• மத்திய அரசுக் குறுவட்டும் கருணாநிதியும்

    by  • April 22, 2005 • பொது • 4 Comments

    CDAC CD Cover
    ஒரு வழியாக சி-டாக்கின் தளத்திலிருந்து கடவுச்சொல் இதியாதி எல்லாம் இல்லாமல் எப்படி குறுவட்டு சமாச்சாரங்களைத் தரவிறக்குவது என்று நோண்டிக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய shell script எழுதி என்னுடைய லினக்ஸ் வழங்கியில் இறக்கப் போட்டு ஒட்டுமொத்தமாக 90% இறங்கிவிட்டது.

    குறுவட்டின் முகப்புகூட இறங்கிவிட்டது. இப்பொழுதுதான் சரியாகப் பார்க்கிறேன். இதில் மன்மோஹன் சிங், சோனியா காந்தி, கருணாநிதி, தயாநிதி மாறன் ஆகியோரின் படங்கள் இருக்கின்றன. முதலும் கடைசியும் புரிகிறது. சோனியா காந்தி ?? ஆளும் கட்சித் தலைவி, வெளியிலிருந்து காக்கும் காவல் தெய்வம் அதைக் கூட (காலரைக்கால் மனதுடன்) புரிந்து கொள்ளமுடியும்.

    இதில் கருணாநிதியின் படம் ஏன்? யாராவது விளக்குவார்களா? அவர் மத்திய அமைச்சரும் இல்லை, மாநில முதல்வரும் இல்லை, இவருக்கும் மத்திய அமைச்சு காசு செலவழித்து வெளியிடும் சிடிக்கும் என்ன தொடர்பு?

    வெட்கங் கெட்ட விளம்பரம்!! இதற்கெல்லாம் யாரும் பொதுநல வழக்கு போடமாட்டார்களா?

    4 Responses to மத்திய அரசுக் குறுவட்டும் கருணாநிதியும்

    1. just
      April 22, 2005 at 1:38 pm

      உங்கள் கேள்வி எல்லாம் சோனியாவுக்கும் பொருந்தும்…அதென்ன சொனியாவுக்கு தனி நீதி.

    2. April 22, 2005 at 1:51 pm

      [1] Just, கட்டாயமாக. சோனியாவும் விலக்கில்லை. நெறிமுறைகளின்படி பார்த்தால் அவருக்கும் இடமில்லை. (நான் தனிப்பட்ட முறையில் எல்லா படங்களையும் எதிர்க்கிறேன்). இருந்தாலும், நம் கேவலமான அரசியல் நடைமுறை பாரம்பரியத்தை மனதில் வைத்துதான் அதை எழுதினேன். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது (ஒத்துக் கொள்வதாக அர்த்தமில்லை).

      மாநில அரசில்கூட இல்லாததால்தான் கருணாநிதி எங்கே வந்தார் என்று கேட்டேன்.

    3. April 22, 2005 at 5:36 pm

      இதெல்லாம் நாகரீகமாக (அப்படின்னா…?) இல்லையென்று இப்படிப் போடுபவர்களுக்குத் தெரியமாட்டேன் என்கிறது. :(

    4. ag
      April 25, 2005 at 12:23 pm

      Sonia IS in the central govt. She is the chairperson to implement common minimum programme. I beleive that position is equivalent to a cabinet position. I cannot say that will justify her picture in CD.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *