• ராஜா வருகிறார்! பராக்.. பராக்…

    by  • May 22, 2005 • இசை • 52 Comments

    இடையில் கொஞ்சம் நாட்களாக விட்டுப் போன என்னுடைய இசைத்தெரிவு குறிப்புகளை மீண்டும் துவக்குகிறேன். (பிரகாஷ் ராஜா பாட்டோட திரும்ப வா-ன்னு சொன்னீங்கள்ள, ஒன்னுக்கு ரெண்டா. ரோஸா வஸந்தைத் திரும்ப வரவழைக்கவும்தான்).

    1976 ஆம் ஆண்டு இந்தியத் திரையிசையுலகத்தில் ஒரு முக்கியமான வருடம். இளையாராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானது அந்த வருடம்தான் (ஆங்… இங்க இன்னும் என்னென்ன கேட்டுக்கேட்டுப் புளிச்சுப்போன பழைய புராணத்தை வேணும்னாலும் போட்டுகங்க)…பலருக்கும் அன்னக்கிளி பாடல்கள் தெரிந்திருக்கும். அதற்கு அடுத்தபடம்?

    பாடல்: நான் பேச வந்தேன்..

    படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)

    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

    இசை: இளையராஜா

    பாடல்: வாலி

    அன்னக்கிளியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. பி.மாதவன் இயக்கத்தில் விஜயகுமார், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த படம். பி.மாதவனின் முந்தைய படங்களுக்கு ஜி.கே வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். இவரிடம் இளையராஜா உதவியாளராக இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பழகத்தில் அன்னக்கிளி வெளியாவதற்கு முன்பே இளையராஜாவை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். வெளிவந்த சூட்டிலேயே டப்பாவில் போய்ப் படுத்துக்கொண்டது. ஆனால் இந்தப் படம் தமிழ்த் திரையுலகத்தைப் பல வருடங்களுக்குத் தங்கள் திறமையால் கட்டிப்போடப்போகின்ற ஒரு புது கூட்டணி உருவானது. “பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி; இசை: இளையராஜா”

    என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இது. எனக்குப் பொதுவில் ஜானகி (உட்பட பல உச்சப் பெண்குரல்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் லதா மங்கேஷ்கருக்கு, அப்புறம் ஜானகி, இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி,…) அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் இந்தப் பாடலில் ஜானகி ரொம்பவே அடக்கி வாசித்திருப்பார். அற்புதமான துவக்கம், இனிமையான கிட்டார் பின்னணி, இழையும் எஸ்.பி.பி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது.

    பாடல்: ஒருநாள்… உன்னோடு ஒருநாள்

    படம்: உறவாடும் நெஞ்சம் (1976)

    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

    இசை: இளையராஜா

    பாடல்: பஞ்சு அருணாச்சலம்.

    பா.வ.கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே…) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.

    முதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.

    ஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார்? நிமிர்ந்து நின்றார். படம் – பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.

    52 Responses to ராஜா வருகிறார்! பராக்.. பராக்…

    1. May 22, 2005 at 1:36 am

      தெய்வமே…. தெய்வமே…. நன்றி சொல்வே தெய்வமே….

      பாடல்களை ஒருதரம் கேட்டுவிட்டு வருகிறேன்

    2. -/பெயரிலி.
      May 22, 2005 at 1:39 am

      /தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்./
      வெங்கட், டிஎம்எஸ், அவருடைய அகங்காரத்துக்கும்மேலே ஒரு சிறந்த பாடகர். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எந்த விதத்திலுங்கூட, சௌந்தரராஜன் அளவுக்குப் பாத்திரத்திற்கும் கதைநிகழ்சூழலுக்கும் ஒன்றிய விதத்திலே பாடக்கூடியவர் இல்லை என்றே என் தனிப்பட்ட கருத்து. பாலசுப்பிரமணியத்தினை உயர்த்துவதற்காக, நீங்கள் டி எம் எஸ் தலையிலே அநியாயமாக அன்னக்கிளியினைக் கட்டிவிட்டீர்களா? :-)

    3. May 22, 2005 at 1:58 am

      கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், இளையராஜா, துவக்க காலத்தில் சிவக்குமார் நடித்த பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்று தெரிய வரும். அந்த காலங்களில், ரஜினிகாந்த், கமலஹாசன், சிவாஜி படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். தீபம், தியாகம் போன்ற ஒரு சில படங்களுக்குப் பிறகு, மீண்டும், எம்.எஸ்.வியிடமே சிவாஜி ஒதுங்கிவிட்டார். ஏவிஎம் அந்த காலத்தில் படங்க: எடுக்க வில்லை. அப்போது சிவக்குமார், சிவச்சந்திரன், சுதாகர், விஜயன் போன்ற நடிகர்களின் படங்களில், தான் இளையராஜா அதிகமாக் பணியாற்றினார். தனிப்பட்ட முறையில்., இளையராஜாவின் அந்த காலகட்டம் எனக்குப் பிடித்தமானது ( முரட்டுக்காளை வரும் வரை ). கவிக்குயில், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, முதல் இரவு, பூந்தளிர், நான் வாழ வைப்பேன், கவரி மான், அவர் எனக்கே சொந்தம், நிறம் மாறாத பூக்கள், போன்ற திரைப்படங்களின் பாடல்கள் அத்தனையும் பொக்கிஷம்.

      உறவாடும் நெஞ்சம் யார் படம், என்ன க்தை, யார் நடிகர்கள் என்று தெரியாது. முந்தா நேத்து ரிலீசான படமே மறந்து போய்விடுகின்றது. 25 வருஷத்துக்கு முன்பு வந்த ஒரு insignificant திரைப்படத்தில் இருந்து பாட்டு மட்டும், நெஞ்சிலே சுத்தியல் வெச்சு அடிச்ச மாதிரி இனிப்பாக ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அந்த அனுபவத்தை என்ன வென்று விளக்குவது?

    4. May 22, 2005 at 1:59 am

      contd from prev comment

      பல்லவி முடியும். முடிந்து இன்டர்லூட். முடிந்து… " மஞ்சளின் மகராணி…. குங்குமப் பெருந்தேவி…. " என்று பாலு பாடுவார்…..ஜிவ்வுன்னு தூக்கும்… " அங்கே சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே….ன்னும் முடிக்கும் போது.. அந்தம்மா உடனே " உன் முகம் பார்த்து மலர்ந்தேனேன் " மறுபடியும் மேலே தூக்குவாங்க… இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே, ஒரு கையிலே 'க்ளாஸ¤ம்' ஒரு கையிலே புகையுமா ஒக்காந்து, ஒரு செம்படம்பர் மாச மழை இரவிலே தன்னந்தனியா கேக்க வேண்டிய பாட்டு…

      ஒரு ரா.கி ரங்கராஜன், ( அவரேதான்) தன் பிரண்டு ஒருத்தரை, ராஜாவைப் பார்க்கப் போனாராம். அந்த நண்பர், ராஜாவைப் பார்த்து, " உங்க பாட்டுலே, சாரீரம், சாகித்யம் இந்த ரெண்டையும் தவிர்த்து வேற ஒண்ணு இருக்கே அது என்னனு கேட்டாராம்… ". அதுக்கு ராஜா. " இதுக்கு என்ன நான் பதில் சொல்றதுன்னு " சிரிச்சாராம். { இந்தக் கட்டுரை, நாலு மூலை தொகுதியிலே இருக்கு }எனக்கும் அப்படிக் கேள்வி இருக்கு, ஆனால், அது என்னன்னு தெரிஞ்சுட்டால், ராஜா பாட்டு புடிக்காமப் போயிடுமோ என்னமோ?

    5. -/பெயரிலி.
      May 22, 2005 at 2:10 am

      /உறவாடும் நெஞ்சம்/
      முத்துராமன்?

    6. May 22, 2005 at 2:15 am

      Hi venket,
      nice selection curryon

    7. May 22, 2005 at 2:25 am

      [5]

      ///உறவாடும் நெஞ்சம்/
      முத்துராமன்?//

      என்றுதான் நினைக்கிறேன்.

      டி.எம்.எஸ் பற்றி நீங்கள் சொன்ன கருத்து நூறு சதவீதம் உண்மை. அகங்காரத்தையும் தாண்டி, அவரிடம் அற்புதமான குரல் வளமும் இசை ஞானமும் உண்டு. அந்தப்புரத்தில் ஒரு மகராணியை விட, சம்பூர்ண ராமாயணத்தின் " அன்னையும் தந்தையுமாகி… " சௌந்தரராஜனின் திறமைக்கு கட்டியம் கூறும். சௌந்தரராஜனின் ஆரம்ப காலப் பாடல்கள் அற்புதமாக இருக்கும்,

    8. ravi srinivas
      May 22, 2005 at 5:10 am

      raja used t.m.s till he commented about 'oorambo oorambo rukimini vandi varuthu' in ponnu oorku puthusu.years later t.m.s sang in a film 'thaiiku oru thaalattu' with suseela.wherever he could not use t.m.s for sivaji he opted more for malaysia vasudevan than for s.p.b or yesudas e.g. mudhal mariyathai.

      it is unforunate that due to ego clashes or some other reason raja did not work with t.m.s after 1979 and with, vairamuthu after 1996 or may be 1997.in the previous generation of singers,composers and song writers this did not seem to have happened.l.r.eswari
      another example.m.s.v used her voice and raja did not prefer her.

    9. Ramachandranusha
      May 22, 2005 at 5:54 am

      நாயகி சந்திரகலா என்று நினைக்கிறேன். பிரகாஷ் கிளாஸ், மழை தூரல் போன்று மலரும் நினைவுகளாய் "மங்கலநாண் வேண்டும், மகனுடன் மகள் வேண்டும்" வரிகள் அப்போது மனதில் கொஞ்சமாய் கிளர்ச்சியை ஏற்படுத்தின :-)

    10. May 22, 2005 at 6:51 am

      [2] பெயரிலி :) பாலசுப்பிரமணியத்தினை உயர்த்துவதற்காக, நீங்கள் டி எம் எஸ் தலையிலே அநியாயமாக அன்னக்கிளியினைக் கட்டிவிட்டீர்களா?

      இல்லை. இது நான் கேட்ட அரசல் புரசல் கதை. என்னுடைய நண்பர் அந்தக் காலங்களில் கும்பகோணத்தில் பெரிய இசைக்கடை வைத்திருந்தார். அதற்குப் பல ஹெச்.எம்.வி, இன்ரிகோ, நிறுவன மேலாளர்கள் வருவார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து கேட்ட insider's story.

      >சௌந்தரராஜன் அளவுக்குப் பாத்திரத்திற்கும் கதைநிகழ்சூழலுக்கும் ஒன்றிய விதத்திலே பாடக்கூடியவர் இல்லை என்றே என் தனிப்பட்ட கருத்து.

      பாடலைப் படத்துடன் சேர்ந்த இசையாக நான் என்றைக்குமே பார்த்ததில்லை. கல்லூரி முடிக்கும்வரை அதிகப் படங்களைப் பார்த்ததில்லை (வீட்டில் காசு கொடுக்க மாட்டார்கள்) எனக்கு திரையிசை என்பது இசை என்ற ரீதியில்தான் பரிச்சயம், நடிப்புடன் தொடர்பு கிடையாது. எனவே "பாலூட்ட்ட்டி வளர்த்த கிளீஈஈஈஈ…" வகை டி எம் எஸைக் காட்டிலும் "அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்…", "ஆயிரம் நிலவே வா…" "மாமதுரை நாட்டினில்…" "வான் நிலா நிலா அல்ல…" என்று வகைவகையாய்ப் பாடும் பாலசுப்ரமணியத்திடம்தான் ஈர்ர்பு இருந்தது.

      கொஞ்சம் யோசித்திப் பாருங்கள் "அன்னக்கிளி உன்னத்தேடுதே…" பாடலை இவர் பாடியிருக்க முடியும் (மணியோசை கேட்டு எழுந்து-வில் வரும் வேதனையை நினைவு கொள்ளுங்கள்), ஆனால் "நான் பேச வந்தேன்…" "ஒரு நாள் உன்னோடு…" இரண்டையும் என்னால் சத்தியமாக சௌந்தர்ராஜன் குரலில் கேட்கமுடியாது.

    11. May 22, 2005 at 7:05 am

      [4]
      அண்ணாத்தே, நான் ஐஐஎஸ்ஸி-ல படிக்கும்பொழுது இந்தப் பாட்ட நீங்க சொல்ற (எடது கைல ஜலத்தை எடுத்துக்கோங்கோ, வலது கைல அக்னி இருக்கட்ட்டும், கண்ண மூடி த்யானம் பண்ணிக்கோங்கோ) செட்டிங்கில் கேட்டு என்னோட ப்ரெண்டு ஒருத்தர் ஒரு நாள் ஓ-ன்னு அழுதான். என்னடா-ன்னு கேட்டாக்க "பாட்டு… பாட்டுடா…" அப்பிடீன்னான். லே ஒளறாதே இந்தப் பாட்டுக்கு ஏன்டா அளுவனும்-னு கேட்டா "மங்கலநாண் வேண்டும், மகனுடன் மகள் வேண்டும்" அப்படீன்னு பாரதியார் ஸ்டைல்ல பராசக்தியைப் பார்த்துக் கேக்க ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் பேச்சு நீண்டுபோய் பசி வந்து ராத்திரி ரெண்டு மணிக்கு கடைசீல யஷ்வந்த்பூர் தள்ளுவண்டில ஆம்லட்தான் கெடச்சது.

      >எனக்கும் அப்படிக் கேள்வி இருக்கு, ஆனால், அது என்னன்னு தெரிஞ்சுட்டால், ராஜா பாட்டு புடிக்காமப் போயிடுமோ என்னமோ?

      இல்லன்னுதான் தோணுது. இப்பல்லாம் நெறையா விதம் விதம்மா இசை கேட்டு. "ஆங் இதே மாதிரி ப்ளூஸ்தான ராஜாவோட அந்தப் பாட்ல வரும், இது சிம்ஹேந்திரமத்யமம்" – அப்பிடின்னுல்லாம் தெரியறதுனால ராஜா மேல இன்னும் அதிகமாத்தான் ஈர்ப்பு வருது.

    12. May 22, 2005 at 7:18 am

      [8] ரவி – உண்மைதான். எனக்குத் தெரிந்த வகையில் இந்த மாதிரி ஈகோ பிரச்சனை-யெல்லாம் அதிகம் இல்லாமல் இருந்தவர் எம்.எஸ்.வி-தான். எல்.ஆர். ஈஸ்வரி – இளையராஜாவைப் பற்றிக் கேவலமான கமெண்ட்டெல்லாம் அடித்ததாகச் சொல்வார்கள்.

      இந்தக் காலங்களில் ஊதிப்பருப்பிக்கப்பட்டிருக்கும் ஈகோவுக்கு ராஜாவையெல்லாம் ஈடு சொல்ல முடியாது. ரஹ்மான் பாடலே இல்லாத படத்திற்குப் இசையமைக்க, இன்னொரு முக்கிய இசையமைப்பாளருடன் சேர்ந்து இசையமைக்க (எம்.எஸ்.வி-ராஜா), கூட்டத்தோடு ஒரு பாடலுக்கு மாத்திரம் இசையமைக்க (கண்ணில் தெரியும் கதைகள்) போன்று இசை சார்ந்த பரீட்ச்சார்த்த முயற்சியிலெல்லாம் ஈடுபடுவார் என்று நம்பிக்கையில்லை. இந்தியாவைவிட ரஹ்மான் பெரியவர்.

      ராஜாவுக்கு பெரிய ஈகோ இருந்தது உண்மைதான் – ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் பிறரால்தான் தூண்டப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்ன ஓரம்போ பாடல் சௌந்தர்ராஜன் கமெண்டைப் போல. மணி ரத்னம், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் – இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பட வெற்றிக்கு ராஜா மாத்திரமே காரணமில்லை என்று நிரூபிக்கக் கிளம்பிதான் அவருரைய ஈகோவைத் தூண்டினார்கள்.

    13. May 22, 2005 at 7:23 am

      [9] உஷா – வாங்க :) 2005 ல நாப்பதுன்னா, 1976ல என்ன வயசு?

      அப்பவேவா,> "மங்கலநாண் வேண்டும், மகனுடன் மகள் வேண்டும்" வரிகள் அப்போது மனதில் கொஞ்சமாய் கிளர்ச்சியை ஏற்படுத்தின.

      வீட்ல ஒத விழும்! :) )

    14. Ramachandranusha
      May 22, 2005 at 10:33 am

      வெங்கட், நல்ல கதையா இருக்கே! நா எங்க எனக்கு நாப்பது வயசுன்னு சொன்னேன்? பத்மாதானே சொல்லிக்கிட்டாங்க:-)) அந்த வரிகள், எட்டாவது படிக்கும் பொழுது என் வகுப்பு தோழிகள் அனைவரின் வாயிலும் முணுமுணுக்க வைத்தது. ஆனா மங்கல நாணும், மகனும், மகளும் கிடைத்த பிறகு… ஹீம்!
      உஷா

    15. May 22, 2005 at 8:34 pm

      அடுத்த பதிவு எப்போ, ஆவலோட காத்துகிட்டு இருக்கோம்!

    16. May 23, 2005 at 2:08 am

      விஷயங்கள் இருக்கட்டும் 'பொள்' வாயுடன் நுமது படத்தை எதுக்கையா இட்டுத்தொலைத்தீர்?

      - மொத்தினார்குமினியர்-

    17. N. Chokkan
      May 23, 2005 at 4:32 am

      I have a strange (and unrelated :) ) Query … who is this Devraj Mohan ? What other movies he has directed ? (Before annakkiLi and after annakkiLi), How come IR was able to give such a huge hit in his first movie itself which was not a popular banner / artist / director / whatever ? (Both his sons faced the same kind of trouble in their debut movies … But Rahman was lucky to have a high profile movie for his debut … :)

      N. Chokkan,
      Bangalore.

    18. May 23, 2005 at 5:07 am

      //ரோஸா வஸந்தைத் திரும்ப வரவழைக்கவும்தான்//

      திருட்டுதனமாய் உங்கள் பதிவுகளை படுத்துகொண்டுதான் இருக்கிறேன். இரண்டு பாடல்களுடன் என்னிடம் இருக்கிறது, அடிக்கடி கேட்கிறேன் என்றாலும் ஒரு அனுபவத்திற்காக உங்கள் பதிவில் படித்துவிட்டு கேட்டேன். நன்றி!

    19. May 23, 2005 at 5:43 am

      சொக்கன், தேவராஜ் – மோகன் என்பவர்கள் இரட்டையர்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, பூந்தளிர், அவ்ர் எனக்கே சொந்தம், சிட்டுக்குருவி, உறவாடும் நெஞ்சம், (சிவக்குமார் சுமித்ரா நடித்த இனொரு திரைப்படம், பெயர் நினைவுக்கு வரவில்லை, வெங்கட் பதிவிலே இடம்பெற்ற அருமையான பாடல் அதில் இருக்கிறது) என்ற திரைப்படங்களை இயக்கியுள்ளனர். தமிழைத் தவிர மலையாளப்படங்களையும் இயக்கியுள்ளார்கள். சிவக்குமார்-தேவராஜ் மோகன் – இளையராஜா காம்பினேஷன் பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றது.

      அத்தனை பிரபலமில்லாத பேனர், இயக்குனர், நடிகர்கள், புதிய இசை அமைப்பாளர் என்று இருந்தாலும், அன்னக்கிளி ஏன் அத்தனை பரபரப்பு கிளப்பியது என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான்… அதன் பாடல்கள். பாபி, யாதோங்கிபாராத், ஹம்கிசிசே கம் நஹி, ஆராதனா என்று தமிழர்கள் இந்திப்பாடல்கள் பின்னால் போய்க்கொண்டிருந்த போது, திரைஇசையில் நாட்டுப்புற வடிவத்தை கொடுத்து, மீட்டுக் கொண்டுவந்தது, அன்னக்கிளி. ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஓடுவது, பெரிய விஷயம் இல்லை. சமீபத்திய மன்மதராசா ஒரு உதாரணம். ஆனால், ஆரம்ப மேஜிக் மட்டும் இல்லை, வெர்சடாலிடியும் இருக்கிறது என்று மூன்றாவது ( அல்லது நான்காவது ) படத்தின் மூலமாகவே நிரூபிக்கப் பட்டது, சின்னக் கண்ணன் அழைக்கிறான்…என்ற பாலமுரளி பாடிய சிட்டுக்குருவி பாடலின் மூலம்.

    20. May 23, 2005 at 5:44 am

      முந்தைய பதிவில் சொல்ல விட்டுப் போனது..

      என்ன சொக்கன் எப்படி இருக்கீங்க.. பாத்து எம்பூட்டு நாளாச்சு…. சௌக்கியமா

    21. May 23, 2005 at 5:47 am

      //சின்னக் கண்ணன் அழைக்கிறான்…என்ற பாலமுரளி பாடிய சிட்டுக்குருவி பாடலின் மூலம்.//

      மன்னிக்கவும், அது கவிக்குயில்

    22. N. Chokkan
      May 23, 2005 at 6:25 am

      [19]

      Thanks prakash for the infos … I am doing fine, except that I am in "Read Only" Mode :) Neenga Sowkyamaa ? :)

      N. Chokkan,
      Bangalore.

    23. May 23, 2005 at 6:38 am

      வெங்கட்
      நீங்கள்,ரோசா,பெயரிலி,பிரகாஸ் என்று ஒரு ரசிகர் கூட்டமே இளையராஜாவை நயப்பது மகிழ்வைத் தருகிறது.முக்கியமாக ராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள்.என்னிடம் அனேகமான பாடல்கள் MP3ஆக உள்ளன.கேட்கும் தோறும் ராஜா இளையராஜா

    24. Mani
      May 23, 2005 at 6:54 am

      From http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=426…

      Sri Vishnupriya Creations URAVAADUM NENJAM is an important film for Ilayaraja. The film itself happened to be an utter failure. But there was a landmark that Ilayaraja had left for us. The song Oru Naal Unnodu Oru Naal was earmarked for success of the movie. The song was an instant hit alright, but the movie had nothing to boast of.

      This was the third film for Raja, after Palooti Valartha Kili. However, S.P. Bala’s first song under Ilayaraja was recorded for URAVAADUM NENJAM movie, and that is Oru Naal Unnodu Oru Naal. Ilayaraja had assisted other MDs, such as GK Vengatesh, who had used Bala.But those were not to be attributed to Raja.

      When Ilayaraja was composing under various MDs in the late 1960s Bala was already a playback singer following the film Shanthi Nilayam, under MS Visvanathan. Bala’s first ever-Tamil song was a duet with LR Eswary in the film Hotel Ramba. The song is “Athanukku Eppadi Irukku Mansukkulle.” Both the song and the film were never released. The Shanthi Nilayam song was the first to be released. But it was the song Ayiram Nilave Vaa in ADIMAI PENN that boosted Bala to new heights.
      While looking for cine chances, Bala was first singing under the Paavalar Brothers. Later Raja played harmonium and guitar under the band that Bala initiated.

      Raja was invited to compose for a film called UYIR. Bala and a few others sang and recorded 4 songs under Raja’s composition. The film never materialised. Then came Annakili. Bala and Raja were among the thickest of friends. However, when Annakili came by, Raja could not impose on using Bala. It was Raja’s debut and Panju had all the say. Raja was interested in breaking through. But when URAVADUM NENJAM was in the making, Raja made sure Bala was in. In an attempt to honour his close friend, Raja wanted to make sure he composed a song that would be cherished by both the composer and the singer. Remember the title of the film is also URAVADUM NENJAM. So Ilayaraja centered all his energy, effort and imagination to compose what would ever remain as one of the best songs for a best friend of his. Likewise, SP Bala too made sure he sang with much feeling. S. Janaki too followed suit. The lyrics were by Panju Arunasalam.

      The song, especially the orchestration was something unknown to many fans of Tamil film music. It was simply rich orchestration. Ilayaraja told Bala that the film would run for 100 days on the strength of the song. Raja proposed, but the moviegoers disposed. The film became an utter failure- commercially. However, the song became immortalised, and is one of my best.

      The story did not end there. It was on the lips of Bala for a long time. Every time Bala entered the recording studio, he used to sing to himself or hum this song. And Raja used to immediately respond, “ Naama Ennnumo Nenachom, Padam Odalaiye daa” (These two friends called each other “vaada poda.”)
      -Mani

    25. May 23, 2005 at 10:26 am

      // (சிவக்குமார் சுமித்ரா நடித்த இனொரு திரைப்படம், பெயர் நினைவுக்கு வரவில்லை, வெங்கட் பதிவிலே இடம்பெற்ற அருமையான பாடல் அதில் இருக்கிறது) //

      பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்துண்டு போல ரொம்ப நேரமாக நெருடிக் கொண்டிருந்தது…அப்பாடா , கடைசியில் நினைவுக்கு வந்தேவிட்டது. அந்தப் படம், கடவுள் அமைத்த மேடை. பாட்டு, ஜென்ஸி பாடிய " மயிலே மயிலே…உன் தோகை எங்கே…

    26. May 23, 2005 at 4:24 pm

      [16] தலைவரே, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு சுத்தமா புரியலை. ஆனா உங்க ஐபி நம்பர் என்னன்னு தெரியுது :)

    27. May 23, 2005 at 4:37 pm

      சொக்கன், ஜீவா, மணி, ரோஸா வஸந்த – நன்றிகள்.

      சொக்கன் – தே.மோ இரட்டையர் அன்னக்கிளிக்கு முன்பே தமிழில் இயக்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பொண்ணுக்குத் தங்கமனசு (சிவக்குமார், ஜெயச்சித்ரா) – மறக்கமுடியாத பாடல் தேன்சிந்துதே வானம் (எஸ்.பி.பி-எஸ்.ஜானகி) இந்தப்படத்தில்தான். பிரகாஷ் கிட்டத்தட்ட எல்லா தமிழ்ப்படங்களையும் பட்டியலிட்டுவிட்டார். பொதுவில் தே.மோ படங்களில் ஒன்றிரண்டு பாடல்களாவது மிகமிக அருமையாக் இருக்கும். (இளையராஜாவின் நன்றிக்கடன்). அன்னக்கிளியின் மூலம் தனக்குப் பெரும் வாழ்வு அளித்ததற்காக சிவக்குமார் இவர்களை தனது நூறாவது படமான ரோசாப்பு ரவிக்கைக்காரியை இயக்க வைத்தார்.

      தமிழில் 1980க்குப் பிறகு இவர்கள் இயக்கிதில்லை. ஆனால் மலையாளத்தில் நீண்ட நாட்களுக்கு இயக்கிக்கொண்டிருந்தார்கள். ஷாலினி என்டெ கூட்டுக்காரி, நிறம் மாறுன்ன நிமிஷங்கள் போன்ற படங்கள் நினைவில் வருகின்றன.

    28. May 23, 2005 at 4:40 pm

      [24] மணி – இந்தத் தகவல்களில் கொஞ்சம் தவறு இருக்கிறது. பாலசுப்ரமணியம் ஒருக்காலத்திலும் பாவலர் பிரதர்ஸில் பாடியதாக நான் கேட்டதில்லை.

      இன்னொரு சுவையான தகவல் நீண்ட நாட்களுக்குப்பிறகு மேடையில் ஜானகியும் எஸ்.பி.யும் சந்தித்தபொழுது ஜானகி "நான் பேச வந்தேன், சொல்லத்தானோர் வார்த்தையில்லை" என்று துவங்கினார்.

    29. -/ramani.
      May 23, 2005 at 5:44 pm

      [10] வெங்கட், சிவாஜிக்குப் பாடும்போது, "பாலூட்டி வளர்த்த கிளி"யை அப்படித்தான் பாட முடியுமென்று படுகிறது. "மணியோசை கேட்டு எழுந்து" இனை என்னாலும் சௌந்தரராஜன் குரலிலே ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாகவிருக்கும் (மோகனின் வாயசைப்பினையும் சுரேந்தரின் குரல் இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்திருக்கும் என்பதுபோல ;-) ); ஆனால், அதேபோல, சிவாஜிக்கு எத்தனை பாடல்களைப் பாலசுப்பிரமணியம் பாடியிருக்கின்றாரென்று பாருங்கள்; பொருந்தாது. எம்ஜிஆர்கூட, சௌந்தரராஜன் இல்லாவிட்டால், அதிகம் ஜேசுதாஸினைத்தான் பாடவிட்டிருக்கின்றார் என்று தோன்றுகிறது.

      எதுவோ, சௌந்தரராஜன் தலையிலே ஒரு பாடலைக் கட்டிவிட்டு, பாலசுப்பிரமணியத்தினை இளையராஜா நல்ல பாடலுக்காக வைத்திருப்போமென்று எண்ணியிருந்திருந்தால், சௌந்தரராஜனின் இளையராஜா பற்றிய ஓரம் போக்கிய கருத்து ஏன் வந்தது என்று ஓரளவுக்குப் புரிகின்றது.

    30. May 23, 2005 at 10:54 pm

      [29] ரமணி – சிவாஜி, எம்ஜிஆருக்கெல்லாம் சௌந்தர்ராஜன் பாடி அலுத்துப் போனதுபோக அடுத்ததாக யேசுதாஸ்க்குத்தான் கிடைத்தது. ஆனால் அது யேசுதாஸின் காலம். எஸ்.பி.பி அப்பொழுது ஓரத்தில் இருந்தார். இருந்தாலும், எம்.ஜி.ஆரின் கடைசிக்கால படங்களில் கொஞ்சம் பாலசுப்ரமணியம் தலைகாட்டத் தொடங்கினார். அவர் நடித்து வெளியாகாத அண்ணா நீ என் தெய்வம் என்ற் கடைசிப் படத்தில் ஒரு பாலசுப்ரமணியம் – வாணி ஜெயராம் பாடல் பிரபலமானது (நினைவில் வரவில்லை). ஒரு முறை பேட்டியில் பாலசுப்ரமணியம் "நான் பிரபலமான சமயத்தில் எம்ஜிஆர் நடிப்பை நிறுத்திவிட்டது என் இழப்பு" என்று சொல்லியிருக்கிறார்.

      நடிகருக்காகப் பாடுவது திறமை என்று வைத்துக்கொண்டால் அந்தக் காலக்கட்டங்களில் பிரபலாம இருந்த முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, பாக்யராஜ்,… சுருளிராஜன் வரைக்கும் தன் குரலை நெகிழ்த்திக்கொள்ளும் திறமை பாலசுப்ரமணியத்திற்கு இருந்தது.

    31. -/பெயரிலி.
      May 23, 2005 at 11:06 pm

      [30] /முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு, பாக்யராஜ்,… சுருளிராஜன்/
      இத்தனை பேருக்கும் குரல் கொடுத்தார் என்பதை மறுக்கவில்லை. ஆனால், பாடலை வைத்துக்கொண்டு இன்னாருக்குத்தான் கொடுத்தார் என்று ஊகிக்கமுடியாது (சுருளிராஜன் தவிர); ஆனால், அதில்லை பாடகரின் நோக்கமென்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியாகப் பார்த்தாலுங்கூட, அவர் குரலிலே சில விதமான உணர்வுவெளிப்பாடு மட்டுமே இருந்ததென்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதற்காக, அவரின் பாடல்கள் எனக்குப் பிடிக்காது என்பதில்லை என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடுகிறேன் ;-)

    32. kavi
      May 24, 2005 at 2:08 am

      will u b writing about eera vizhi kaviyangal songs?

    33. May 24, 2005 at 3:35 am

      அட மக்களா, இதை இப்போதானே பாக்கறேன். இங்கே தான் டேரா போட்டுட்டு இருக்கீங்களா. ரிச்சி தெருவில், கொஞ்சம் ஜாக்கிரத்தையா பார்த்துக் கொண்டு வந்தால், எங்காவது 5 குறுந்தட்டு கலெக்ஷன் கிடைக்கும். இதுவரை ராஜா இசையமைத்த [தமிழில் மட்டும்] எல்லா படங்களும் [ஏறத்தாழ 90% படங்களின் பாடல்கள்] கிடைக்கும். இது தவிர ராஜாவின் குரல் மட்டுமே அடங்கிய 100-150 பாடல்கள் தனி குறுந்தகடாக கிடைக்கும். நான் எல்லா பாடல்களையும் கேட்டிருக்கிறேன். சில பாடல்கள் என்ன படமென்று தெரியாவிட்டாலும் கூட நெகிழ செய்துவிடும். "மயிலே மயிலே…உன் தோகை எங்கே…" – நன்றி பிரகாஷ், இந்த பாடலின் படமும் ரொம்ப நாள் தெரியாமல் இருந்தது. அது சரி, தாஸில் ராஜாவின் இளவல் இசைத்த "சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்" கேட்டீர்களா. 80களின் ராஜா சாயல் அடிக்கிறது பாடலில். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், செல்வராகவனின் எல்லா படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது பழைய ராஜா பாடல் போல இருக்கும், கேட்டுப்பாருங்கள்.

    34. May 24, 2005 at 5:41 am

      [33] நரைன் செல்வராகவனின் எல்லாப் படங்களிலும் பழைய இளையராஜா சாயல் அடிக்கும்.அட இதுகூடத் தெரியாதா?செல்வராகவன் படமெல்லாவற்றுக்கும் புலிக்குட்டி தானே இசை அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குது என்கிறீர்களா?

    35. May 24, 2005 at 9:00 am

      [32]ஈரவிழிக் காவியங்கள் – ஒரு தனிப்பதிவாக வரும். அந்த நாட்களின் இசையைத் தாண்டிய ஒரு சாதனை அது.

    36. May 24, 2005 at 9:09 am

      [33] நாராயணன் – மயிலே மயிலே உட்பட நான் எழுதிய "இளையராஜாவின் மூன்று அன்னங்கள்" தொடர் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா?

      http://www.domesticatedonion.net/blog/?item=381…
      http://www.domesticatedonion.net/blog/?item=382…
      http://www.domesticatedonion.net/blog/?item=383…

      இவை ட்சுனாமியில் அடித்துக் கொண்டுபோய் பெரிதும் கவனிக்கப்படவில்லை.

      ரிச்சி ஸ்ட்ரீட் இன்னும் எல்லாத்தையும் சேர்த்து வாங்கி வையுங்க, நான் உங்ககிட்ட வந்து சுட்டுக்கிறேன். :)

      யுவன் சங்கர்ராஜா பற்றி ஒரு பதிவு கூடிய விரைவில் வரலாம். சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் பாடல் இனிமையானது (நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரேயா கோஷால் பாடகிகளில் மனதைக் கவர்கிறார்). இவருக்கு மச்சானைப் பார்த்தீங்களா, சின்னக்குயில் பாடும் பாட்டுகேக்குதோ, சின்னச் சின்ன ஆசை மாதிரி ஒரு பெரிய பாடலை எதிர்பார்க்கிறேன்.

    37. kavi
      May 24, 2005 at 11:01 am

      yes. very much true. I was mesmerised by the song "kanavil midhakkum" (still). what a song!!!.

    38. kavi
      May 24, 2005 at 11:10 am

      and one more song "en gaanam endru arangerum" by ilayaraja. very moving song. in many ways it seems straight from his heart.
      I am searching for "kadhal panpaadu" must be a gud song too.

    39. kavi
      May 24, 2005 at 11:11 am

      and one more song "en gaanam endru arangerum" by ilayaraja. very moving song.
      I am searching for "kadhal panpaadu" must be a gud song too.

    40. May 24, 2005 at 1:03 pm

      ஒரு நாலு நாள் பெங்களூர் பக்கம் போயிருந்தா இப்பிடியா இ.ராஜா பாட்டு போட்டு கொண்டாடுறது? 2/3 நாள் வேலை பிழிஞ்சுடும். நீங்க பாட்டுக்கு (:-) தூள் கிளப்புங்க. ஆஹா.
      அருள்

    41. May 25, 2005 at 3:42 am

      Have you tried this site ? to store the songs that we want into one CD ?
      http://www.hamaracd.com/hcdindia/asp/Tamil.asp?eid=1%2B3…

      - Alex

    42. May 25, 2005 at 9:41 am

      [41] அலெக்ஸ் – என்னிடம் இல்லாத, எனக்குத் தேவையான பாடல்கள் இதிலெல்லாம் கிடையாது. எனக்கு வேண்டியவை பெரும்பாலும் எதாவது நடு அளவு ஊர்களில் (புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்கால், நாகர்கோவில், செங்கல்பட்டு, இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்) யாராவது ஒரு பழைய இசைத்தட்டு கடைக்காரரின் வீட்டு பரணில்தான் இருக்கமுடியும். அல்லது என்னைப் போலத் தேடித்தேடி இசை சேகரிக்கும் நண்பரிடம். இந்த பளபளப்பு கிடைகளில் எதுவும் பொக்கிஷம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. :)

    43. Kavi
      May 26, 2005 at 12:29 am

      Venkat,
      You can try coolgoose.com where music lovers upload rare songs (gems:) of raja. Thats where i got EVK songs. The quality in general is gud. Also u wont get rare songs in ritche street mp3 Cd's.

    44. May 26, 2005 at 10:25 am

      [43]yes, coolgoose is one (very slow) source. But I mostly rely on friends. These old songs do no have any commercial scope (no one re-releases EVK), as such sharing is no sin. :)

    45. kavi
      May 28, 2005 at 12:49 am

      Venkat,
      Do u have "kadhal panpaadu" song from EVK?

    46. May 28, 2005 at 2:35 am

      இந்த சின்ன மேட்டருக்காக பெரீவரை எதுக்காக டிஸ்ரப் செய்யணும் :-) புடிங்க..

      http://www.raajangahm.com/guitarprasanna/14.ram“> காதல் பண் பாடுபழைய சோகங்கள்கனவில் மிதக்கும்

    47. May 28, 2005 at 2:39 am

      நெனச்சேன்…எனக்கு லிங்க் ஒளுங்கா குடுக்கத் தெரியாதுன்னு … :-)

      காதல் பண்பாடு http://www.raajangahm.com/guitarprasanna/14.ram…
      பழைய சோகங்கள் href=http://www.raajangahm.com/guitarprasanna/02.ram…
      கனவில் மிதக்கும் http://www.raajangahm.com/guitarprasanna/01.ram…

    48. kavi
      May 28, 2005 at 3:16 am

      Prakash,
      Again….i need mp3

    49. rajeshkrv
      June 20, 2005 at 3:00 pm


      mika arputhamana vilakkam

      aanal oru siru thirutham

      Badrakalikku munbe suseela rajavin isaiyil

      Annakiliyil "sondham illai bandham illai " paadalai paadi vittar

    50. June 20, 2005 at 3:30 pm

      [49] ராஜேஷ் – நீங்கள் சொன்னது சரி. சுசிலா ராஜாவின் முதல் படத்திலேயே இருக்கிறார்.

      (அரை செஞ்சுரி போட வாய்ப்புக்கொடுத்ததற்கு நன்றி :) )

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *