• தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்

    by  • June 28, 2005 • இலக்கியம் • 21 Comments

    நான் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது துவக்கி, காலவரையறையின்றி ஒத்திப்போடப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்பான விஷயங்களை பத்ரியும், ரவி ஸ்ரீனிவாஸ்-ம் தொட்டுப் பேசியிருக்கிறார்கள். அதிசயமான ஒற்றுமை என்னவென்றால் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று இதைக் குறித்தும் தொடர்புள்ள இன்னொரு திட்டம் குறித்தும் இங்கே எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இது சமீபத்தில் இங்கே பரபரப்ப்பாக நடந்த இயல்விருது விழா, பத்னாப ஐயருடனான கூட்டங்கள், புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் புத்துயிர் பெற்ற நேரத்தில் பத்ரி இதைப் பற்றி இன்றைக்கு எழுதியிருக்கிறார்.

    நான் பல நாட்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தகங்களுக்கான ஒரு விக்கியைத் துவக்கினேன். (அதன் முகவரி http://abbe.optics.utoronto.ca/tamilbooks/ ).

    இதில் புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள், போன்ற விபரங்களைத் தொகுக்க உத்தேசம். உதாரணமாக, ஒரு புத்தகத்தின் தகவல் மையத்தில்

    புத்தகத்தின் பெயர் : ஏழாம் உலகம்

    ஆசிரியர் : ஜெயமோகன்

    பதிப்பகம் : யுனைட்டெட் ரைட்டர்ஸ்

    பக்கங்கள் : 304

    முதல் பதிப்பு : டிசம்பர் 2003

    தற்பொழுதைய பதிப்பு : முதல் பதிப்பு, 2003

    விற்பனை நிலவரம் : விற்பனையிலுள்ளது

    கிடைக்குமிடம் : காமதேனு

    மேலதிக தகவல்கள்

    போன்ற விபரங்கள் சேர்க்கலாம். இன்னும் மேலட்டை ஓவியம் யார், வடிவமைத்தது, அச்சகம், காகித விபரம், ISBN (மிகச் சில புத்தகங்களில்தான் இதைக் கண்டிருக்கிறேன், உதாரணமாக திலீப் குமாரின் கடவு). சொல்லத் தேவையில்லை, இதில் ஆசிரியர், பதிப்பகம் எல்லாம் இணைப்புகள். பதிப்பகத்தின் பக்கத்தில் முகவரி, வேறு பதிப்புகள் (உதாரணமாக தமிழினி, யுனைட்டெர் ரைட்டர்ஸ் இரண்டும் ஒரே நிறுவத்தின் இரு பிரிவுகள், கால்ச்சுவடு பதிப்பித்தலுடன் கூட சஞ்சிகையையும் நடத்துகிறது. கிழக்கு பதிப்பகம் காமதேனு என்ற இணையப் புத்தகக் கடையையும் நடத்துகிறது,… இப்படியாக மேலதிகத் தகவல்கள்).

    ஆசிரியர் பக்கத்தில் சிறு குறிப்பு, புத்தகப் பட்டியல்கள் (இணைப்புகள்), விருதுகள், வேறு செயல்பாடுகள் (சுந்தரராமசாமி காலச்சுவடு சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர்,…). ஆசிரியர் குறித்த பல்கலைக்கழ்க் ஆய்வுக் கட்டுரைகளையும் சேர்க்க வேண்டும்.

    வரும் நாட்களில் புத்தகத்தின் மேலட்டை, ஆசிரியரின் படங்கள், விமர்சனங்கள் (அல்லது விமர்சனத்திற்கான சுட்டிகள்) போன்றவற்றையும் சேர்க்கலாம்.

    * * *

    இதற்கு முதல் உதாரணங்களாக நான் யுனைட்டெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், சுந்தரராமசாமி (பசுவய்யா), வெங்கட்ரமணன், ஏழாம் உலகம் போன்ற பிணைக்கப்பட்ட விபரங்களைப் போட்டிருக்கிறேன். இதெல்லாம் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் துவங்கியவை. முதலில் என்னுடைய பல்கலைக்கழக வழங்கியில் போட்டு சோதித்துக்கொண்டிருக்கிறேன். இதை அப்படியே பெயர்த்தெடுத்த் வேறு தளத்திற்கும் மாற்ற முடியும்.

    * * *

    இந்த விபரங்களை எந்த வணிக நிறுவனங்களையும் சாராமல் தனியாக தன்னார்வ முயற்சியாகச் செய்வது நல்லது என்று தோன்றுகிறது. அப்படியிருந்தால் பல பதிப்பகங்களும் தாமாக முன்வந்து விபரங்களைச் சேர்க்கும். இன்னும் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேர்ப்பது நல்லது. உதாரணமாக அ.மார்க்ஸ் எழுதிய பெரியார் குறித்த புத்தகத்தைப் பலரும் படிக்க வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அந்தப் புத்தகத்திற்கான பக்கங்களைத் துவக்கலாம்.

    இந்தத் தளம் விக்கி முறையில் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. நம்மில் பலருக்கும் விக்கியில் பரிச்சயம் இருக்கிறது. அதிக தொழில்நுட்ப அறிவில்லாமல் கூட இதற்குப் பங்களிப்பது எளிது.

    இந்த முயற்சியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இப்படியாக வருங்காலத்தில் திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள் போன்றவ்ற்றுக்கும் தமிழில் தகவல் தளங்களைத் துவக்குவது நல்லது.

    21 Responses to தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்

    1. June 28, 2005 at 5:41 pm

      Wiki is a good idea. wikis are a collaborative medium where, even when people disagree, they try to find common ground, knowing there can be only one outcome.

    2. xzy
      June 28, 2005 at 6:07 pm

      பசுவைய்யா
      பசுவய்யா

    3. Karu.Thiruvarasu
      June 28, 2005 at 7:37 pm

      Iyaa, Nalla thittam. Nalla puthagangalai virumpi vaanga alaiyum enpondraarukku uthaviyaana thittam. thodarungal, velga! vaalga!

      Karu.Thiruvarasu
      "Vellathamilini Vellum"

    4. June 28, 2005 at 10:40 pm

      [2] நன்றி. திருத்தியிருக்கிறேன்.

    5. June 28, 2005 at 11:38 pm

      வெங்கட்: இதற்கு விக்கிதான் சரியான நுட்பமா, இல்லை ஒரு தரவுத்தளம் வேண்டியிருக்குமா என்பதை யோசித்துச் சொல்லுங்கள். விக்கி என்றால் அதையே செய்வோம்.

      எனக்கு இதுபற்றி அதிகம் தெரியாததால், இப்பொழுதைக்கு எனக்குத் தோன்றிய குறைகளைச் சொல்கிறேன்…

      விக்கியில் ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட் முதலில் தோன்றுமாறு செய்யமுடியுமா? அதாவது எந்த ஒரு புத்தகத்தைப் பற்றிய புதுப்பக்கத்தைத் தொடங்கினாலும் குறைந்தபட்சம் சில தகவல்களையாவது நிரப்பவேண்டும். அவற்றை நிரப்பாவிட்டால் அந்தப்பக்கம் முழுமையடையாத பட்டியலுக்குப் போய்ச்சேரவேண்டும்.

      நாம் விரும்பும், வேண்டும் RSS ஓடைகளை உருவாக்க முடியுமா?

      'கிடைக்குமிடம்' தகவலில் பிரச்னைகள் ஏதும் வரக்கூடாது… நாளை இருபது இணையக்கடைகள் வந்தால் அத்தனைக்கும் சுட்டிகளைக் கொடுக்க முடியுமா? அல்லது அந்தப் பகுதியையே நீக்கிவிடலாம்…

      'விற்பனை நிலவரம்' மிகவும் கஷ்டமான விஷயம். பல பதிப்பாளர்களும் இதுபற்றிய விவரங்களை சரியாக வைத்திருப்பதில்லை!

      உங்கள் விக்கியில் படங்களை இணைக்கும் வசதி கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால் நான் சில புத்தகங்களை இணைத்துப் பார்க்கிறேன். சரியாக வந்தால் தொடர்ந்துவிடலாம்.

    6. June 28, 2005 at 11:40 pm

      இன்னொரு விஷயம்… ஒரே தலைப்பில் இரண்டு புத்தகங்கள் வர வாய்ப்புள்ளது. இரண்டு எழுத்தாளர்கள் – காலத்தால் பிற்பட்டு – ஒரே பெயரில் இருக்கலாம்…

      அதை விக்கி எப்படிக் கையாளும் என்று பார்க்கவேண்டும்.

    7. தர்சன்
      June 29, 2005 at 12:00 am

      வெங்கட், நல்ல முயற்சி. பல நாட்கள் எனது நண்பர் சிலரிடம் இபபடியானவொரு இணையத்தளம் அமைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். கதையுடன் எமது திட்டங்கள் முடியும். ஒரு நாளும் செயல் வடிவம் பெற்றதில்லை. எங்கள் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தமிழ் புத்தகதிற்கும் விமர்சனங்கள், திறனாய்வுகளைத் திரட்டுதல். இது தமிழ் இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுபவருக்கு பேருதவியாக இருக்கும்.

      இத்துடன் தமிழ்-ஆங்கில/ ஆங்கில-தமிழ் இணைய அகராதியொன்றை இணையதில் உலாவுவர்களின் உதவியுடன் செய்யலாம் என்று யோசித்திருந்தேன். இது கலைச் சொற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அகரதியா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். உதரணத்துக்கு இந்த்த அகராதியில் ஒரு பாவனையாளர் ஒரு சொல்லுக்கு மொழிபெயர்ப்பு, விளக்கம் வேண்டி உள்ளீடு செய்தால். இன்னொரு நபர் அதற்கான மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் (உதாரணத்துடன்) வழங்கலாம். மற்றுமொரு பாவனையாளர் இதற்கு மேலுமொரு மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் தரலாம். இவ்வாறும், ஒரு கொடுத்தல்-வாங்கல் முறையில் இவ்வகராதி வளரவேண்டும். இப்படிக் கனவுகொண்டிருக்கிறேன். இதை யாரவது நடைமுறைக்கு கொண்டுவர விரும்பினால் என்னாலான உதவிகளைச் செய்யலாம்.

      -தர்சன்

    8. June 29, 2005 at 12:56 am

      பத்ரி சொல்வது போல விக்கி இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமா என எனக்கும் சந்தேகமாக உள்ளது. XML + விக்கி மாதிரி ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.

    9. June 29, 2005 at 12:57 am

      Venkat, why cant we use the wikipedia for this? They have a project in English with similar idea. I think it'll be one place for reference and standard procedures/infrastructure
      exist already
      . Wikipedia has all the things like Badri asked. Its actually a media wiki rather than just wiki isn't it? So images shouldn't be a problem. Is this a good solution?

    10. June 29, 2005 at 6:35 am

      நல்ல முயற்சி! என்னால் ஏதேனும் உதவ முடிந்தால் மகிழ்ச்சி. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டிக்கொண்டுள்ளேன் (150-200 வரை இருக்கும்). அது பயன்படுமெனில் தெரிவியுங்கள்.

    11. June 29, 2005 at 7:42 am

      [6] I used contribute to wikipedia. We can handle such scenarios using a disambiguation pages. For eg, you can have a look at http://en.wikipedia.org/wiki/Butterfly_effect_%28disambiguation%29…

    12. June 29, 2005 at 8:05 am

      வெங்கட், சில நாட்களாக எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளையும், புத்தகங்களையும் தேடி, தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்கள் இங்கே பதிந்து வைத்துள்ளோம். உங்களுக்கு இது பயன்படலாம்.

    13. June 29, 2005 at 8:11 am

      சில எழுத்தாளர்கள் என்று படிக்கவும்

    14. June 29, 2005 at 8:30 am

      [5] பத்ரி – இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருந்தேன். சொல்லப்போனால் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையிலிருந்து ஆரம்பித்த இந்த எண்ணம் இப்படி ஒத்திப்போடப்பட்டுக் கொண்டே வரக் காரணமே இதுதான்.

      என்னுடைய நீண்ட நாள் யோசனையை இன்றைய பதிவில் உரக்கக் கூறுகிறேன்.

    15. June 29, 2005 at 9:07 am

      [12]சரியான சுட்டி இங்கே உள்ளது.

    16. June 29, 2005 at 2:05 pm

      [7] தர்சன் – நேற்றைக்கு எப்படி உங்கள் கருத்தைப் படிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.

      இந்தப் பதிவில் "தொடர்புடைய இன்னொரு திட்டம்" என்று எழுதியிருந்தேனே, அது இப்படி இணைய அகராதி தயாரிக்கும் திட்டம்தான்!! அ. முத்துலிங்கம், டாம். சிவதாசன், போன்றவர்களிடம் இதைப்பற்றி கதைத்திருக்கிறேன். இன்னும் ஒரு வடிவம் பிறக்கவில்லை. நான் உங்களிடம் தொலைபேசியில் இதைப்பற்றி விரிவாகக் கதைக்க விருப்பம். உங்கள் தொலைபேசி எண்ணைத் தருகிறீர்களா (மேலிருக்கும் Contact மூலம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்).

      இதைப் பற்றி சில திட்டங்கள் இருக்கின்றன. அகராதிக்கான பொருளுதவியைத் தர சிலர் தயாராக இருக்கிறார்கள். இதைப் பற்றிய ஒரு நிலைஅறிக்கையை (White Paper) எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடன் கட்டாயம் பேசியாக வேண்டும்.

    17. June 29, 2005 at 2:06 pm

      [9] யக்ஞா – நான் அமைத்திருக்கும் விக்கியிலும் படங்கள் சாத்தியமே. என்னுடைய அடுத்த பதிவைப் பார்க்கவும் (அல்லது புத்தகவிக்கியில் இருக்கும் என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்திற்கான படத்தைப் பார்க்கவும்).

    18. June 29, 2005 at 2:07 pm

      [10] ராதா – விக்கியில் பதிப்பாளர்கள் என்றொரு தலைப்பு இருக்கிறது அதன் கீழ் உங்களிடம் இருக்கும் தகவ்ல்களைப் போடுங்கள்.

    19. June 29, 2005 at 2:10 pm

      [12] சந்தோஷ் குரு – பொது விக்கிப்பீடியாவில் அதிக இலக்கியம் சம்பந்தமான விஷயங்களைப் போடுவது சரியில்லை (அது குழந்தைகள் தொடங்கி ஆரம்ப நிலைத் தகவல் தேடுபவர்கள் வரை பொருந்தும்). நாம் அமைக்கும் புத்தகப் பக்கம் – இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்காக, விமர்சனங்கள், தொடர்புள்ள புத்தகங்கள் இப்படி கனதியான தகவ்ல்களைத் தாங்கியிருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

      ஏற்கனவே விக்கிப்பீடியாவில் நீங்கள் போட்ட தகவல்களை வெட்டி இதிலும் ஒட்டலாம்.

    20. June 29, 2005 at 2:30 pm

      நல்ல முயற்சி வெங்கட்.. அத்தோடு விமர்சனங்கள் என்றொரு பகுதியையும் இணைத்து படைப்புகளுக்கான விமர்சனங்களையும் போட்டீர்களானால் நாம் பிடித்ததைத் தெரிவு செய்ய இலகுவாக இருக்கும். கிடைக்கும் இடங்கள் பகுதியில் காலம் செல்வத்திடம் இருக்கின்றதா (அவரைப் பிடிப்பது பெரும்பாடாக இருக்கிறது) முருகன் புத்தகசாலையில் இருக்கிறதா என்ற தகவல்களையும் தந்தால் கனேடிய வாசகர்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

    21. Voice on Wings
      June 29, 2005 at 3:49 pm

      [16] உங்களுக்குத் தெரிந்திருக்கும் – விக்கிப்பீடியாவைப் போல் விக்ஷனரி (wiktionary) என்றிருப்பது. தற்போது http://ta.wiktionary.org"“>தமிழிலும் இது ஆரம்ப நிலையில் இயங்கி வருகிறது. அதன்் ்தக் கட்டமைப்பிலேயே புதிய சொற்களையும் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்தப் பணி எளிதாக அமையலாம்்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *