தமிழ்மொழி வாரம் : 2005
by வெங்கட் • June 28, 2005 • கனடா • 2 Comments

டொராண்டோவில் பல்வேறு தமிழ் நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் இணைந்து 26 ஜூன் முதல் 2 ஜூலை வரை தமிழ்மொழி வாரத்தைக் கொண்டாட டுகின்றனர். தமிழ் மொழி மேம்பாடு, தமிழ்மொழிக்கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதாக தமிழ்மொழி வார நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இந்தியா, இலங்கைக்கு வெளியே மிக அதிகமாகத் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் (கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் என்று சமீபத்திய கணிப்புகள் காட்டுகின்றன) தமிழ்க்கலை-தொழில்நுட்பக் கல்லூரி, தொறொன்ரோ கல்விச் சபை (Toronto District School Board), கத்தோலிக்கக் கல்விச் சபை (Toronto Catholic School Board) போன்றவற்றூடாக சுமார் 10,000 மாணவர்கள் தற்பொழுது தமிழ்பயின்று வருகின்றனர். 550 ஆசிரியர்கள் தமிழ்ப்பயிற்றுவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தவும் தமிழ்மொழிக் கல்வியை பரவலாக்கவும் இந்த நிகழ்வுகள் உந்துசக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (பயில்வோரின் எண்ணிக்கையை இன்னும் மூன்று வருடங்களில் 30,000க்கு உயர்த்துவது இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கிறது).
இது தொடர்பாக தினந்தோறும் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் நடக்கின்றன. முழு நிகழ்ச்சி நிரலையும் PDF கோப்பாக இங்கே காணலாம். நாளை (புதன்கிழமை) மாலை நடக்கவிருக்கும் “கணினி வழித் தமிழ்க் கல்வி : கருவிகளும் தேவையும்” என்ற கருத்தரங்கில் நான் பேசவிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 1350 Burnhamthorpe Road East, Mississauga (Dixie and Burhnamthorpe Intersection) -ல் நடக்கவிருக்கிறது. தினசரி வெவ்வேறு அரங்குகளில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. கலந்துரையாடல்களும் கலைநிகழ்ச்சிகளும் டிவிஐ தொலைக்காட்சி வழியே அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
வார இறுதியில் (சனி, ஞாயிறு ) சர் ஜான் ஏ மெக்டோனல்ட் அரங்கில் (Sir John A McDonald CI, Pharmacy & Finch) தமிழ் மொழி, பண்பாடு, கலை, வரலாறு இவற்றைச் சித்தரிக்கும் கண்காட்சிகள் நடக்கவிருக்கின்றன.
தமிழ் மொழி வார கொண்டாட்டங்கள் நல்ல பயனைத் தர வாழ்த்துக்கள் வெங்கட்!
இந்த நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.அவர்களின் இந்த முயற்ச்சியின் மூலம் மேலும் பலர் தமிழ் படிக்க முடியும்.
"இந்தியா, இலங்கைக்கு வெளியே மிக அதிகமாகத் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் "
மலேசியா என்ற ஒரு நாடு இருப்பதையும்,, அந்த நாட்டில் 10%(20 இலட்சம்) தமிழர்கள் உள்ளதையும் பலர் மறந்து விடுகிறார்கள் (திரை கூத்தாடிகளை தவிர).
குறிப்பு :இங்கு 520 தமிழ் தொடக்க பள்ளிகள் உள்ளன்.
அன்புடன்
முரளி
மலேசிய.