• தளத்தில் மாற்றங்கள்

    by  • February 14, 2005 • பொது • 1 Comment

    ஒரு வழியாக பழைய BLOG:CMS வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்த என் தளத்தை இப்பொழுது இற்றைப்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் என் படைப்புகளுக்காகத் தனியாக இயங்கிக் கொண்டிருந்த இன்னொரு தளத்தின் தேவையை நீக்க முடியும். இங்கிருக்கும் விக்கியின் வழியாக என் பழைய கட்டுரைகள், கதைகள் போன்றவற்றையும், குவாண்டம் கணினி புத்தகத்திற்கான தளத்தையும் ஒன்றாக இணைக்க முடியும். இதனால் தள நிர்வாகம் எனக்கு எளிமைப்படும்.

    என்னுடைய தளத்திற்கு வருபவர்களுக்கும் ஒரு முன்னேற்றம் இருக்கிறது. பழைய தமிழ் லினக்ஸ் தளத்தின் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருந்த என் வலைப்பதிவின் தரவுத்தளம் முழுமையாக யுனிகோடில் இல்லாமல் இருந்தது. அது இப்பொழுது மாற்றப்பட்டு முழுத்தளமும் யுனிகோடில் இருக்கிறது. எனவே பழையனவற்றைத் தேட (நீங்கள் எழுதிய கருத்துக்களையும் சேர்த்துத்தான்) சாத்தியம் உருவாகியிருக்கிறது.

    இதற்கு நண்பர் காசி பெரிதும் உதவியாக இருந்தார். எனக்கு தள நிர்வாகம், லினக்ஸ் வழங்கி நிர்வாகம் போன்றவற்றில் பரிச்சயம் இருக்கும் அளவிற்குத் தரவுத்தள அமைப்பு, நிர்வாகத்தில் கொஞ்சமும் கிடையாது. இதன் சிக்கல்களை எத்தனைமுறை கேட்டாலும் காசி பொறுமையாக அவிழ்த்துக் கொடுத்தார். இதற்காக அவர் எழுதியதுதான் NCR2UTF நிரல். யாருக்கும் பயன்படுமா என்று தெரியவில்லை என்று சாதுவாக எழுதிவிட்டுப் போய்விட்டார். எனக்குப் பயன்பட்டிருக்கிறது, (முழுக்க முழுக்க அவர் உதவியில்லாமல் இந்தப் பெயர்வு சாத்தியமாகியிருக்காது). இதற்காக நான் காசு சம்பாதித்து உயில் எழுதும் காலத்தில் அவருக்கு ஒரு எவர்சில்வர் லோட்டாவை எழுதி வைக்கலாமென்றிருக்கிறேன் (Lotta Thanks, Kasi!!).

    இன்னும் கொஞ்சம் சில்லுண்டி வேலைகள் மீதமிருக்கின்றன. கடந்த நாலு நாட்களில் எழுதிய கருத்துக்களைப் பெயர்ப்பது கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு நாளில் செய்துவிடுவேன். நள்ளிரவைத் தாண்டிவிட்டதால் இனி போய் தாச்சுக்க வேண்டியதுதான்.

    One Response to தளத்தில் மாற்றங்கள்

    1. February 14, 2005 at 9:22 am

      சோதனை! கருத்தெழுத முடிகிறதா?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *