have known this, but to earn this sympathy, he needs to own it and say sorry to his readers.
That I am sure an editor of N.Ram's stature would definitely do, and Gautaman Baskaran will be fired before he can open his mouth.
I am just wondering how an editorial team can catch plagiarism, especially when the source can be anywhere (print/web) and it takes a lot of effort to find out. I don't think there is any software out there that will do it (good startup idea?) Lifting sentences verbatim is childish; if he had lifted ideas and masked them with his own writings, that will be very difficult to catch. I guess it is not quite right to blame editors, as it ends up as them trusting the writer's integrity.
[15] bb, I faintly remember having read somewhere that someone developed a software that will take an essay as input and then do random pattern matches with available info in the net (of course, use Google at the background) and give a originality score. This was developed to catch students submitting fake term papers.
That said, these days I am inherently worried that some phrases get struck on my memory and I may reuse them involuntarily. Most of the students in teens have tendency to use phrases similar to their fav. teachers. (My friends told that my lecture style and mannerisms are very similar to my 12th Math teacher – whom I consider one of the most elegant speakers I have come across). This, I consider is a real possibility.
But I guess what we talk here is verbatim reproduction.
I seriously doubt that N.Ram will come with any public statement on this. He may silently fire GB.
there are few software out there to "determine" the plagarism. some of them have started to offer the 'services' to the universities in US.
Last yer, I think, in Connecticut, some politico or professor got into trouble for "writing a guest column" in NY Times.