மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிப்பெட்டிகள்
by வெங்கட் • August 9, 2005 • அறிவியல்/நுட்பம் • 4 Comments
இன்றைய இந்துவில் வெளியாகியிருக்கும் இந்தச் செய்தி ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களுக்காக மகிழ்ச்சி தருகிறது. சத்யம் அமைப்பும், எயிட்-இந்தியா தன்னார்வக் குழுவும் இணைந்து வெளியிடும் இந்த அறிவியல் சாதனத் தொகுப்பில் அறிவியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள கிட்டத்தட்ட 300 சிறு சோதனைகள் இருப்பதாச் செய்தி கூறுகிறது. சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள்;
1. மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கானது. பல அற்புதமான, புத்திசாலிக் குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் போதுமான வாய்ப்புகள் இல்லாமல் சரியாக முன்னேறுவதில்லை. இது ஓரளவுக்காவது அந்தத் தேவையை நிறைவு செய்யும் என்று நம்பலாம்.
2. ஐஐடி, மேட்-சயின்ஸ் மாணவர்கள்/ஆசிரியர் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இதுபோன்ற சமூக மேம்பாட்டு, அறிவுப் பரவலாக்கத் திட்டங்களில் உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாகப் பங்குபெறுவது முக்கியம். அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
3. இந்துவில் இருக்கும் படத்தில் “யுரேகா பரிசோதனைப் பெட்டி” என்று தமிழில் தெரிகிறது. எனவே இந்தப் பெட்டியில் இருக்கும் கருவிகளுக்கான செய்முறை விளக்கங்கள் தமிழில் இருக்கும் என்று நம்புகிறேன். இது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம்.
இது குறித்த மேலதிக விபரங்களை யாராவது சொன்னால் சந்தோஷம். எயிட்-இந்தியாவின் தளத்தில் எந்தத் தகவலும் இல்லை. சத்தியம் பவுண்டேஷன் தளத்திலும் இல்லை. பெட்டிக்கு ஐயாயிரம் ரூபாய்கள் ஆகின்றன என்று தெரிகிறது. இதன் உள்ளடக்கம் தெரிந்தால், இன்னும் சில எளிமையான, மலிவான விஷயங்களை இதில் சேர்க்க ஆலோசனைகள் தரமுடியும். லேசர் பாயிண்டர், உடைந்த குறுவட்டு (சிடி) இவற்றை வைத்துக் கொண்டு பல ஒளியியல் விஷயங்களை, +2 மாணவர்களுக்குக் கூட ( விளக்க முடியும். அதே போல பழைய ஃபோட்டோ பிலிம், சர்க்கரைக் கரைசல், லேசர் பாயிண்டர் கொண்டு இன்னும் சில அற்புதமான சோதனைகளைச் செய்ய முடியும்.
மன நிறைவு தரும் செய்தி.
//மன நிறைவு தரும் செய்தி.//
//மன நிறைவு தரும் செய்தி//
நான் படித்த தொடக்கப்பள்ளியிலும் இப்படி ஒரு மஞ்சள் நிறப்பெட்டியில் நிறைய கருவிகள் இருக்கும். ஆனால் யாரும் அதை மாணவர்களுக்கு பயன்படுத்தினார்களா எனத் தெரியவில்லை. ஆனாலும் நல்ல முயற்சி! தகவலுக்கு நன்றி!
// லேசர் பாயிண்டர், உடைந்த குறுவட்டு (சிடி) இவற்றை வைத்துக் கொண்டு பல ஒளியியல் விஷயங்களை, +2 மாணவர்களுக்குக் கூட ( விளக்க முடியும். அதே போல பழைய ஃபோட்டோ பிலிம், சர்க்கரைக் கரைசல், லேசர் பாயிண்டர் கொண்டு இன்னும் சில அற்புதமான சோதனைகளைச் செய்ய முடியும் //
Can you write about them? (or point to, if they have been already written about?). I have some friends who work with school teachers on developing teaching aids for science education, and they will find it very useful.
நான் படித்த பள்ளியில் (எங்கள் குக்கிராமத்தில்) 10 ஆவது வரை ஒரு ஆய்வுக்கூடம், பாதரசம்னா எப்படி இருக்கும், ஒரு சில ஜந்துக்களை எப்படி பதப் படுத்திவைக்கமுடியும் இப்படிச் சிலவற்றையன்றி மற்றவற்றை நான் பார்த்தது கிடையாது. இதைப் படிக்கையில் சிறிது சந்தோசமாக இருக்கிறது.
நன்றி வெங்கட்.
சாரா