பின் தொடரும் நவீனத்துவத்தின் குரல்
by வெங்கட் • November 28, 2005 • ஜப்பான் • 12 Comments
<%image(20051128-toto_mp3_full.jpg|419|211|தொத்தோ எம்பி3)%>
2001ல் பின் நவீனத்துவம் – ஜப்பானிய கழிவறைகளின் மீதான ஒரு ஆய்வு என்ற கட்டுரையை எழுதினேன். தொடர்ந்து சென்ற வருடம் அந்தக் கட்டுரையில் நான் எதிர்பார்த்திருந்ததைப் போலவே கழிவறைகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டது.
இப்பொழுது அடுத்த கட்டமாக தொத்தோ நிறுவனம் கழிவறைகளில் எம்.பி3 இயக்கிகளை இணைக்கிறது. பழைய தொழில் நுட்பத்தில் கழிவறைகளில் பொதுவாக ஒலிபரப்பபடும் இசையில் அளவைக் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளும் வசதிதான் இருந்தது. இப்போழுது பொதுக்கழிப்பிடங்கள் உங்களுக்கு இன்னும் நெருக்கமாக, உங்கள் மனதுக்குப் பிடித்தபடி மாறவிருக்கின்றன. Apricot N5A என்று பெயரிடப்பட்ட இந்த மாடலில் எம்.பி3 இயக்கி இருக்கிறது. இந்த இயக்கியில் காம்பாக்ட் ஃப்ளாஷ் அட்டை படிக்கும் வசதியிருப்பதால் உங்களுடைய இசைத் தெரிவை நீங்களாகவே இயக்கிக் கேட்டுக்கொள்ள முடியும்.

அற்புதமான வசதி. என்னைப் போன்ற சிலருக்கு புத்தகம் படித்தால்தான் அங்கே வேலை சாத்தியமாகும். (இதற்காக எங்கள் ஊர் டாலர் கடையில் அற்புதமான புத்தகப் பெட்டி கிடைக்கிறது. இதை நீர்த்தொட்டிக்குப் பக்கத்தில் தொங்கவிட முடியும். வாரத்துக்கு ஒரு முறை இதில் பத்துப் பதினைந்து புத்தகத்தை ஒட்டு மொத்தமாக மாற்றி விடுவேன். ஒரு வாரத்துக்குக் கவலையில்லை). இன்னும் சிலருக்குப் பாட்டு கேட்டால்தான் காரியம் முடியும். இப்படிப்பட்டவர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது தொத்தோ லிமிடெட். எந்தப் பொதுக்கழிப்பிடமாக இருந்தாலும் சரி இனிமேல் மனதுக்குப் பிடித்த சங்கீதத்தைக் கேட்கமுடியும்.
அடுத்தது என்ன என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
//அடுத்தது என்ன என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? //
நான் சொல்லுவேன்… ஆனா நீங்க சென்ஸார் செஞ்சிடுவீங்க
ஏதானும் vacuum pump வைத்து குடலையும் உறிஞ்சிவிடாமலிருந்தால் சரிதான்
//என்னைப் போன்ற சிலருக்கு புத்தகம் படித்தால்தான் அங்கே வேலை சாத்தியமாகும்
எனக்கு மடிக்கணிணி..
[3]கார்த்திக் – வாட்டர் ப்ரூஃப் மடிக்கணினி எங்க கெடைக்குது ?
பாட்ற மாட்டைப் பாடிக்கறக்கணும்கெறத ஜப்பான்காரங்க நல்லா புரிஞ்சு வைச்சுருக்கானுக.
பெரெகாசு – சும்மா சொல்லுங்க, சென்ஸார்லாம் கெடயாது
//எனக்கு மடிக்கணிணி..//
.
கார்த்திக், மடிக்கணனி பாவித்தால், வேறு பிரச்சினை ஒன்றுவந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்
புத்தகங்கள். புத்தகங்கள், முக்கியமாய் சிறு பத்திரிக்கைகள், நிறைய நேரம் வாசிக்கவும், சில நேரம் துடைக்கவும்
//முக்கியமாய் சிறு பத்திரிக்கைகள், நிறைய நேரம் வாசிக்கவும், சில நேரம் துடைக்கவும் //
'பேப்பர்' கற்றுக்கொண்டதற்கே உங்களையெல்லாம் மன்னிக்க முடியாது.
நீரின்றி அமையாது உலகு.
-அருள்
//பின் நவீனத்துவம் – ஜப்பானிய கழிவறைகளின் மீதான ஒரு ஆய்வு // வெங்கட் உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்தக்கட்டுரைதான். குவியம்.காம் என்றொரு தளத்தில் வாசிததாய் ஞாபகம். 3 ஆண்டுகள் இருக்குமா?
அடுத்தது என்ன , எல். சி. டி. டீவியா?
எனக்கெல்லாம் "சிந்தனை செய் மனமே "தான் ஒத்துவரும். செய்தால் தீவினை அகன்றிடுமே…..
–
மேலே எழுதிய கார்த்திக் நான் அல்ல;ஒரு இதுக்கு சொல்றன்.
[4] [5] [9]
வாட்டர் ப்ரூஃப் மடிக்கணினியெல்லாம் ஒன்னும் இல்லை, வெங்கட்.
ஐயையோ… DJ பயமுறுத்தாதீர்கள். இப்போது வரும் மடிக்கணிணிகள் 'எல்லோரையும்' மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ஸொ,' நானும்'
கணிணியும் நலம்…
நான் karthikramas அல்ல… நானும் ஒரு 'இதுக்குதான்' சொல்லரேன்
எந்த கார்த்திக்காய் இருந்தால் என்ன (எப்படி அழைத்தாலும் ரோசா ரோசா தானே என்ற உணர்நிலையில் வாசிக்கவும்)?மடிக்கணணி பற்றிய பத்மாவின் பதிவொன்றை (சுந்தரவடிவேலும் எழுதியதாய் நினைவு) வாசித்து ஆணினத்தைக் காப்பாற்றினால் சரி
.
ஆறாண்டு கால கனடிய, அமெரிக்க வாசத்தில் காணாத super
கழிவறை டொரொன்டொவிலிருந்து சென்னை செல்லும் வழியில் தென் கொரியாவின் சோல் (Seoul) நகர விமான நிலையத்தில் காணக்கிடைத்தது. உங்கள் 2001 கட்டுரையில் குறிப்பிட்ட அளவுக்கு இல்லையென்றாலும் அதில் பாதியாவது இருக்கும்.
இதையெல்லாம் படித்துவிட்டு கழிவறைக்குச் சென்றால், அட TOTO! டொரொன்டொவிலிருப்பதும் அதே TOTO தானா தெரியாது. அதேதானென்றால், ஜப்பான் சமாசாரத்தில் 1% ஆவது எங்களுக்கும் கொஞ்சம் கண்ணுல காட்டப்படாதா?!