• நாஸா திறமூல வழியில் இணைகிறது

    by  • April 27, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    அமெரிக்க விண்ணாராய்ச்சி நிறுவனமான நாஸா தனக்குத் தேவையான பல நிரலிகளைத் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ராக்கெட்டுகளை இயக்குதல், செயற்கைக்கோள்களை ஏவுதல், விண்வெளியில் படம் எடுத்தல், பிற கோள்களில் இருக்கும் வேதிப்பொருள்களை ஆராய்தல், இன்னும் ஆளில்லா வெளியில் பல தானியங்கி கருவிகளையும் ரோபோட்களையும் இயக்குதல் போன்ற சிக்கலான பல நிரலிகள் நாஸாவுக்குத் தேவையாக இருக்கின்றன. இந்த நிரலிகள் பிழையில்லாமல் இயங்கவேண்டியது மிகவும் முக்கியம், உதாரணமாக, விண்கலனை ஏவும் நிரலி பிழையாகிப் போனால் அதிலிருக்கும் எல்லா கருவிகளுமே பயனற்றுப் போய்விடும்.

    இப்படித் துல்லியமான நிரலிகளை உருவாக்கும் நிலையில் அவற்றின் பிழைகளைக் கண்டுபிடிப்பதற்காக நாஸா ஜாவா பாத்·பைன்டர் என்ற பிழைகாணும் நிரலியை உருவாக்கியது. இது பிற ஜாவா நிரலிகளைத் துல்லியமாக ஆராய்ந்து அவற்றின் பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லும். அதாவது, நிரலியின் ஒவ்வொருகட்டமும் சரியாக இயங்கியதா இல்லையா என்ற மிக விபரமான தகவல்களைத் தரும். இதைக் கொண்டு பெரிய, சிக்கலான நிரலிகளில் பிழை இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறியமுடியும். நாஸா தன்னுடைய சமீபத்திய விண் கருவிகளின் வடிவமைப்பிற்கு இதைப் பயன்படுத்தியது.

    இப்பொழுது இந்த பிழைகாணும் ஜாவா பாத்·பைன்டர் திறமூலமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தப் பிழைகாணும் கருவியை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக இதை மேம்படுத்த, இதிலிருக்கும் குறைகளைக் களைய பிறராலும் முடியும். சொல்லத் தேவையில்லை, நாஸாவின் பணிகள் எல்லாமே இலக்கைத் துல்லியமாக வரையறுத்துக் கொண்டு அவற்றை நோக்கி வடிவமைக்கப்படுபவை. இவற்றில் இருக்கும் பிழைகளைக் கண்டறிய நாஸா வடிவமைத்த ஒருகருவி இப்பொழுது திறமூல நிரலர்களின் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம், நாஸாவினால் கண்டறிய, களையமுடியாத குறைகளைத் தன்னார்வ நிரலர்கள் கண்டறிந்து நாஸாவுக்கு உதவுவார்கள் என்பதே. இதற்கு வசதியாக திறமூல நிரல்களின் வங்கியான sourceforge.net தளத்தில் நாஸாவின் பாத்·பைன்டர் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.

    இது திறமூலத்தின் வெற்றிப்பாதையில் இன்னொரு முக்கியமான மைல்கல். நாஸாவைப் போன்ற பாதுகாப்பு உணர்வுள்ள, துல்லியத்தை இலக்காகக் கொண்டு ஒரு நிறுவனம் திறந்த வழியில் தன்னுடைய செயல்பாடுகளை மேம்படுத்தமுடியும் என்று முனைவது திற மூலத்தின் உள்ளார்ந்த உன்னதத்தைக் காட்டுகிறது. ஒருபுறத்தில் மைக்ரோஸாப்ட் போன்றவர்கள் பணம் கொடுத்து சந்தை ஆராய்ச்சிகள் என்ற பெயரில் திறமூலங்கள் பாதுகாப்பற்றைவை என்று விளம்பரிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்கையில் மறுபுறத்தில் தனது தகுதியினால் திறமூல வழிகளுக்கு நாஸா இலவச விளம்பரம் கொடுத்திருக்கிறது.

    7 Responses to நாஸா திறமூல வழியில் இணைகிறது

    1. karthikramas
      April 27, 2005 at 3:18 pm

      Balagurusmay must read this!!

    2. April 27, 2005 at 6:08 pm

      வரவேற்க தக்க முடிவு. நானும் பங்கு கொள்ளலாம் என முடிவு செய்து இருக்கிறேன்.

    3. April 27, 2005 at 8:40 pm

      சுட்டியதற்கு நன்றி.

    4. April 27, 2005 at 9:31 pm

      தமிழ்மணத்திற்கான சோதனை

    5. April 28, 2005 at 9:43 am

      Please ignore :)

    6. karthikramas
      April 28, 2005 at 12:51 pm

      http://www.dwheeler.com/oss_fs_why.html#security"“>
      Attrition.org has decided to abandon keeping track of this information due to the difficulty of keeping up with the sheer volume of broken sites, and it appeared that tracking this information wouldn’t be possible. However, defaced.alldas.de has decided to perform this valuable service. Their recent reports show that this trend has continued; on July 12, 2001, they report that 66.09% of defaced sites ran Windows, compared to 17.01% for GNU/Linux, out of 20,260 defaced websites.

    7. karthikramas
      April 28, 2005 at 12:55 pm

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *