• வலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்

    by  • June 22, 2005 • பொது • 24 Comments

    டொராண்டோவில் சமீபத்தில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புப் பட்டறையின் பொழுது வலைப்பதிவுகளைப் பற்றி அறிந்திராதவர்களுக்காகத் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகமாக இருபது நிமிடங்களுக்குப் பேசினேன். அப்பொழுது நான் பயன்படுத்திய ஓப்பன் ஆபீஸ் குறிப்புக்காட்டிகளை இங்கே வலையேற்றியிருக்கிறேன். (சென்றமுறை பிடிஎஃப் கோப்பாகப் போட்டதில் சிலருக்குப் படிக்கமுடியவில்லை எனவே மீயுரைக் கோப்பாகப் போட்டிருக்கிறேன்).

    http://www.domesticatedonion.net/venkat/blog_intro/blog_intro.html

    பலத்த வேலை நெருக்கடிக்களுக்கிடையில் அவ்வப்பொழுது கிடைத்த சில நிமிட இடைவெளிகளில் தயாரித்தது, எனவே சில விஷயங்கள் விட்டுப்போயிருக்கலாம். (பேசுவதற்கு முன்பு ஒருசில விடுதல்களைச் சுட்டிக்காட்டிய மதிக்கு நன்றிகள்). இதையே இன்னும் ஒரு குழுவில் பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். எனவே பிழைகள், விடுதல்களைச் சுட்டிக்காட்டினீர்களானால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

    வேறு யாருக்காவது இதுபோன்ற அறிமுக தர இந்த ஓப்பன் ஆபீஸ் குறிப்புகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். வேண்டுபவர்கள் எனக்கு எழுதவும்.

    24 Responses to வலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்

    1. karthikramas
      June 22, 2005 at 3:57 pm

      வெங்கட் ,
      கண்ணில் பட்ட இரண்டு.
      1. உங்கள் பதிவைக் குறிப்பிடும்போது வலைக்குறிப்பு என்றும் மற்ற எல்லா இடங்களிலும் வலைப்பதிவு என்றும் தலைப்புகளில் காணப்படுகிறது.

      2. ப்ளாக்கர்.கொம் -ஐ ஒரு படம் போட்டு பரிந்துரைத்திருக்கலாம். "எங்கே தொடங்கலாம்" போன்றதொரு சம்பந்தபட்ட இடத்தில்.
      இலவ்சசேவை, மற்றும் 90 சதவீத வலைப்பதிவுகள் ப்ளாக்கரில் இயங்குவன போன்ற காரணங்களுக்காக.

      3. இசை ,இலக்கியம் என்று சொல்லி மிகச்சில பதிவுகள் காண்பித்தால் போதும். நீட்டியுள்ளதாகப் படுகிறது. குறைக்கலாம் எளைமை கருதி.

      4. காசி சொன்னது போல், தமிழ்மண மன்ரத்தை கொஞ்சம் விவரணை செய்ய்லாம்.

      5. பின்னூட்டம் எப்படி இருக்கும், பதிவு எப்படி தமிழ் மணத்தில் தெரியும் என்பதற்கு வேண்டுமெனில் படங்கள் கட்டலாம். (படம் காட்டலாம் :-) )

    2. June 22, 2005 at 4:36 pm

      [1] கார்த்திக, நன்றி

      1. நீண்ட நாட்களாக வலைக்குறிப்பு என்ற பதத்தைப் பயன்படுத்தியதாலும், இன்னும் அதுதான் நுட்பமாகச் சரி என்று மனப்பூர்வமாக நம்புவதாலும் அது அடிக்கடி கிளைத்தெழுகிறது. காசி சொன்னாரே என்றுதான் மாறிக்கொண்டிருக்கிறேன்.

      2- நேரமில்லாததுதான் காரணம் (தயாரிக்க). கூடவே நான் பிளாகரைப் பயன்படுத்துவதில்லை என்பதால் எனக்கே அது எப்படியிருக்கும் என்று தெரியாது :)

      3. இவ்வளவு படம் இருந்தாலும் அதில் மற்ற ஸ்லைட்களுக்குச் செலவழித்ததுபோல் நேரம் செலவழிக்கவில்லை. சும்மா படம்காட்டி விரைவாக ஓட்டிவிட்டேன். – இது வேண்டுமென்றே செய்தது – ஒரு பிரமிப்பு வருவதற்காக. "ஆகா எல்லாத்தையும் பத்தி எழுதுறாங்களே", அல்லது "ஆகா, எதைப்பத்தி வேணும்னாலும் நாமளும் எழுதலாம்" – என்ற உணர்வை உண்டாக்க.

      4. தமிழ்மணம் முகப்புப் படம் போட்டிருந்தேன். இரண்டு ஸ்லைடுகள்தானிருந்ந்தாலும் அவற்றில் நிறைய நேரம் நின்று பேசினேன்.

      5. பின்னூட்டம் படம் காட்டவில்லைதான். இது சேர்த்திருக்க வேண்டியது.

      இன்னும் எனக்குப் பேச எவ்வளவு நேரம் தரப்போகிறார்கள் என்றே தெரியாத நிலையில் தயாரித்தது. எனக்குத் தெரிந்து குறைந்தது ஆறேழு பேராவது வந்து இந்த வலைப்பதிவு சுவாரசியமாக இருக்கிறது நாங்க கட்டாயம் படிப்போம் என்று சொல்லிவிட்டுப்போனார்கள்.

    3. June 22, 2005 at 4:45 pm

      வெங்கட்,

      நான் அதிகமாகவொன்றும் மாற்றவில்லையே. :(

      முதன்முதலில் வலைப்பதிவு தொடங்கியவர்கள் என்று பட்டியலிட்டதில் பத்ரி, மாலன், அருணா ஸ்ரீநிவாசன், நா.கண்ணன் ஆகியோரோடு முதலில் தொடங்கியவர்கள் என்று நான் நினைத்தவர்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னேன். ரமணிதரனின் பெயரோடு என் பெயரையும்(ரொம்ப முக்கியம்! ;) ). [இத்ற்கே ஒரு பின்னூட்டம் கிடைத்தது - என்ன பிராமணர்கள் பெயர்கள் மட்டும் இருக்கின்றன என்று. சுரதா, பரி, மீனாக்ஸ் ஆகியோரின் பெயர்கள் இல்லையே. என்பது. சுரதாவைப் பற்றிச் சொல்லாதது பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட பின்னூட்டம் கிடைத்தது வெங்கட்.]

      தமிழ்மணம் பற்றிச் சொல்லும்போது அங்கே காசியின் பெயரையும் இடும்படி சொன்னது. அவ்வளவுதான். பிறகு பின்னூட்டங்கள் கிடைத்தபிறகுதான் அடடா பாமினி தட்டச்சுமுறை பற்றிச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

      -மதி

    4. June 22, 2005 at 4:48 pm

      ¦Åí¸ð,

      «ý¨ÈìÌ ¿£í¸û §Àº¢ÂÀ¢ÈÌ ±ÉìÌì ¸¢¨¼ò¾ À¢ýëð¼í¸Ç¢ýÀÊ

      1. ¦¾¡Æ¢øÑðÀ Å¢¾Âí¸û «¾¢¸Á¡¸ þÕó¾Ð §À¡ÃÊò¾Ð ±ýÚ ¦º¡ýÉ¡÷¸û. «¾É¡§Ä§Â ¾¡í¸û ±ØóÐ ¦ºýÚŢ𼾡¸î ¦º¡ýÉ¡÷¸û.

      2. ô¦Ç¡ì¸÷ þÄźõ ±ýÀ¾¡ø¾¡ý ÀÄÕõ ¦ºöÂÄ¡õ ±ýÚ §Â¡º¢ì¸¢È¡÷¸Ç¡õ. ô¦Ç¡ì¸¨Ã ¨ÅòÐî ¦º¡øÖõÀÊ ¦º¡ýÉ¡÷¸û.

      3. À¡Á¢É¢ ±ØòÐÕ ÀÂýÀÎòÐÀÅ÷¸û þÕìÌõ þ¼ò¾¢ø «ÐÌÈ¢ò¾ Å¢ÅÃí¸û þø¨Ä¦ÂýÚ ¦º¡ýÉ¡÷¸û.

      4. ¾Á¢úÁ½õ ÀüÈ¢ ´ü¨È Åâ¢ø ¦º¡øÄ¢î ¦ºøÄ¡Áø ¦¸¡ïºõ Ţâš¸î ¦º¡øÄ¢Â¢Õì¸Ä¡õ ±ýÀÐ×õ ´Õ À¢ýëð¼õ.

      ¯í¸Ç¢ý «Îò¾ §Àø þ¨¾ì ¦¸¡ïºõ ¸ÅÉ¢Ôí¸û ¦Åí¸ð.

      «ý¨ÈìÌ ¸¢§…¸ñ½É¢¼Óõ ŨÄôÀ¾¢×¸û ÌÈ¢ò¾ §ÀîÍ ´ý¨Èò ¾Â¡Ã¢ìÌÁ¡Ú §¸ðÊÕ츢§Èý. §Á¨¼¸Ç¢ø §Àº¢ôÀÆì¸õ þÕìÌõ «Å¨ÃÔõ ºó¾÷ôÀõ ¸¢¨¼ìÌõ§À¡Ð Üð¼í¸Ç¢ø §ÀÍí¸û ±ýÚ §¸ðÊÕ츢§Èý. À¡÷ô§À¡õ.

      þôÀÊ¡ÅÐ ¦¼¡Ã¡ñ§¼¡Å¢Ä¢ÕóÐ ¸½¢ºÁ¡ÉÅ÷¸û ŨÄÀ¾¢Å¡÷¸û ±ýÚ ¿¢¨É츢§Èý.

      -Á¾¢

    5. June 22, 2005 at 4:49 pm

      in unicode

      வெங்கட்,

      அன்றைக்கு நீங்கள் பேசியபிறகு எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களின்படி

      1. தொழில்நுட்ப விதயங்கள் அதிகமாக இருந்தது போரடித்தது என்று சொன்னார்கள். அதனாலேயே தாங்கள் எழுந்து சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்.

      2. ப்ளக்கர் இலவசம் என்பதால்தான் பலரும் செய்யலாம் என்று யோசிக்கிறார்களாம். ப்ளக்கரை வைத்துச் சொல்லும்படி சொன்னார்கள்.

      3. பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தில் அதுகுறித்த விவரங்கள் இல்லையென்று சொன்னார்கள்.

      4. தமிழ்மணம் பற்றி ஒற்றை வரியில் சொல்லிச் செல்லாமல் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பதுவும் ஒரு பின்னூட்டம்.

      உங்களின் அடுத்த பேச்சில் இதைக் கொஞ்சம் கவனியுங்கள் வெங்கட்.

      அன்றைக்கு கிஸேகண்ணனிடமும் வலைப்பதிவுகள் குறித்த பேச்சு ஒன்றைத் தயாரிக்குமாறு கேட்டிருக்கிறேன். மேடைகளில் பேசிப்பழக்கம் இருக்கும் அவரையும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டங்களில் பேசுங்கள் என்று கேட்டிருக்கிறேன். பார்ப்போம்.

      இப்படியாவது டொராண்டோவிலிருந்து கணிசமானவர்கள் வலைபதிவார்கள் என்று நினைக்கிறேன்.

      -மதி

    6. June 22, 2005 at 9:35 pm

      புதுப்பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள அனைத்தையும் தொகுத்து படைத்த உங்களின் செயல் பாராட்டத் தகுந்தது.

    7. June 22, 2005 at 10:24 pm

      [3] மதி -
      பத்ரி, மாலன், அருணா ஸ்ரீநிவாசன், நா.கண்ணன் ஆகியோரோடு முதலில் தொடங்கியவர்கள் என்று நான் நினைத்தவர்கள் பெயரைச் சேர்க்கச் சொன்னேன். ரமணிதரனின் பெயரோடு…

      எனக்கு நினைவிருந்தவரை முதல் ஐந்துபேரை (இது நவனில் துவக்கம்) எழுதியிருந்தேன். நீங்கள் சொன்னவுடன் பிற பெயர்களையும் இணைத்தேன்.

      >[இத்ற்கே ஒரு பின்னூட்டம் கிடைத்தது - என்ன பிராமணர்கள் பெயர்கள் மட்டும் இருக்கின்றன என்று. சுரதா, பரி, மீனாக்ஸ் ஆகியோரின் பெயர்கள் இல்லையே. என்பது.

      எனக்கு அழுகையே வருகிறது. சத்தியமாக இந்த ஒரு கோணத்தில் இது பார்க்கப்படும் என்று இந்த நொடிவரை நான் நம்பவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ்ப்பதிவு எழுதியது முதலில் நவன், பின் பத்ரி, அருணா, மாலன், பின் நான் என்றுதான் நினைத்திருக்கிறேன். பரி, மீனாக்ஸ் எல்லோரும் அப்புறம் வந்தவர்கள்தான்.

      >சுரதாவைப் பற்றிச் சொல்லாதது பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட பின்னூட்டம் கிடைத்தது வெங்கட்.]

      சுரதா வலைப்பதிவுக்குக் கொஞ்சம் நாட்களுக்குப் பிறகுதான் வந்தார் என்றும் நினைவு. (பரி, மீனாக்ஸ்க்குப் பிறகு).

      பிராமணர்கள் என்று கண்டுபிடித்துச் சொன்னவரின் காலில் நான் விழுகிறேன். அவர் நவனுடைய கோத்திரத்தையும் விசாரித்துவிட்டாரா? இன்றுவரை நான் இதற்கு இப்படியொரு கோணம் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிலருக்கு சாதி அந்த அளவுக்கு ஆழமாகத் தேவையாக இருக்கிறதுபோல. :(

    8. June 22, 2005 at 10:26 pm

      [4]
      தொடர்ந்து…

      இது எழுத்துரு, தமிழில் எழுதுவது இதெல்லாம் பற்றியில்லை என்பதால் பாமினி விஷயத்திற்கெல்லாம் போகவில்லை. இதே காரணத்திற்காகத்தான் பொங்குதமிழ் என்றெல்லாம் விலகவில்லை. பேசப்போவது பத்து நிமிடமா, இருபது நிமிடமா என்று தெரியாத நிலையில் ஏகலப்பை, முரசு, என்றெல்லாம் எப்படி…?

      தமிழ்மணத்தை முன்னிருத்தியே முழு உரையையும் வடிவமைக்கலாமா என்று யோசித்தேன், அப்புறம் இது தமிழ்ப்பதிவுகள் பற்றி, தமிழ்மணத்தைப் பற்றியல்ல என்றுதான் மாற்றினேன். உங்களிடம் கொடுத்து சரிபார்க்கச் சொன்னபோது் கொஞ்சம் சொல்லியிருந்தால் நான் கட்டாயம் மாற்றியிருப்பேன். ரமணி கூட நீண்ட தயக்கத்திற்குப் பிறகுதான் வந்தார் என்று நினைவு. ஆனால் அப்பொழுது அலைபாய்ந்துகொண்டிருந்த மனநிலையில் நீங்கள் சொன்னவுடன் அவரையும் சேர்த்தேன்.

      உங்களிடம் பிராமணர்கள், சுரதா விடுபட்டது என்று சொன்னவர்களுக்குத் தயவு செய்து என்னுடைய உரையை நான் எப்படி வடிவமைத்திருந்தேன் என்று தெரியப்படுத்துங்கள்.

    9. June 22, 2005 at 10:29 pm

      அப்புற்ம் இன்னொரு விஷயம் – நான் பிளாக்ரைப்பற்றியோ, நியூக்ளியஸ் சிஎமெஸ் பற்றியோ மூவபிள்டைப் பற்றியோ பேசுவதாக உத்தேசமே இல்லை. அது வலைப்பதிவுகளைக் கொஞ்சம் நாட்கள் படித்துவிட்டு, பின் பின்னூட்டங்கள் எழுதிவிட்டு வருபவ்ர்களுக்கு என்னுடைய அறிமுகம் இதைப்பற்றிக் கேள்விப்படாதவர்களுக்கு.

      ஏற்கனவே தொழில்நுட்பம் அதிகம் என்று சொல்கிறீர்கள், இதில் முதன் முதலில் கேள்விப்படுபவர்களுக்கு பிளாகர் எல்லாம் தேவையா?

    10. காசி
      June 22, 2005 at 10:58 pm

      வெங்கட்,

      அவசரமாகப் பார்த்ததில். சில குறிப்புகள்:
      - கோர்வை வரிசை சரியாக இருக்கிறது.
      - 'பின் தொடர்பு' பற்றிய விவரங்கள் இந்த அறிமுக நிலையில் தேவையில்லை
      - உதாரணமாகக் காட்டப்பட்டவற்றில் அறுசுவை.காம் ஒரு வலைத்தளம், அதன் இணையான வலைப்பதிவைக் காட்டலாம்.
      - 'வலைப்பதிவுகளின் சிறப்புகள்' இன்னும் எளிமைப்படுத்தலாம்.
      - 'எங்கிருந்து தொடங்கலாம்' என்பதில் ப்ளாக்கர்.காம்-ஐ சுட்டலாம்.

      மற்றபடி இது ஆர்வமுள்ளவர்களால் மேம்படுத்த ஒரு அடிப்படை அமைத்துக்கொடுத்திருக்கிறது. பாராட்டுக்கள்.

      அன்புடன்,
      -காசி

    11. தர்சன்
      June 22, 2005 at 11:19 pm

      வெங்கட் போன்ற சாதியாத்தில் நம்பிக்கயில்லாதவர் என்ன செய்தாலும் அதற்கு எப்படியாவது சாதிச் சாயம் பூசிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பலர் அலைகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இவர்களின் இந்தக் குறுகிய சாதியக் கண்ணோடங்கள் விசனத்தை தருகிறது. பாவம் வெங்கட். அவர் வாழ் நாள் முழுக்க தான் பிரணமச்சாதியில் பிறந்ததால் எமது "முற்போக்காளார்கள்" முன்வைக்கும் வசைகளைத் தாங்கிக்கொண்டு வழவேண்டிய காட்டயம். அடக்கு முறைகளில் அவருக்கு நம்பிக்கையில்லவிட்டல் எமக்கே என்ன. பொது நீதி நியாங்களில் அவருக்கு நம்பிக்கையிருந்தால் நமக்கென்ன. எமக்கு தெரிவதெல்லாம் அவரே அறியாமல் அவர் பிறந்த சாதி. அவர் என்ன செய்தாலும் அவரின் செயல்களும் படைப்புகளும் இந்த சாதிய அளவுகோலாலேய அழக்கப்படும். அதை வெங்கட் விரும்பாவிட்டால் எமக்கென்ன. நாங்கள் "முற்போக்குவாதிகள்".

      -தர்சன்

    12. June 22, 2005 at 11:42 pm

      வெங்கட்: நல்ல தொடக்கம். இந்த ஓப்பன் ஆஃபீஸ் கோப்பை எனக்குக் கொடுக்க முடியுமா? இதில் சில மாற்றங்கள் செய்து, என் தேவைக்கேற்பப் பயன்படுத்த அனுமதியும் தரவேண்டுகிறேன்.

      Creative Common Licence மூலம் இந்தக் கோப்பை விநியோகிக்கலாம் என்று நினைக்கிறேன்?

    13. Ramanitharan Kandiah.
      June 22, 2005 at 11:44 pm

      ஐயா அம்மா, என் தலையும் உருளுகிறதா?
      யார் எப்போது வந்தார்கள் என்று தெரியாது. ஆனால், நான் மாலனைப் பார்த்துத்தான் பதிவிட வந்தேன். பத்ரி அதற்கு முதலே வைத்திருந்தார் என்பதும் நா. கண்ணன் நான் ஆரம்பிக்க சில நாட்களோ வாரங்களோ முன்னரோ பதிவிடத் தொடங்கினார் என்றும் ஞாபகம். நவன் பற்றி காசி சொல்லியே அறிந்தேன். அருணா சீனிவாசன் முன்னமே எழுதுகிறார் என்பது வலைப்பூவில் அறிந்து கொண்டேன். நான் ஆரம்பித்தது, 2003 மே, 14
      http://agingwanderer.blogspot.com/2003/05/this-tamil-blog-is-in-unicode.html…
      http://agingwanderer.blogspot.com/2003/05/blog-post.html…

      ஆனால், எங்கே தொடங்கினோம் என்பது முக்கியமா, என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது முக்கியமா? நாளுக்கு இரண்டு படங்களை ஏற்றிக்கொண்டிருக்கின்றதாகவும் நாலு போகிற போக்கிலே பகிடியாகப் பின்னூட்டுவதாகவும் சுருங்கிப்போன வலைவாழ்விலே, தொடங்கின நாளை வைத்துக்கொண்டு இத்தனையாவது ஆளாக நான் வலைப்பதிவினைத் தொடங்கினேன், வலைப்பதிவென்ற பெயரைச் சூட்டினேன் என்று சுட்டி என்னத்தை நான் சொல்ல முடியும்? இதையெல்லாம் பெரிதாகக் கொள்வதிலே அர்த்தமில்லை. வலைபதிதலை எல்லோரிடமும் கொண்டு செல்வதுதான் முக்கியமென்று படுகின்றது

      இதற்கும் சாதியைக் கண்டுகொண்டால், என்ன சொல்வதென்று தெரியவில்லை. சொல்லப்பட்டவருக்காக வருந்துவதா சொன்னவருக்காகப் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

    14. June 23, 2005 at 6:19 am

      [10] காசி – மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. பின் தொடர்தலை எடுத்துவிடலாம். அதற்குப் பதிலாக ஒருவர் வலைபதிவில் எழுதியதை இன்னொருவர் வேறிடத்தில் தொடர்ந்தாலும் எளிதில் இணைப்பு கிடைக்கும் – என்று ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போகலாம். இதுதான் எனக்கு நேற்று திரும்ப பார்த்தவுடன் தோன்றியது.

      இதில் இரண்டு விஷயங்களுக்கு இடையில் அல்லாட வேண்டியிருக்கிறது. 1. புரிதலுக்கான எளிமை, 2. விஷயத்தில் முழுமை. சில சமயங்களில் சொல்லவந்த விஷயம் முழுமையடைய வேண்டும் என்ற perfectionist பார்வை சோகப்படுத்திவிடுகிறது.

      எனக்கென்னமோ "முழு வெளியாளர்களுக்கு" எங்கிருந்து துவங்கலாம் என்பதற்கு முதலில் வலைப்பதிவுகளைப் படியுங்கள், பின்னூட்டமிடுங்கள் என்றுதான் சொல்லவேண்டுமென்று தோன்றுகிறது.

    15. June 23, 2005 at 6:21 am

      [11] தர்சன் – தங்கள் கரிசனத்திற்கு என் நன்றிகள். நேற்று பலமுறை நான் ஏன் இந்த ஐந்தாறு பேர்களைச் சொல்லும்பொழுது கவனமாக இருக்கவில்லை. என்னை இப்படியும் அவதானிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றவில்லையே என்று நொந்துகொண்டேன்.

    16. June 23, 2005 at 6:23 am

      [12] பத்ரி – தருகிறேன். இதைப் பலரும் மேம்படுத்தி – இரண்டு மூன்று நிலைகளில் இதேபோல (அதாவது விஷயம் தெரியாதவர்கள், ஓரளவுக்கு விஷயஞானமுள்ளவர்கள் – கல்லூரி மாணவர்கள்,…) ரீதியில் இரண்டு மூன்று பேச்சுகளைத் தயார் செய்துகொண்டால் யார் எப்பொழுது கூப்பிட்டாலும் யாராலும் பேசமுடியும்.

    17. June 23, 2005 at 6:37 am

      [13] ரமணி. இடையில் உங்கள் பேர் வந்தது தற்செயல்தான். மன்னிக்கவும்.

      - இந்த பெயர் சொல்லல் எல்லாம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் ப்ளாக் என்றால் என்ன, அது எப்படி ஆரம்பித்தது எப்படித் தமிழுக்கு வந்தது என்று சொல்லித் துவங்குவது சுவாரசியத்தைக் கொடுக்கும் என்று நினைத்தேன். அப்படித்தான் முதல் ஐந்து வலைப்பதிவுகளைப் பற்றி போகிற போக்கில் பெயர்களை எழுதினேன்.

      எழுதுவதற்கு முன்னால் விக்கிப்பீடியாவில் ப்ளாக் பற்றி அறிமுகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படித்தேன். அவர்களும் இப்படித்தான் துவங்கியிருந்தார்கள்.

      உங்கள் முதல்பதிவின் சுட்டிக்கு நன்றி! சிலபேருடைய முதல்பதிவுகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, பத்ரி, நவன், அருணா, மாலன் இவர்கள் முதல் பதிவுகள் எவையுமே கிடைக்கவில்லை. ஏன், என்னுடையதே ஆரம்பத்தில் b2, cafelog போன்றவற்றில் எழுதியவை, பின் மூவபிள்டைப்பில் தஸ்கியில் எழுதியவை எதுவுமே என்னிடமில்லை.

      மற்றபடி நாலுவரி பகிடிப்பின்னூட்டம், ஒற்றைப்படம், ஒருவரிச் சுட்டு – எல்லாமே ப்ளாகின் வரையறைக்குள் வருபவைதானே!

    18. June 23, 2005 at 9:17 am

      இந்தப் பெயர்ப்பிரச்சனை ஒரு பெரிய வி்ஷயமே இல்லை! என்னிடம் இது பற்றிப் பேசியவர்களிடமும் குலம் கோத்திரம் பற்றிப் பேசியவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தேன்.

      என்ன ஒன்று! சொன்னவர்களின் பலரை எனக்குத் தெரியாது. அதுதான் என்னையும் அவர்களையும் சுதந்திரமாகப் பேசவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

      contd.

    19. June 23, 2005 at 9:18 am

      மற்றும்படிக்கு:
      பாமினி எழுத்துருமுறை அல்லது தமிழ்தட்டச்சு பற்றிப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். பலரும் என்னிடம் கேட்டது பற்றித்தான். அங்கே நின்ற ஒரு வாரத்தில் இந்தக் கேள்விகளைத்தான் அதிகம் கேட்டார்கள்.

      வெங்கட், நீங்கள் சொன்னமாதிரி வெவ்வேறு விதமான உரைகளைத் தயார் செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

      வெள்ளிக்கிழமை, அவசரவசரமாக நீங்கள் கொடுத்த தாள்களைப் புரட்டியபோது மனதில் வலைப்பதிவுகள் பற்றிய எண்ணங்களே இல்லை! அது உண்மை. நீங்களும் ஆற அமர இந்த உரையைத் தயார் செய்யவில்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டீர்கள்.

      குறுவட்டுக்கான விதயங்களையும் எப்படி கடைசி நிமிடத்தில் சேர்த்தீர்கள் என்று தெரியும். தான்யாவும் இரவிரவாக குறுவட்டு தயார் செய்யக் கொடுத்திருந்த கடைக்குச் சென்றபடி இருந்தார். கடைசியில் உங்கள் உரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்புதானே கொண்டு வந்தார்கள். அவசரவசரமாகச் செய்திருந்தாலும், இம்மட்டாவது முடிந்ததே என்று சந்தோ்ஷமாக இருந்தது. தனிப்பட்ட சந்திப்புகளிலும் குறுவட்டைக் கொடுக்க முடிந்தது. பார்க்கலாம்.

      குறுவட்டு வாங்கிய, விசாரித்த பலரிடம் தமிழ்மணம் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். மு.நித்தியானந்தன் போன்றவர்களிடம் காத்திரமான பதிவுகள் என்று நான் கருதும் பதிவுகளைப் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அவ்வலைப்பதிவுகளின் வீச்சு அவரைப் பிரமிக்க வைத்ததாகப் பிறகு சொன்னார். இலண்டனில் இருந்தும் வலைப்பதிவுகளை படிக்கிறார். தாமே, குறுவட்டுகளையும் அவருக்குத் தெரிந்தவர்களிடம் கொடுக்கவென்று வாங்கிச் சென்றார். டாக்டர் ஸ்ர்தரனும் அப்படியே. இப்படிப் பரவினால் சந்தோ்ஷம் இல்லையா?

      எப்படியோ டொராண்டோவில் தமிழ்வலைப்பதிவுகளின் தாக்கம் கணிசமானதாகவே இருக்கிறது. ஆனால், அதற்கேற்றபடி மக்கள் வலைபதிய வரவில்லை. அதற்கு ஒரு வழி செய்தாகவேண்டும்.

      தர்சன், சொல்லுறது கேக்குதா? ;)

      -மதி

    20. June 23, 2005 at 12:20 pm

      வெங்கட்,

      இந்த ஓபன் ஆபீஸ் அளிக்கையின் மூலக்கோப்பினை எங்கேயாவது தரவிறக்கிக்கொள்ளலாமா?
      முகவரி தரவும்.

      மின்னஞ்சல்- mmauran@gmail.com

    21. June 23, 2005 at 6:22 pm

      பலருக்கும் தெரியப்படுத்த இப்படவில்லைகள் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் விநியோகித்திருந்த குறுந்தகட்டுக் கோப்புகளுடன் இதனையும் சேர்க்கலாம்.

    22. June 23, 2005 at 7:12 pm

      மதி என்னிடம் இது பற்றி கதைத்திருந்தார்.

      இங்கு தமிழில் வலைப்பதிவிடுபவர்களில் சிலரே வெங்கட் அமைத்துள்ள சுய பதிவுகளை வைத்திருக்கின்றார்கள். பிளாகரைப் பயன்படுத்துவோரே அதிகம் என்பது எனது தாழ்மையான அவதானிப்பு.

      எனவே பிளாகரை அடிப்படையாக வைத்தே presentation செய்யப்படவேண்டும். இல்லாவிடின், இந்த presentation ஐ நீங்கள் செய்வதற்கான நோக்கத்தினை அடைவது கடினமாய்ப் போய்விடும்.

      ஒரு வலைக்குறிப்பின் அமைப்பு
      பின் தொடர்தல்
      ஆகியவற்றைப் பார்க்க பயம் வருகின்றது. கொஞ்சம் எளிதான படங்களைப் போட்டால் என்ன. பின் தொடர்தல் வசதி ஒரு புது வலைப்பதிவாளாருக்கு கட்டாயம் தேவையென்றில்லை என்றும் நான் எண்ணுகின்றேன்.

    23. karthikramas
      June 29, 2005 at 11:35 am

      வெங்ககட்,
      நானும் என் சார்புக்கு நான் எப்போ வலைப்பதிவு தொடங்கினேன் என்று குறித்து வைக்கிறேன்.
      http://karthikramas.blogdrive.com/archive/21.html…
      இது ரமணிக்கு போட்டியாக அல்ல. ;-) [நான் கூட சீனியர்தான் போல இருக்கே]

    24. July 13, 2007 at 10:37 pm

      Venkat,

      http://www.domesticatedonion.net/venkat/blog_intro/blog_intro.html

      மேலே சுட்டியில் குறிப்பிட்டுள்ள கோப்பு இப்போது உங்கள் செர்வரில் இருக்கிறதா??. இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??. வலைப்பதிவர் பட்டறைக்கு உதவுமா என்று பார்க்க நினைக்கிறேன் :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *