• பிபிஸி தமிழோசையில் என்னுடைய பேட்டி

    by  • January 25, 2005 • பொது • 13 Comments

    அரைமணி நேரத்திற்கு முன்பு லண்டன் பிபிஸி தமிழோசையிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு 2005 ஆம் ஆண்டு இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டதைப் பற்றி ஒரு பேட்டியைப் பதிவு செய்தார்கள்.

    இது இன்றைக்கு 15:15 UTC (GMT) -க்கு முதல் முறையாக ஒலிபரப்பாகும் என்று சொன்னார்கள். இந்திய, இலங்கை நேரம் இரவு21:15; அமெரிக்கக் கிழக்கு மாநிலங்களில் காலை 10:45 கனேடியத் தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, இலங்கையில் சக்தி எ·ப் எம் உட்பட பல வானொலிகள் தமிழோசையை மறு ஒலிபரப்பு செய்கின்றன. இதை அவர்கள் இணையதளம்

    http://www.bbc.co.uk/tamil/index.shtml

    மூலம் அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்திற்குக் கேட்க முடியும்.

    முன்னறிவிப்பு இல்லாமல், மிக மிக அவசரமாக, வேலைநாளின் காலை நேரத்தில் பேசியது, எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    13 Responses to பிபிஸி தமிழோசையில் என்னுடைய பேட்டி

    1. karthikramas
      January 25, 2005 at 10:48 am

      வெங்கட், ஆபீஸ் நேரத்தில் கேட்கமுடியவில்லை, கோப்பாக சேமித்து உங்கள் வலைப்பதிவில் ட்வெளியிடமுடியுமா?

    2. karthikramas
      January 25, 2005 at 10:50 am

      24 நான்கு மணிநேரத்துக்கு கேட்கமுடியுமென்றால் , மாலை கேட்கிறேன்.

    3. ரோஸாவசந்த்
      January 25, 2005 at 11:45 am

      http://www.bbc.co.uk/tamil/index.shtml… க்கு போய் தேடி பார்த்தேன். உங்கள் பேட்டி கண்ணில் படவில்லை. நேரடி சுட்டி தரமுடியுமா? (வேறு யாராவது கேட்க நேர்ந்தால் கூட..) நன்றி!

    4. January 25, 2005 at 1:53 pm

      i'v also tried. but i couldn't get it in the site. all the files will be in .rm format only.. can u put it in ur blog?

    5. January 25, 2005 at 2:04 pm

      I have grabbed the real stream in wav format. Will go home and convert this to mp3 (popularity) and real audio (small file size) and upload.

      Right now, it is available in BBC site (shown above). Click on the top right corner link for listening, it will open a new window. Again click in the "thamilosai" link (shown in the white box in the right side). It will run the real stream (you need real player though)

    6. January 25, 2005 at 3:31 pm

      வெங்கட்,

      தகவலை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி. நீங்கள் இதற்கு முன் (பிபிஸிக்கு) அளித்திருந்த பேட்டியை கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (பேட்டியளித்திருந்ததாக எங்கோ படித்த நியாபகம்).

      சிறிது நேரமேயானாலும் தெளிவான உச்சரிப்பில் அழகாக பேசியிருக்கிறீர்கள். தடங்கலின்றி சுத்தமான தமிழில் உங்கள் எழுத்தை போலவே சிறப்பாக வந்திருக்கிறது பேட்டி.

      ஒரு சின்ன சந்தேகம். முன்னறிவிப்பு இல்லாமல் கேள்வி கேட்டாலும் உங்களால் தெளிவான விளக்கங்கள் அளிக்க முடியும் என்பது திடம். ஆனால் பேட்டி காண்பவர் இவ்வளவு சீராக கேள்விகள் கேட்க முடியுமா? அல்லது கேள்விகளையும் நீங்களே கொடுத்து கேட்கச் சொன்னீர்களா? அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேனே அன்றி தவறாக நினைத்து விட வேண்டாம்.

    7. bb
      January 25, 2005 at 3:34 pm

      I listened to it in the BBC site. Very well spoken, great clarity, no searching for words, saraLamaana thamizh. I wasn't impressed with the interviewer. He cut you off once, was loud.
      Venkat, looks like you were talking about duality of light instead of specifically photoelectric effect. Einstein was not the first to talk about photons (Planck was).

    8. January 25, 2005 at 3:38 pm

      உங்கள் பழைய பேட்டியை தேடிக் கண்டு பிடித்து விட்டேன். http://www.domesticatedonion.net/myblog/index.php?itemid=493… . ஆனால் அதிலுள்ள சுட்டி வேலை செய்யாததனால் கேட்க முடியவில்லை.

      உங்கள் தளத்திலோ அல்லது இணையத்தில் வேறெங்காவதோ அந்த பேட்டி கிடைக்கிறதா? கிடைத்தால் அதற்கான சுட்டியினை அளிக்க முடியுமா?

      நன்றி

    9. January 25, 2005 at 6:01 pm

      பிபிசி இணைய தளத்திலுள்ள 29:57 நிமிடங்கள் கொண்ட ஒலிப்பதிவின் 22:40 நிமிடத்திற்குச் சென்றால் (ரியல் ப்ளேயரில் திருகை இழுத்துச் செல்லவும்) செவ்வி ஆரம்பிப்பதைக் கேட்கலாம்.
      வெங்கட், குறைந்த அவகாசத்திலும் நன்றாகவே செய்துள்ளீர்கள். ஆரம்பத்தில் e=mc(2) என்பதைப் பற்றிக் கேட்பதாகக் கூறிவிட்டு கேள்வியாளர் பாதையை மாற்றிவிட்டாரே?!

    10. January 25, 2005 at 8:17 pm

      நவன் – தமிழ் லினக்ஸ் பற்றி பிபிஸிக்கு அளித்த பேட்டியை நாளை நிரந்தர வழங்கியில் போடுகிறேன்.

      காலை வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் வழியில் செல்பேசியில் திரு ரமேஷ் தொடர்பு கொண்டார். திண்ணையில் வந்த கட்டுரையைப் பார்த்ததாகவும் அதைப் பற்றி பிபிஸிக்கென சொல்லவேண்டும் என்றும் சொன்னார். பின்னர் அலுவலகம் போய்ச்சேர்ந்தவுடன் மீண்டும் அழைத்துப் பதிவு செய்தார்.

      அவர் திண்ணை அறிவிப்பைப் படித்திருந்ததால் கேள்விகள் கோர்வையாக இருந்திருக்கிறது. மேலும் இயற்பியல்::2005 தளத்தில் இதுவரை போடப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் படித்ததாகச் சொன்னார் (தாகூர் -ஐன்ஸ்டைன் உரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்ததாகச் சொன்னார்). மற்றபடி எனக்கும் அவருக்கும் இடையே எதுவும் பேசி வைத்துக் கொண்டு கேட்கவில்லை.

    11. January 25, 2005 at 8:26 pm

      பாலாஜி – ஆமாம், கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. நான் முதலில் ஒளிமின் விளைவு (Photoelectric effect) பற்றி சொன்ன பகுதி எடிட் செய்யப்பட்டுவிட்டது (பொதுவில் அதிகம் எடிட் செய்யப்படவில்லை, மொத்தம் பதிவு செய்தது பத்து நிமிடங்கள் இருக்கும்). அதைத் தொடர்ந்துதான் நான் இருமை பற்றி பேசினேன். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்பு ஒளியைத் துகள்களாகவும் பார்க்க வழிசெய்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.

      இதேபோல கடைசியில் அறிவியலில் ஆர்வம் குறைந்து வருவதாகக் கேட்ட கேள்விக்கு நான் பிற முன்னேறிய நாடுகளிலும் இப்படித்தான் என்று சொல்லியிருந்தேன். குறிப்பாக, பிற நாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்றும் இந்தியாவில் மாணவர்களுக்கு அதிக உரிமை கிடையாது பெற்றோர்கள்தான் பெரிதும் தீர்மானிக்கிறார்கள் என்றும் பொருள்படச் சொல்லியிருந்தேன். முதல் பாகம் ஒலிபரப்பாகவில்லை.

      என்ன செய்யறது, அவசரம். கூடவே நான் கொஞ்சம் நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் Acid Reflux, காலையில் சாப்பிடாததால் அதிகம் படுத்திவிட்டது. எனவேதான் பதற்றத்தில் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டு எழுதினேன்.

    12. January 25, 2005 at 8:29 pm

      ரோ.வ, கார்த்திக், ராம்கி – உங்களுக்காக என்னுடைய ஆய்வகத்தில் இருக்கும் வழங்கியில் போட்டிருக்கிறேன். சிக்கல் இருந்தால் சொல்லவும்.

      ராதா, ஆரம்பத்தில் அவர் சொல்லும் E=mc2 நான் சொன்னதிலிருந்து எடிட் செய்து எடுத்து அவர் அறிமுகமாகச் சொன்னது. இது பதிவு செய்ததன் பின் அறிமுகமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

    13. நவன் பகவதி
      January 26, 2005 at 9:46 am

      நன்றி வெங்கட்.

      லினக்ஸ் பேட்டியை கேட்கும் ஆவலுடன்,
      நவன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *