பொருளாதாரச் சுதந்திரம் :: தமிழகம் முதலிடத்தில்
by வெங்கட் • November 12, 2005 • பொது • 1 Comment
பிஸினஸ் ஸ்டாண்டார்டின் இந்தக் கட்டுரை பொருளாதாரச் சுதந்திரத்தில் இந்திய மாநிலங்களுக்குள்ளே தமிழகத்தை முதலிடத்தில் வைக்கிறது.
மூன்று முக்கிய தலைப்புகளின் அடிப்படையில் இந்த் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
- அரசாங்கத்தின் அளவு – வருமானம், செலவு, மாநில உற்பத்தித்துறையில் அரசின் பங்கு, சக்தி உதவித் தொகை, அமைப்பு ரீதியான வேலைகளில் அரசின் பங்கு, …
- சட்ட அமைப்புமுறையும் சொத்துரிமை பாதுகாப்பும் - திருடப்பட்ட சொத்துக்களின் மீட்டெடுப்பு, கொடுங்குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள்,…)
- கடன், வேலை மற்றும் வாணிக ஒழுங்கமைப்பு (குறைந்தபட்ச ஊதியம், வேலைநிறுத்தத்தின் இழப்புகள், உரிமக் கட்டணங்கள், இலஞ்ச ஊழல் கைதுகள், …)
அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த ஆய்வு புதுதில்லியில் இருக்கும் ராஜீவ் காந்தி சமகால ஆய்வு மையத்தைச் சேர்ந்த பிபேக் தேப்ராய் மற்றும் லவீஷ் பண்டாரி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆய்வுகளின்படி தமிழகத்திற்கு முதலிடமும் கிடைத்திருக்கிறது. குஜராத் இரண்டாமிடத்திலும் கேரளா மூன்றாமிடத்திலும் இருக்கின்றன. உத்ராஞ்சலும், அஸாமும் கடைசி இரண்டு இடங்களில். கடந்த வருடம் ஐந்தாவது இடத்திலிருந்த தமிழகம் இந்த வருடம் முதலிடத்திற்கு வந்திருக்கிறது.
போனமுறையே குஜராத்திற்கு சோனியாவின் மேற்பார்வையில் உள்ள ராஜிவ் காந்தி மையம் முதலிடம் கொடுத்தது பிரச்சனையானது. இம்முறையும் பார்க்கலாம்.