தமிழ் இலக்கியத்தில் பூக்கள் – சந்தேகங்கள்
by வெங்கட் • July 28, 2005 • இலக்கியம் • 3 Comments
<%image(20050728-phal.jpg|512|384|phal)%>
நேற்று வீட்டில் பூத்திருந்த ஆர்க்கிட் ஒன்றைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமய மலைத் தொடர் போன்றவற்றிற்கே விசேடமான அழகான ஆர்க்கிட்கள் பல உண்டு. மேலே இருக்கும் படத்தில் உள்ள பெலனோப்ஸிஸ் வகை ஆர்க்கிட் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றைத் தவிர டென்ட்ரூபியம், சிம்பிடியம் வகை ஆர்க்கிட்களும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. மேலை நாடுகளிலும், ஜப்பான், ஆஸ்திரேலியா சீனா நாடுகளில் ஆர்கிட்களுக்கு நிறைய மதிப்பிருக்கிறது. இந்தியாவில் இவற்றைப் பற்றி பெரிதும் யாரும் கண்டுகொள்வதில்லை.
ஆர்கிட்களைப் போன்ற அழகான பூக்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் வருகிறதா என்று சிந்தித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த வகையில் செவ்விலக்கியத்தில் பாடல்கள் எல்லாவற்றிலும் மலர்கள் குறிப்பிடப்படும்பொழுது அவற்றின் நறுமணத்திற்காகவே குறிப்பிடப்படுகின்றன. சிலவற்றில் மலர்களில் தாது உண்ணும் வண்டுகளைப் பற்றி. பூக்களின் வடிவ அழகு பற்றி தமிழ் இலக்கியங்களில் என்னென்ன பாடல்கள் இருக்கின்றன என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.
நம்மூரிலேயே பொதுவாக பூக்களை அழகுக்காகவன்றி நறுமணத்திற்காகவே அதிகம் போற்றுவதாகத் தோன்றுகிறது. இது மற்ற கலாச்சாரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
Orchid-kku thamizhlle enna?
[1] bb தெரியலை. அதுதான் பொதுவா நம்ம ஊருல அழகான பூவெல்லாம் கண்டுக்கறது இல்லைன்னு தோணுது. வாசனையான பூவுக்கெல்லாம் பெயர் இருக்கிறது. (வாசனையான இலையே மருக்கொழுந்து என்று பூவோடு சேர்த்துச் சொல்லப்படும்பொழுது வாசனையற்ற அழகான ஆர்க்கிட்களுக்கு என்ன பெயர் என்றே தெரியவில்லை.
வாசமலர் நம் ஊரில் மட்டும் தானே.. Tropical speciality அதனால் தானோ என்னவோ ?!
குவளை மலர்களும் குறிஞ்சி மலர்களும் வாசமில்லா மலர்களென்று நினைக்கிறேன். திணைபொறுத்து மலர்களை சேர்ப்பதாலும் நறுமண மலர்களே பாடல்களில் இடம் பெறுகின்றன போலும். பாலை நில பாடல்களில் கள்ளியும் கற்றாழையும் இருக்கும். Incidentally, குளிரும் குளிர் சார்ந்த இடங்கள் என ஒரு ஆறாம் திணை ஏற்படுத்த முடியுமா ?