• வேதிஆயுதங்களும் அமெரிக்காவும் – சாத்தான் ஓதும் வேதம்

    by  • November 20, 2005 • பொது • 7 Comments

    ஈராக்கின் மீது போர் தொடுக்கச் சென்ற பொழுது அமெரிக்கா உலகிற்குக் கூறியது – “சதாம் ஹுசேன் ஈராக்கியர்கள் மீது அணு ஆயுதங்களையோ வேதி-ஆயுதங்களையோ பயன்படுத்தக் கூடும். இந்தப் பேரழிவிலிருந்து ஈராக்கிய மக்களைக் காப்பதற்காகத்தான் நாம் அதன் மீது போர் தொடுக்கிறோம்”. சதாம் ஹுசேன் குவித்துவைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஆயுதங்களைத் தோண்டியெடுக்க என்று சொல்லிக் கொண்டு சென்ற அமெரிக்காவால் இன்றுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நிலைமை இப்பொழுது முற்றிலும் மாறாகத் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவே ஈராக்கியர்கள்மீது வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    இத்தாலியின் RAI TV தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவரணப்படம் அமெரிக்கர்கள் ஈராக்கில் வெண்பாஸ்பரஸ், நபாம் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெளிவாகச் செல்லுகிறது (எச்சரிக்கை: இந்த விவரணப்பட்டத்தில் போரின் கோரக் காட்சிகள் நிறைய இருக்கின்றன. தவிர்க்க வேண்டாம் என்று விரும்பினால் மாத்திரமே இந்தச் சுட்டியிலிருந்து பார்க்கவும்). இதற்கு எதிர்வினையாக முதலில் வேதிப்பொருட்கள் எதையுமே பயன்படுத்தவில்லை என்று Identifying Misinformation – Did the U.S. Use “Illegal” Weapons in Fallujah? என்ற தலைப்பில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. அதில் ஒரேயடியாக வேதிப்பொருட்களே பயன்படுத்தப்படவில்லை என்று சொன்ன அரசு சில நாட்களில் இப்படியொரு பின்னொட்டை அதனுடன் சேர்த்தது;


    [November 10, 2005 note: We have learned that some of the information we were provided in the above paragraph is incorrect. White phosphorous shells, which produce smoke, were used in Fallujah not for illumination but for screening purposes, i.e., obscuring troop movements and, according to an article, "The Fight for Fallujah," in the March-April 2005 issue of Field Artillery magazine, "as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes …." The article states that U.S. forces used white phosphorous rounds to flush out enemy fighters so that they could then be killed with high explosive rounds.]

    சாமர்த்தியமாக ஆட்களை அழிக்க வெண்பாஸ்பரஸைப் பயன்படுத்தவில்லை, ஆனால் அவர்களுக்கு அச்சமூட்டுவதற்காகவும் எங்கள் படைகளின் நகர்வைப் புகைமூலம் மறைக்கவுமே நாங்கள் வெண்பாஸ்பரஸைப் பயன்படுத்தினோம் என்று சொல்லியிருக்கிறது. திறமையாக மழுப்பப்படும் இந்த அயோக்கியத்தனத்தின் அடிநாதம் உலகளாவிய வேதி-ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தின்படி ஆட்களின்மீது ஆயுதமாக வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், புகையூட்டி ஆட்களை விரட்டவும், வெளிச்சம் போட்டு அடையாளம் காணவும் பயன்படுத்துவதைத் தடுப்பதில்லை. வேறு வழியில்லாமல் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் இப்படிப் பூசி மழுப்புகிறார்கள்.

    ஆனால் உண்மையில் கொல்லவும் காயம் விளைவித்துத் தாக்கவுமே வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக The Fight for Fallujah என்று தலைப்பிடப்பட்ட இராணுவ அறிக்கையில் ஒத்துக்கொண்டிருக்கிறது.

    b. White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE. We fired “shake and bake” missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.

    இதில் கடைசி வரியில் “at the insurgents” என்று சொல்லுவது நேரடியாக ஆட்களின்மீது வெண்பாஸ்பரஸ் பிரயோகம் செய்யப்பட்டது என்பதை இராணுவமே ஒத்துக்கொள்வதைக் காட்டுகிறது. எதிர்ப்பாளர்களைத் தவிர பொதுமக்கள் – குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகளும் இந்த வெண்பாஸ்பரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இத்தாலிய ஆவணம் படங்களுடன் காட்டுவதைக் காண அளவிலாத வேதனைதான் மிஞ்சுகிறது.

    * * *

    கேவலமான விஷயம். வேதிப்பொருட்களிலிருந்து இராக்கியர்களைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சென்ற அமெரிக்காவே இப்பொழுது வெண்பாஸ்பரஸ் (இன்னும் வியாட்நாம் போரில் பிரபலமான நாபாம்-கூடப் பிரயொகிப்பட்டதாகச் சொல்லுகிறார்கள்). வீசுகிறது. இந்தப் போரின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா உலகளாவி ஒத்துக்கொள்ளப்பட்ட எந்த போர் தர்மங்களையும் மீறி நடந்துகொள்கிறது என்று நான் எழுதியிருந்தேன். உதாரணமாக,

    போன்ற பழைய வலைப்பதிவுகள்.

    சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா முதலில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தும் என்று வேறு புஷ் சொல்லிவிட்டார்.

    * * *

    எல்லாவற்றுக்கும் மேலாக ஆச்சரியம் தரும் விஷயம் – இதைப் பற்றி அமெரிக்க ஊடங்கங்கள் பெருமளவில் கண்டுகொள்ளவேயில்லை. கருத்துச் சுதந்திரம், நேர்மை என்றெல்லாம் பேசித் தீர்க்கும் அமெரிக்கப் பத்திரிக்கைகள் எங்கே போயின என்று தெரியவில்லை. சில காலமாகவே நான் சொல்லிவரும் விஷயம் இது; பேரழிவை நோக்கிச் செல்லும் ஒரு கொடுங்கோல் அரசின் எல்லாவிதமான துர்க்குணங்களும் தற்பொழுதைய அமெர்க்க அரசாங்கத்திடம் தெளிவாகத் தெரிகின்றன. ஊடகங்கள் அரசின் குறைகளைப் பேச மறுப்பது அல்லது பயப்படுவது அல்லது அடக்கப்படுவது இவற்றுள் முக்கியமான ஒன்று.

    இத்தனையும் மீறி அமெரிக்க மக்கள் மீது எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது. இதை அடுத்த தேர்தல் தகர்த்தால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. அதுவே அமெர்க்கர்களுக்கு கடைசி சந்தர்ப்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    * * *

    ஆச்சரியம் குறைந்து வரும் விஷயம்; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் ராஜவிசுவாசத்தில் தலைமுறை அமெரிக்கார்களை மிஞ்சப் போட்டியிடுவதைப் பார்க்கிறேன். இதைப் பற்றி தமிழிலோ ஆங்கிலத்திலோ புலம்பெயர்ந்தவர்கள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை.

    7 Responses to வேதிஆயுதங்களும் அமெரிக்காவும் – சாத்தான் ஓதும் வேதம்

    1. November 20, 2005 at 11:43 pm

      offline.. உங்கள் சுட்டிகளில் 'http://thamizmanam.org/' க்கு தொடுப்பு இருக்கிறது. .காம் என்று இருக்க வேண்டும்?

    2. அழகப்பன்
      November 21, 2005 at 1:57 am

      //ஆச்சரியம் குறைந்து வரும் விஷயம்; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் ராஜவிசுவாசத்தில் தலைமுறை அமெரிக்கார்களை மிஞ்சப் போட்டியிடுவதைப் பார்க்கிறேன். இதைப் பற்றி தமிழிலோ ஆங்கிலத்திலோ புலம்பெயர்ந்தவர்கள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. //

      அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியாவில் உள்ள இந்தியர்கள் பலரும் இது குறித்து வாய் திறப்பதில்லை என்பதுதான் வருந்த வேண்டிய விதயமாகும். இப்படியே சென்றால் நாளை நமக்கும் இந்த நிலை வர வாய்ப்புள்ளது என்பதை உணர மறுக்கும் சிந்தனை அடிமைகளாகவே இவர்கள் உள்ளனர்.

    3. era.murukan
      November 21, 2005 at 2:00 am

      Venkat,

      A well written and timely entry. Two days ago, Jon Snow in Channel 4 did an incisive analysis of this. Shall write more on it over the weekend.

    4. November 21, 2005 at 8:57 am

      [1]பாலாஜி – நன்றி! விரைவில் திருத்துகிறேன்.

    5. November 21, 2005 at 9:24 am

      //ஆச்சரியம் குறைந்து வரும் விஷயம்; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் ராஜவிசுவாசத்தில் தலைமுறை அமெரிக்கார்களை மிஞ்சப் போட்டியிடுவதைப் பார்க்கிறேன். இதைப் பற்றி தமிழிலோ ஆங்கிலத்திலோ புலம்பெயர்ந்தவர்கள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை. //

      நீங்கள் சொல்வது முற்றிலும் கசப்பான உண்மை.
      பச்சை அட்டை , அமெரிக்க குடியுரிமை போன்ற விசயங்களில் அரசு எடுக்கும் முடிவுகளை அலசி காயப்போடும் நம்மவர்கள் இது போன்ற வியசயங்களில் ஆர்வம் காட்டுவது இல்லை.
      ஏதோ என்னால் முடிந்தது :-)
      ஜார்ஜ் புஷ்சுக்கு எதிரான போராட்டத்தில் நான்
      http://kalvetu.blogspot.com/2005/09/05.html…

    6. November 22, 2005 at 12:36 am

      இப்படிப்பட்ட ஆயுதங்களை 'அவர்கள்' மீது உபயோகிப்பது தவறில்லை என்று மக்களை நம்பவைக்கும் கதைகள் திரும்பத் திரும்ப சொல்லப்படும் (ஏற்கனவே சொல்ல ஆரம்பித்திருக்கலாம்).

      இதுபற்றி மேம்போக்காக கொஞ்சம் எழுதியிருந்தேன்.http://nradhak.blogspot.com/2005/11/blog-post.html விபரமான உங்கள் பதிவிற்கு நன்றி!

    7. November 22, 2005 at 1:19 pm

      [2][3] அழகப்பன், இரா.முருகன் – நேற்றே எழுத விட்டுப்போய்விட்டது. நன்றிகள்.

      [5] கல்வெட்டு – நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். அவர்களுக்கு (கொள்கை ரீதியாக) பிடித்திருக்கிறதோ இல்லையோ நாலு பேர் செய்யும் பொதுக்காரியங்களில் நம்மைப் போன்ற வந்தேறிகளும் கலந்துகொள்வதை இவர்கள் விரும்பவே செய்கிறார்கள். அவர்களுடன் ஒன்றிப் போவதாக இது அடையாளம் காணப்படுகிறது.

      [6] இராதா – உங்கள் பதிவை முன்பு படித்திருக்கவில்லை. மன்னிக்கவும். சுடச்சுட அப்பொழுதே எழுதியிருக்கிறீர்கள். அப்பொழுது நான் பயணத்தில் இருந்தேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *