மைக்ரோஸாப்ட் செய்தியோடையில் சாக்கடையைக் கலக்கப்போகிறது.
by வெங்கட் • June 24, 2005 • அறிவியல்/நுட்பம் • 32 Comments
இன்றைக்கு வெளியாகியிருக்கும் அறிவிப்புப் படி மைக்ரோஸாப்ட் RSS (Really Simple Syndication) என்று அழைக்கப்படும் செய்தியோடை தரத்தைக் கையாண்டு நீட்டிக்கப்போகிறதாம் . உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ்மணத்தின் ஆதார இதயமே இந்த RSS செய்தியோடை திரட்டிதான். வலைப்பதிவு பொதிகள் (ப்ளாகர், நியூக்ளியஸ், வேர்ட்ப்ரஸ், மூவபிள்டைப்,…) எல்லாம் பொதுவான தரக்கட்டுப்பாட்டின்கீழ் வரும் RSS அல்லது Atom முறைப்படி வலைப்பதிவுகளின் தலைப்பு, எழுதப்பட்ட நேரம், எழுதியவர், முதல் சில வாக்கியங்கள் என்று செய்தியோடைகளாகத் தருகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் RSS என்பது வலைப்பதிவின் முன்னோட்டம். இந்த RSS செய்தியோடைகளைப் பல வகையில் படிக்க முடியும். தனித்தியங்கும் செய்திப்படிப்பிகள் (newsreaders) உலாவி அல்லது மின்னஞ்சல் கருவியுடன் சேர்ந்தியங்கும் திரட்டிகள் ( RSS Aggregators) என்று பலவகைகளில் இவற்றைப் படிப்பது சாத்தியம். தமிழ்மணத்தில் இந்த செய்தியோடைகள் திரட்டப்பட்டு முன்னோட்டம் தரப்படுகின்றன.
இந்த செய்தியோடை முறை நெட்ஸ்கேப்பினால் துவக்கப்பட்டது. அதேசம்யத்தில் யூஸர்லாண்ட் என்ற நிறுவனமும் எக்ஸெமெல் (XML) மொழியின் அடிப்படையில் இதன் பல கூறுகளை உருவாக்கின. 2002க்குப் பிறகு வலைப்பதிவுகள் பிரபலமானவுடன் இந்த RSS செய்தியோடை, படிப்பிகள், திரட்டிகள் போன்றவை மிகவும் பிரபலமாக ஆகத் தொடங்கின. இப்பொழுது என்னுடைய லினக்ஸ் மேசைத்தளத்திலேயே எழுதப்படும் வலைப்பதிவுகளின் முன்னோட்டம் ஓடுகிறது. இன்றைக்கு ராய்ட்டர், பிபிசி, உட்பட பல முன்னனி செய்தி நிறுவனங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள், வானிலை அறிவிப்புகள், இன்னும் விளையாட்டு வர்ணனைகள் என்று பலவிதமான இடங்களில் இந்த செய்தியோடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மோஸிலா ஃபயர்ஃபாக்ஸ், ஆப்பிளின் சபாரி, இன்னும் லினக்ஸில் இயங்கும் பல உலாவிகளில் நேரடியாக வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைப் படிக்க முடியும். ஆனால் மைக்ரோஸாப்ட்டின் ஐஈ உலாவியில் இது சாத்தியமில்லை. அதேபோல தண்டர்பேர்ட் போன்ற பல மின்னஞ்சல் கருவிகளிலும் இவற்றைப் படிக்கமுடியும். ஆனால் மைக்ரோஸாப்ட்டின் அவுட்லுக் தொழில்நுட்பம் இன்னும் முன்னேற்வில்லை. இந்த நிலையில் இப்பொழுது மைக்ரோஸாப்ட் RSS செய்தியோடை முறையை தன்னுடைய அடுத்த இயக்குதள வெளியீடான லாங்க்ஹார்ன்க்கு ஏற்ற்வகையில் மாற்றியமைக்கப்போகிறார்களாம்.
இது வழக்கமாக மைக்ரோஸாப்ட் செய்யும் அயோக்கியத்தனம்தான். உருப்படியாக எந்த ஒரு பொதுத் தரத்தையும் மைக்ரோஸாப்ட் உருவாக்கியதில்லை. ஆனால் செயல்முறையில் இருக்கும் பொதுத்தரங்கள் ஓரளவுக்குப் பிரபலமானவுடன் அதில் தங்கள் கையைவைத்து அதை உருப்படாமல் செய்வார்கள். உதாரணமாக html உலாவி மொழி பொதுத்தரமாக இருந்தது, பின்னர் மைக்ரோஸாப்ட் அதில் சில நீட்டிப்புகளைச் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தவிர பிற உலாவிகளில் தெரியாமல் செய்தார்கள். அதாவது மைக்ரோஸாப்ட் உலாவிக்கு மாத்திரமே புரியும் கட்டளை உள்ளடக்கச் செய்து ஆவணங்களை உருவாக்க வைப்பது, இந்த ஆவணங்களுக்காகவே அவர்கள் உலாவியை மாத்திரமே பயன்படுத்தும் அடிமைகளாக சராசரி பயனரை அடக்கிவைப்பது. இதன் மூலம் போட்டிகளை ஒழிப்பது.
இப்படி மைக்ரோஸாப்ட் தன்னுடைய “பங்களிப்பை” html, java, xml, என்று பல இடங்களில் செய்திருக்கிறது. இவற்றைத்தவிர அவர்களுடைய கோப்பு அமைப்புகள் பல பொதுவிலிருந்து எடுக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு மைக்ரோஸாப்ட் பொதிகளுக்கு மாத்திரமே புரியும்படி செய்யப்பட்டவை. இந்த நிலையில் இப்பொழுது செய்தியோடையின் மீது மைக்ரோஸாப்ட்டின் கனிவான பார்வை விழுந்திருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. இன்னும் மைக்ரோஸாப்ட்டுக்கு வலையில் இருக்கும் கணினிகள் பேசிக்கொள்ளும் TCP/IP நடைவரை (நடைமுறைக்கு வரையறை – Protocol) மின்னஞ்சல் பரிமாறும் POP நடைவரை இப்படிப் பல தரங்களின் மீது கண் இருக்கிறது.
உதாரணமாக, நம் மக்கள் வருங்காலத்தின் பயன்படுத்த எளிதாக இருக்கின்றது (சோம்பேறித்தனம் என்றும் படிக்கலாம்) “மைக்ரோஸாப்ட் செய்தியோடை தரும் வலைப்பதிவுகளைப்” பயன்படுத்துவார்கள். பிறகு பெரும்பாலானவர்களுக்காக என்று தமிழ்மணமும் அந்தமாதிரி ஓடைகளை மாத்திரமே திரட்டத்தொடங்கும். பின்னர் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளை லினக்ஸிலோ ஆப்பிளிலோ படிக்கமுடியாமல் போகும். – இதுதான் மைக்ரோஸாப்ட்டின் விளையாட்டு உத்தி. உருப்படியாக ஒன்றும் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஒன்று பிரபலமாகத் தொடங்கினால் அதில் த்ங்கள் கையைவைந்த்து வளைத்துப் போடுவார்கள்.
எங்க ஊரில் ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். கணினி உலகைப் பொருத்தவரை மைக்ரோஸாப்ட் கைவைத்த தரம் என்றும் சொல்லலாம்.
கேட்பதற்கு பயமாகத் தான் இருக்கின்றது. ஆனால், இந்த மாதிரி ராட்சத நிறுவனங்களுக்கெதிராக என்ன செய்ய இயலும்.
ஒன்று ஜன்னலை மூட விட்டு, லினக்ஸுக்கு தாவ வேண்டும். அல்லது குறந்தபட்சம், ஐஈயை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐஈ யா, தமிழ்மணமா என்று ஆப்ஷன் வந்தால் கண்டிப்பாக ஐஈ ஓடிப்போகும் – அட்லீஸ்ட் எனக்கு.
வெங்கட்,
HTML, DOM, CSS என்று பல நுட்பங்களின் பொதுத் தரத்தை M$ அழித்தது உண்மைதான். ஆனால் இப்போது M$ கிழ நரி. கூகிள் போன்ற கில்லாடி இளம் நிறுவனங்கள் M$க்கு அதன் மொழியிலேயே பாடம் சொல்லித் தரவல்லவை. (பரணில் கிடந்த பழைய நுட்பங்களை தூசி தட்டி எடுத்து AJAX என்ற பெயரில் உலவ விட்டிருக்கிறார்கள். GMail-ஐ எந்த உலாவியிலும் எந்த இயங்கு தளத்திலும் பார்க்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.) இப்படிப்பட்ட நிறுவனங்களும் திறமூலமும் இருக்கும்போது RSSஐ M$-ல் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
சுந்தர்,
IEஐ நான் எப்போதோ துரத்திவிட்டேன். பயர்பாக்ஸ்தான் நமக்கு உலாவி.
http://www.reallysimplesyndication.com/2005/06/22#a634…
As usual, oru valid point-um illaama chummaa M$-ai kuththam solliyirukkeenga
Read the link I posted earlier.
பரணில் கிடந்த பழைய நுட்பங்களை தூசி தட்டி எடுத்து AJAX என்ற பெயரில் உலவ விட்டிருக்கிறார்கள்
adhai vachchu thaan WAI-ai gaali paNNittaangaLE, adhu M$ seiyaadhadhinaala ungaLukku kObam varaadhu pOlirukku
thanks for the link bb. i was really confused as to why cry when there seems to be nothing damaged actually. venkat, shouldnt you look at things as they happen and comment, rather than go by the preconceived notion that MS WOULD screw up things?
//எங்க ஊரில் ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். கணினி உலகைப் பொருத்தவரை மைக்ரோஸாப்ட் கைவைத்த தரம் என்றும் சொல்லலாம்.
Welldone Venkat. Well Said.
இதை எங்க ஊரில் கரையான் புத்தெடுக்க கருநாகம் உள்ளே புகுமாம்னு சொல்லுவாங்க. இப்ப கருநாகம் செய்தியோடை புத்துக்குள்ள போகுதா.பெரியண்ணன் "BORG" மைக்ரோசாப்ட்டின் அடாவடித்தனத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
1. எல்லா மூலங்களையும் மூடியே வைத்து இருந்து எல்லாவற்றையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தலைக்கனத்தோடு கணிணி வளர்ச்சியையே தடை செய்வது.
2. சுயமாக எதையும் புதியதாக எழுதாமல் (எழுதத் தெரியாது!) மண்டபத்தில் யாரவது எழுதி வைத்திருப்பதை துட்டு கொடுத்து வாங்கி என் பாட்டுன்னு சொல்றது.
ஆனா எல்லா விளம்பரத்திலயும் Innovation, Innovative Companyன்னு கதைவிடுறது. மைக்ரோசாப்ட்ன் Innovationக்கு உதாரணம்னு சொல்லணும்னா ஒரு பெரிய பட்டியலே இருக்கு,இதில பாருங்க.
http://www.vcnet.com/bms/departments/catalog/yrcatalog.shtml…
3. சாதாரணமாக மற்றும் பொதுவாக உள்ள சொல்லைக் கூடத் தன் பொருள்களுக்கு சூட்டிக் கொண்டு அதைப் பதிந்து வைப்பது. உதாரணமாக . NET, Word, Windows
4. முக்கியமான அதி தேவையான பாதுகாப்பு முதலியவற்றில் கவனம் செலுத்தாமல், தேவையே இல்லாத, வேண்டாத சும்மா படம் காட்ட மட்டுமே எந்தப் பயனுமே இல்லாததை எல்லாம் புதிது என்று சொல்லி நம் தலையில் கட்ட முயற்சிப்பது.
5. எல்லாவற்றிற்கும் மேலாக போட்டியாளர்களே இருக்கக் கூடாது என்று கேவலமான தழுவுதல்,நீட்சிசெய்தல்,ஒழித்துவிடுதல் (Embrace, extend and extinguish (EEE)) என்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது.
மேலும் மேலாதிக்க விபரங்களுக்கு பார்க்க http://en.wikipedia.org/wiki/Embrace_and_extend…
Cont…
தொடர்ச்சி…
ஆனால் இப்போது எல்லாம் மாறிவருகிறது. மைக்ரோசாப்ட்டின் அசைக்கமுடியாத முதன்மை நிலை ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. திறமூலங்களின் வெற்றி நம்பிக்கை தருவதாக உள்ளது.
ஒருகாலத்தில் மைக்ரோசாப்ட் தன் எதிரிகளை வெல்லப்பயன்படுத்திய பயம், நிலையாமை மற்றும் சந்தேகம் (Fear, Uncertainty, and Doubt(FUD)) இப்போது அதன் மீதே பாய்ந்து கொண்டிருக்கின்றன. மொனமாகவே ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
எல்லோரும் முதலில் விண்டோஸ் இயக்குமுறை தவிர்த்த பொருட்களில் மைக்ரோசாப்ட்டின் மாற்று பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திறமூல ஒபன் ஆபிஸ் மற்றும் FireFox உலாவிகளின் பயன்கள் பெருகியுள்ளன.
எல்லோரும் ஒரே கணிணியில் பலஇயக்குமுறைகளுக்கு மெதுவாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு மெனப்புரட்சி மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது.
[7]
சங்கர் ஏற்கனவே
* HTML, CSS, DOM
* Kerberos
* Altair BASIC
* SMB networking
* Indirect control of the IBM compatible PC architecture
* Media Transfer Protocol
* C++
* JavaScript
* Java
முதலிய ஆட்டினைச் சாப்பிடடு ஏப்பம் விட்டபுலியின் வாயில் மற்றொரு ஆடு (செய்தியோடை).இந்த ஆட்டையும் புலி என்னசெய்யப்போகிறது என்று சொன்னால் உங்களுக்கு அழுவதுபோலவா உள்ளது? தடுப்பூசி போடும் மருத்துவராக வெங்கட் இந்தப்பதிவினை எழுதியுள்ளார்.மைக்ரோசாப்ட் சுனாமி தாக்கப்போவது பற்றிய முன்னோட்டப்பதிவாக இதைப்பாருங்கள்.
[10]
mannikkavum ravishankar. naan pothaam podhuvaaga solli irukka koodaadhu. idhaip patri ezudha muyalgiren. meanwhile, the link u gave (vcnet.com) does not work. can u chk it?
[11]
http://www.vcnet.com/bms/departments/catalog/yrcatalog.shtml…
[1]
///////////////
கேட்பதற்கு பயமாகத் தான் இருக்கின்றது. ஆனால், இந்த மாதிரி ராட்சத நிறுவனங்களுக்கெதிராக என்ன செய்ய இயலும்.
//////////////////////
இதற்கு எனது பதில்
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.
சுந்தர், நீங்கள் மட்டுமல்ல எனக்கும் முதலில் இந்தப் பயம் இருந்தது. நீச்சல் பழகுவதற்குமுன் கரையில் நின்று பயந்துகொண்டிருப்பதுபோன்று நானும் பயப்பட்டேன். ஆனால் தண்ணியில் குதித்தபின் அந்தப்பயம் தெளிந்து விட்டது.தனிமனிதன் மற்றும் குடும்ப அளவில்,அலுவலகம் உள்ளிட்ட வியாபார இடங்களில்,மாநில அளவில்,ஒரு நாட்டு அளவில் என்று மிக விரிவாக எழுத ஆசை. அது பற்றி மிகவிரைவில் எனது பதிவில் எழுதுகிறேன். ஆனால் வெங்கட் போன்றவர்கள் அதை பற்றி இன்னும் எழுதினால் இன்னும் சிறப்பு.
தொடரும்..
தொடர்ச்சி…
இதில் நாம் என்ன செய்ய இயலும் என்பதைவிட செய்தவர்கள் செய்ததைச் சொல்கிறேன்.
———————————————–
நமது அண்டைமாநிலமான கேரளா எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக ஒரு திட்டத்தை(IT@school) ஏற்படுத்தி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.கேரளாவில் 8,9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிணி அறிவியலும் ஒரு
கட்டாயப்பாடமாக இடம் பெறுகிறது.அதில் விண்டோஸ் மற்றும் திறமூல லினக்ஸ், ஆபிஸ் மற்றும் திறமூல ஒபன்ஆபிஸ் பற்றிய பாடத்திட்டங்கள் தற்போது உள்ளன.
கேரளா முழுவதும் சுமார் 2600 மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் மைக்ரோஸாப்ட் விண்டோஸ் , ஆபிஸ் போன்ற மூடப்பட்ட வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் செலவு சுமார் 100 கோடிகள். மென்பொருள் உரிமம் மட்டுமே. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இந்த ஆண்டு 8ம் வகுப்பு கணிணி அறிவியல் முழுவதும் திறமுல செயலிகளுக்கு மாறுகிறது, அடுத்த ஆண்டு 9 ம்வகுப்பு அதற்கு அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு. அதனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 8,9,10ம் வகுப்புகள் முழுவதும் திறமூலம் சார்ந்த படிப்பே.
எனவே வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் அந்த 100 கோடியை திறமூல முறையினில் மிச்சம் செய்து, அதை கணிணி ஆசிரியர்களுக்குத் திறமூலப் பயிற்சி மற்றும் பொதுக்கட்டமைப்பு முன்னேற்றம் என பயனுள்ள வழியில் செலவிடுகின்றனர்.Model Engineering College, எர்ணாகுளத்தில் மே 16 முதல் ஜூன் 4 வரை 200 பேருக்குத் திறமூலமென்பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. இவர்கள் ஒவ்பொரு மாவட்டத்திலும் உள்ள 4,000 பேர்களுக்குப் பயிற்சி அளிப்பர்.
தொடரும்…
தொடருகிறது…
ஏற்கனவே கோவாமாநில அரசு உபயோகமற்ற பழைய கணிணிகளில் எப்படித் திறமூலமென்பொருள்களால் அதை உபயோகிக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.
கேரளா அரசின் கல்வித்துறை மே 28 முதல் 30 வரை கொச்சி டெக்னோபார்க்கில் பிரேசில், வெனிசுலா, இத்தாலி நாட்டினரோடு ஒரு கலந்தாய்வுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மற்றவர்கள் ஏற்கனவே பள்ளிகளில் திறம்மூல மென்பொருளை பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவர்கள்.
இப்போழுது சொல்லுங்கள்.. கேரளாவில் 10ம்வகுப்பு மாணவன் திறமூல மென்பொருள்களை பயன்படுத்துவதில் முண்ணணியில் உள்ளனர். ஆனால் நாம் இன்னும் யோசித்துக்கொண்டே (தூங்கிக்கொண்டு) இருக்கிறோம்……..
அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாடநூலைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
http://education.kerala.gov.in/tamil_infortec.htm…
இந்தத் தளத்தில் மலையாள, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடத்திட்ட 10ம் வகுப்பு நூல்கள் உள்ளன.
தமிழ்வழிப்பாடத்திட்டத்தில் கணிணி மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள். மிகவும் அருமை.
லினக்ஸ், ஒபன் ஆபிஸ் மற்றும் உலாவிகள் தமிழிலேயே நம்மிடம் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் இதைப் படிப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இருக்கப் போவது இல்லை. தமிழ்நாட்டில் எப்போது இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை அமல் செய்யப் போகிறார்கள்?
இவைகள் அமல்செய்யப்பட வேண்டும். அதுதான் திறமூலங்களுக்காக சுயநலமில்லாமல் பாடுபடுபவர்களுக்கு நாம் செய்யும் நன்றி.
இலவசமாக மீன்கள்(புத்தகங்கள்) கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எவ்வளவோ மேல்..
மேலும் விபரங்களுக்கு
http://www.hindu.com/2005/05/24/stories/2005052410940400.htm…
[6] AJAX-ஆல் WAI-க்கு என்ன பிரச்சினை? வெப் சர்வீஸசை AJAX-ம் பயன்படுத்திக் கொள்ளும் தானே.. நீங்கள் எந்த விதமான WAIஐ குறிப்பிடுகிறீர்கள்?
[15] தமிழ்நாட்டில் 11,12 வகுப்புகளுக்கு StarOffice, Java, C++ போன்றவை சில வருடங்களுக்கு முன்னரே (1998..?) அறிமுகப்படுத்தப்பட்டன.
[17]சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சுதர்சன்.
இருந்தாலும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் விருப்பப்பாடமாக உள்ளதாக நினைவு. அவைகள் 8ம் வகுப்புமுதல் கட்டாயப்பாடமாக எல்லோருக்கும் இருந்தால் நல்லது.கணிப்பொறி வாழ்வின் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி எவ்வளவோ நாளாகிறது.மேலும் http://www.tn.gov.in/gorders/sedu-e-46-2004.htm… இந்தத் தமிழக அரசாணையின் படி (5.4. To introduce Computer Science as one of the subject from IX standard to start with and later on be extended from VI to VIII standard. ) தமிழகத்திலும் வரும் கல்விஆண்டுமுதல் 9ம் வகுப்பிலிருந்து பாடமாகிறது என்ற நல்ல செய்திவந்துள்ளது. பாடத்திட்டம் செய்பவர்கள் கண்டிப்பாக திறமூலமென்பொருள்களை அதன் நன்மைகளைக்கருதி அதிகளவு (100%
) வைக்கவேண்டும் என்பது எனது ஆசை.
http://www.tn.gov.in/schsyll/ இந்தச் சுட்டியில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பாடத்திட்டம் இல்லை. யாரவது சொன்னால் மிகவும் நல்லது.
[1] [2] – நன்றி! வழக்கம்போல வேலைப்பளுவினால் ஒரு நாள் இந்தப்ப்க்கமே வரமுடியவில்லை.
[5] – வழக்கம்போல மைக்ரோஸாப்ட்டுக்குக் கண்மூடித்தனமான சர்ப்போர்ட்
பாலாஜி, நீங்கள் காட்டியிருக்கும் சுட்டி ஒரு தனிஆள் (RSS குழுவில் முக்கியமானவர் என்றாலும் கூட) மைக்ரோஸாப்ட் நிறுவனத்தால் அழைக்கப்பட்டு ஆசைகாட்டப்பட்டது – இதுவும் வழக்கமாக நடப்பதுதான். RSS ஐ மிகவும் விரும்புபவர் என்ற முறையில் டேவ் வைனர்-க்கு அதை ஐ ஈ உடன் முழுவது பிணைக்கிறோம் என்று ஆசைகாட்டினால் (அதற்கு மேல் என்ன ஆசைகாட்டினார்கள் என்பது யாருக்கும் தெரியாது) சந்தோஷம்தானே.
ஏற்கனவே எல்லா விஷயங்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடந்தது (பவுல்ரவிசங்கர் பெரிய லிஸ்டு் எழுதியிருக்கார், நான் எழுதத்தேவையில்லை). தனி மனிதர் ஒன்றிரண்டுபேரை சரிகட்டி பின்னர் பொதுத் தரக்கட்டுப்பாட்டை குழிதோண்டிப் புதைப்பது பெரிய நிறுவனங்களுக்குப் புதிதல்ல (மைக்ரோஸாப்ட் மாத்திரமல்ல).
டேவ் – மைக்ரோஸாப்ட் என்னென்ன செய்யப்போகிறது என்று தெளிவாக விவாதிக்காதவரையில் எல்லாவிதமான அச்சத்திற்கும் இடமிருக்கிறது. ஏனென்றால் மைக்ரோஸாப்ட்டின் வரலாறு அப்படி.
பவுல் ரவிஷங்கர் – உங்களுடைய பல கருத்துக்கள் என்னுடையவற்றை முழுதுமாகப் பிரதிபலிக்கின்றன. கேரளா பற்றிய உங்கள் பல தகவல்களுக்கு நன்றி. உங்கள் சுட்டியை முழுவதும் படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.
கற்பித்தலில் திறமூலம் மிகவும் முக்கியமானது.
pavulravishankar, your vitriol aside, it is pretty clear that both you and Venkat don't know anything about what M$ is doing to RSS and even if RSS is a standard that allows plug-ins and extensions
I also take it from all your tangential stuff about Kerala, Venezuela, malaysia, singapore, gopal palpodi etc that you are interested in linux because it is free as in beer. I am lucky that there are guys unlike you who are willing to pay for code written.
I also guess you were typing all this from a machine running on leon-1 and not on "evil" chips like Intel or AMDs which are not open source. I guess you also own all the code for every embedded software in your car (I guess you wouldn't pay a dime for that either).
I pity that half-baked guys like you are the vocal OSS fan boys
[16] மன்னிக்கவும், EAI-யையும் WAI-யையும் சேர்த்து குழப்பிவிட்டேன்.
bb- போஸ்டன் பாலா-வா?
Pavul ravishankar, did you see the matriculation syllabus? Computers from std III. Open Source/Linux intro in std IX. Tamil computing includes sending email through murasu anjal. Overall the syllabi is based on windows/MS products. I am sure BB will welcome that. I welcome it too. The kids will soon get to know what is not good, though the hard way.
[23] Overall the syllabi is based on windows/MS products. I am sure BB will welcome that.
I don't care
If they learn Pascal, that is fine. I won't ask them not to learn Pascal just because the Borland compiler is not open source.
That's the difference between these pseudo-zealots and me. Horses for the courses. Learn whatever will help you without worrying about whether you have the source code for it or not. If your intention is to cut costs, then you are really looking at it from free as in beer, aren't you?
Let's talk when these zealots decide not to use any of Intel or AMD's chips.
[24]
///
pavulravishankar, your vitriol aside, it is pretty clear that both you and Venkat don't know anything about what M$ is doing to RSS and even if
RSS is a standard that allows plug-ins and extensions
அன்பு நண்பர் பாலாஜி (bb),
நீங்கள் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால் காசியின் இந்தக் கட்டுரையைக் கண்டிப்பாகப் படித்திருப்பீர்கள். http://kasi.thamizmanam.com/?item=89…(கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கோங்க). அதில் காசி CSS என்ற ஸ்டைல்ஷீட் தொழில்நுட்பத்தை W3C தரநிர்ணயம்
பற்றியும் அதை மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டும் எப்படி கடித்துக் குதறுகிறது என்பது பற்றியும் ரெம்பவும் தெளிவாக எழுதியுள்ளார். இன்னும் விளக்கமாக அறிய ttp://www.positioniseverything.net/index.php இந்தத் தளத்திற்கு சென்று பார்க்கவும். நாளை இது போல (மைக்ரோசாப்ட்) RSSக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்?
எனக்கு RSSல் மைக்ரோசாப்ட் நீட்சி மட்டுமே செய்யப்போகிறது என்பதும், என்ன நீட்சி செய்யப்போகிறது என்பதும் தெரியும். இதைப்போலவே MITயில் உருவான Kerberosல் நீட்சி செய்து விண்டோஸ் 2000ல் உபயோக்கிக்கப்போகிறேன் என்று சொல்லீட்டு மைக்ரோசாப்ட் என்ன செய்ஞ்சது என்பதை கூகிலாண்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ஒன்னு , http://www.economist.com/displayStory.cfm?Story_ID=298112…
இதைத்தவிர்த்து மற்றவைகளுக்கு எல்லாம் என்பதில் , Horses for the courses
நன்றி பாலாஜி. ஆமாம் நீங்க சொன்னதேதான்.
எல்லாத்துக்கும் மேல நாங்க ஏன் திறமூலம், தளையறு மென்பொருள்களுக்கு ஆதரவு தர்ரோம்னு தெரியுமா? இதில நான் சொல்றதுக்குப் புதுசா ஒண்ணும் இல்ல? வெங்கட் ஏற்கனவே 4 1/2 வருசத்துக்குமுன்னாடி இருந்துட்டே சொல்லீடு வர்றாரு. என்னோட நிலைப்பாடும் அதேதான்..(நன்றி திண்ணை. http://www.thinnai.com/science/sc111901.html…)
இன்றைக்குப் பிழைப்பிற்காக பல ஆயிரக்கணக்கான் மைல்கள், கடல் கடந்து வாழும் நம் எல்லோரையும் ஒன்றிணைக்க சில வழிகள்தான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று நம் தாய்மொழியில் கணினி (மற்றும் அறிவியல்) முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது
1. நான் தமிழகத்தில் தொடக்கக் கல்வி கற்றேன். என்னுடைய படிப்புக்கு அரசாங்கம் (அதாவது நம் சமூகம்) எவ்வளவு உதவியது என்பதை நான் இப்பொழுது உணர்கின்றேன். என்னாலான வகையில் மறுநன்றியாக என் சமூகத்திற்குச் சிறிய உதவி இது.
2. நான் தமிழை நேசிக்கிறேன், அது ஒரு நல்லமொழி என்று எண்ணுகின்றேன். உலகின் பழம்பெரும் மொழியான அதனால் இன்றைய தகவல் புரட்சியையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்த வகையில் இது.
3. உலகின் மற்ற நாடுகளையும் சமூகங்களையும்விட எந்த வகையிலும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை நாம்; எனினும் நம் சமூகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. இது மாறவேண்டுமென நான் விரும்புகின்றேன். வெறும் சொற்களால் புலம்புவதைவிட யாருடைய தடைகளும் இன்றி என்னாலான சிறிய பங்களிப்பு இது.
4. லினக்ஸ் ஒரு சக்திவாய்ந்த இயக்குதளம் இதற்குப் பங்களிப்பதாகத் தொடங்கினால் விரைவில் இதன்மூலம் கணினி நுட்பத்தின் பலகூறுகளை நான் கற்க முடியும். ஆணைமூலங்கள் திறந்தனவாகக் கிடைப்பதால் என்னால் ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண முடியும். என்னுடைய அறிவு வளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இதனால் என்னுடைய வேலைவாய்ப்புச் சாத்தியங்களும் அதிகரிக்கின்றன.
5. இவ்வாறு தொடங்கிய நான் இதிலுள்ள பல குறைகளைக் கண்டிருக்கின்றேன்; இதற்கு யார்வேண்டுமானாலும் நல்ல தீர்வை முன்வைக்க முடியும் என்பதால் என்னுடைய தீர்வைக் கூறினேன். பலராலும் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைக்கு என் சிந்தனையில் உருவான ஒரு சிறிய கருத்து உலகெங்கிலும் உள்ள லினக்ஸ் பயனர்களின் வேலையை எளிதாக்குவதை அறிகின்றேன். இது எனக்கு அளவிட முடியாத மனநிறைவைத் தருகின்றது.
6. எனக்கு கணினிகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது, எனினும் நான் விபரம் தெரிந்தவர்கள் வேறு மொழியில் எழுதிய உதவிக் கட்டுரைகளை என்னுடைய மொழியில் மாற்றினேன். இப்பொழுது இது என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கின்றது.
7. சிந்தனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிந்தனையில் உதித்த எண்ணங்களுக்கு ஏன் விலை. அடிப்படை கணக்கு/அறிவியல் விதிகளைக் கண்டுபிடித்தவர்கள் அதைப் பிறர் பயன்படுத்த விலை விதித்திருந்தால் இன்றைக்கு நம் அறிவு இந்த அளவிற்கு மேம்பட்டிருக்குமா? நான் எனக்கு முந்தைய பல அறிஞர்களின் தோள்களில் நின்றுகொண்டிருக்கின்றேன் – என்னுடைய தோளையும் பிறர்
ஏறிநிற்க வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.இப்படி பலப்பல.
http://www.thinnai.com/science/sc102901.html… முதலில் இதைப் படியுங்கள். பாலாஜி, எங்க நாட்டிற்கு அதன் எதிர்கால வளத்திற்குப் பாடுபட எதோ என்க்கு தெரிந்த வழி இந்த திறமூலம்தான Horses for the courses.
நான் எப்பவும் CLASS க்காக சிந்திக்க மாட்டேன். MASS க்காகவே சிந்திப்பேன்.
அதனாலதான் பள்ளிக்க்கூடப் பாடத்திட்டத்தைப் ப்ற்றி எழுதும் போது கூட மாநில அரசு பாடத்திட்டத்தைப் பற்றியே எழுதியுள்ளேன். கவலைப்படுகிறேன். மெட்ரிக் மற்றும் NCERTல் படிப்பவர் வீட்டிலேயே கணிணி இருக்கும். அவர்கள் எப்படியும் படித்து விடுவார்கள். நான் எப்பவும் வாஜ்பாயி மற்றும் சந்திரபாபு செய்த தப்பைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். இந்தியா கணிணித் துறையில் வளருகிறது, ஆனால் அந்த வளர்ச்சியின் பயனை எல்லாருக்கும் கொண்டு
சேர்க்கிறோமா? உலகம் கணிணி மயமாகிறது. கணிணி ஆடம்பரப் பொருளல்ல அது ஒரு அத்யாவசியமான சாதனமாக மாறி விட்டது. சாதரண மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிப்பவரே அதிகளவு உள்ளனர். அவர்களுக்கு கணிணியின் பயனை எப்படிக் கொண்டு சேர்ப்பது? யார் கொண்டு சேர்ப்பது? நாம் போதாது என்று கழித்துப் போடும் 386,486 கணிணியில் திறமூல லினக்ஸ் போன்றவைகள்தான் சிறந்த தீர்வு. திறமூலம்தான் Horses for the Courses. அக்கம் பக்கம் பாரடா சின்னராசா, ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா?
கோபால்பற்பொடி போன்று பிரேசில்,கேரளா, வெனிசுலா, இத்தாலி என்று சொல்லக்காரணம் சிலர் இன்னும் Free as in beer என்று அதன் நம்பகத்தன்மையை சந்தேகிப்பதால் மட்டுமே. ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் எங்களை இன்னும் அதி கவனத்துடன் அடி
எடுத்துவைக்கவே உதவும். உங்கள் சந்தேகங்களுக்கு பதில் தர நாங்கள் எப்போதும் தயார்.
//// I am lucky that there are guys unlike you who are willing to pay for code written.
இந்தியாவில் 70%, முன்னேறிய அமெரிக்காவில் கூட 25% இது திருட்டு மென்பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்துபவர்களின் சதவீதம். ஆக காசு கொடுத்து மென்பொருள்கள் வாங்குபவர்கள் இந்தியாவில் மொத்தம் 30%ம்தான்.நீங்கள் இந்த 70%ல் இருந்தால் முதலில் அதை
திருத்திக்கொண்டு வாருங்கள். பிறகு பேசுங்கள். உங்கள் வீட்டுக்கணிணி,மடிக்கணிணியில் பயன்படுத்தும் விண்டோஸ், ஆபிஸ், நார்ட்டன் முதலியன எல்லாவற்றீர்க்கும் நீங்கள் கொடுத்த விலையைச் சொல்லுங்கள். பிறகு எங்களைக் குற்றம் சொல்லுங்கள்.
நாங்கள் 70% திருட்டுத்தனமாக திருட்டு மென்பொருள் பயன்படுத்துபவர்களிடம் மானத்தோடு விடுதலை உணர்வோடு திறமூல மென்பொருள் பயன்படுத்தச் சொல்வதா அரைவேக்காட்டுத்தனம்..?
மற்றும் பாலாஜி உங்கள் வலைப்பூவிற்கு ( http://balaji.yi.org/blog/index.php?blogid=1… ) Horses for the Courses ரீதியில் திறமூல நீயுக்ளியஸ் பயன்படுத்துவது குறித்து மகிழ்ச்சி
. உங்களைப்போலவே நானும் எனது 1 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு ஒரே ஒரு தனிநிறுவனத்துக்கு அடிமையாகமல் தன்னிரைவு அடையப் பாடுபடுவர்களுக்காக அணிலாகப் பாடுபடுவதை அரைவேக்காட்டுத்தனம் என்கிறீர்களா? அதற்கு நாங்கள் இப்பொழுது ஏற்றதாகக் கருதுவது திறமூலம். அதைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு மாற்று உங்களால் கூற முடியுமா? இருந்தால் கூறுங்கள். எனக்குப் போய்ச்சேரும் இடம்தான் முக்கியம். போகும் முறையல்ல.
[20]
அன்பு ஆசான்(தல
) வெங்கட் அவர்களுக்கு,
1. எங்களைப் போன்றவர்களுக்கு திறமூல அரிச்சுவடியாகத் திகழ்வது நீங்கள் திண்ணையில் எழுதிய "ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது?" என்ற தொடரே.. அதைத் தயவு செய்து உங்கள் வலைப்பூவில் மறுவலைப்பதிவு செய்யுங்கள். திண்ணையை நாங்கள் காலி செய்து எவ்வளவோ நாளாகி விட்டது..
2. அதை எல்லோரும் பயன்படுத்தவும், மற்றவர்களுக்குக் கொடுக்கவும், எல்லோரும் அவரவர்களின் கல்லூரி, பள்ளி , வேலைவாய்ப்புக் குழுமங்களில் பயன்படுத்த ஏற்றவாறு PDF தரத்திற்கு மாற்றவும். அதை எல்லோரும் நகலெடுத்துப் பயன்பட ஏற்றவாரு திறமூலஆவணமாக்குங்கள்.
3. Wikiல் ஏதாவது ஒரு வகைப்படுத்தலில் பதிவேற்றம் செய்யவும்.
4. என்னைப்போன்றவர்கள் தங்கள் ஒய்வு நேரங்களில் லினக்ஸ் பற்றி எழுதத் தடையாக இருப்பது கலைச் சொற்களே.. அதை ஒரு பொதுத் தரத்திற்கு ஏற்றவாரு ஒரு பட்டியல் தயார்செய்து அதில் தாங்கள் அறிவியல் மொழிநடையப் பற்றிய கட்டுரைகளையும் அறிவியல் மொழி பெயர்ப்பு பற்றிய கட்டுரையும் இணையுங்கள்.
இதற்கு தங்களுக்கு நேரக்குறைபாடு இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும். நான் உங்கள் வழிகாட்டுதலோடும்,அனுமதியுடனும் நான் செய்கின்றேன்.
எனது மின் அஞ்சல் முகவரி paulravisankar (அட்) ஜிமெயில் டாட் காம்
[31]பவுல்ரவிசங்கர் – உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. திண்ணையில் நான் எழுதிய திறமூல அறிமுகத் தொடரை நீட்டித்து, இற்றைப்படுத்தி ஒரு முழுப் புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இது விரைவில் வெளிவரலாம்.
இந்தத் திருத்தங்களில் ஈடுபட்டிருப்பதால் என்னால் இவற்றை இப்பொழுது இணையத்தில் தர நேரமில்லை. உங்களுக்குத் தனியே எழுதுகிறேன்.