ட்சூனாமியில் வெளிவந்த புத்தர்
by வெங்கட் • February 18, 2005 • பொது • 3 Comments

{நான் இதைப்பற்றி சென்ற வாரமே எழுத ஆரம்பித்து நேரமில்லாமல் ஐந்து வரிகளுடன் நிறுத்திவிட்டேன். ஆச்சரியமாக, நம் வலைப்பதிவு நண்பர்கள் யாருமே இதைப் பற்றி எழுதவில்லை. இது எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுவதால் இப்பொழுதுதாவது எழுதுகிறேன்}.
இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் சமீபத்திய ட்சூனாமியின் விளைவாக மகாபலிபுரத்தில் பழைய நகரத்தின் ஒரு பகுதி வெளிப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறது. இது பழைய மாமல்லபுரத்தின் (1200 வருடங்களுக்கு முந்தையது) ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். பாறைச் சிற்பங்களைக் கொண்ட தொகுதி கடலிருந்து வெளிப்பட்டிருக்கிறது; இதன் வடிவமைப்பு திராவிட பாணியில் இருக்கிறது. தொல்பொருள் ஆய்வுக்கழகம் முதல் மதிப்பீட்டில் இது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இது கடலுக்கடியில் இருக்கும் ஒரு மாநகரத்தின் பகுதியாக இருக்கலாம் என்று இப்பொழுது உலக அளவில் தொல்பொருளாளர்கள் நம்புகிறார்கள்.
ட்சூனாமியில் ஒன்பது அங்குல வெண்கல புத்தர் சிலையன்றும் கல்பாக்கத்திற்கு அருகில் கரையதுங்கியிருக்கிறது. இது தாய்லாந்து அல்லது பர்மாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு ஐந்து வருடங்களாகவே மகாபலிபுரத்தில் கடல்கொள்ளப்பட்ட நகரத்தைக் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. க்ரஹாம் ஹான்காக் மற்றும் இந்திய தேசிய கடலாய்வுக் கழகம்(National Institute of Oceanography) இன்னும் சில ஆய்வுக் குழுக்கள் சேர்ந்து 2002 ஆண்டில் மஹாபலிபுரம் கடற்கரையில் India Atlantis Expedition என்ற தீவிர ஆய்வுகளை மேற்கொண்டார்கள். பல உள்ளூர் மீனவர்களின் துணையுடன் கடலில் அமிழ்ந்து அங்கிருக்கும் கட்டமைப்புகளை ஆராய்ந்தார்கள். இவர்களின் ஆராய்ச்சி முடிவுகளின்படி மஹாபலிபுரத்தில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நகரின் ஒரு பகுதி கடலுக்குள் அமிழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. கடலுக்கடியில் பல சுவர்களும் சிறு மண்டபங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது கடல் அகழ்வாராய்ச்சி நிபுணர்களிடையே இதன் காலத்தைப் பற்றிய சில பேதங்கள் இருந்தாலும் இவற்றின் தொன்மை குறித்தும் கடலுக்குள்ளே மூழ்கியிருக்கும் நகரம் குறித்தும் எந்த மாறுபாடும் இல்லை.

இதே குழு பூம்புகாருக்கருகிலும் கடலாய்வுகளை நடத்தியது, (இது குறித்த படங்களை இங்கு காணலாம்). இதில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மகாபலிபுரத்திற்கு அருகில் பல சதுரகிலோமீட்டர்கள் பரப்பில் சுவர்களும் மண்டபங்களும் இருப்பதாகவும் இதில் ஒரு பகுதியை மாத்திரமே தாங்கள் பார்வையிட்டதாகவும் க்ரஹாம் ஹான்காக் குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.
கடலடி மகாபலிபுரத்தை முழுவதுமாக ஆராய்ந்தால் கடைசியான பனி வயதிற்கு முந்தைய கட்டிடங்கள் தென்படலாம் என்று சிலருக்கு நம்பிக்கையிருக்கிறது. அப்படியிருந்தால், இந்த நாகரீகத்தின் வயது ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தையதாக தீர்மானிக்கப்படும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
சும்மா டெஸ்டிங்க், கண்டுக்காதீங்கோ
I tried to comment twice and was unsuccessfull.
]
Let me try one mooooore time..
[Please take out my ID from the blocked list
கவலையேபடாதீங்க…….தெற்கே ஒரு நாகரீக சமூகம் இருந்ததே வெளியே வராது. கண்டிப்பாய் தடுக்கப்படும்.
பின்னே 'ராட்சசன்' வாழ்ந்த பகுதியாக புராணங்களில் கூறப்பட்ட பகுதியில் நாகரீக சமூகம் இருந்தது என்றால் எப்படி?
'டெல்லி அரசு' க்கு (அது மதசார்பற்று மந்திரிக்கப்பட்டதோ, காவி புனித நீர் தெளிக்கப்பட்டதோ) இம்மாதிரியான உண்மையை மறைப்பதே 'தேச'(?) ஒற்றுமை காக்கும் கடமையாக தெரியும்.
முன்னே 'தஞ்சை தமிழ் பல்கலைகழக' கல்வெட்டு ஆராய்ச்சியில் கண்டறிந்தவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது/மட்டுறுத்தப்பட்டது – தப்பிக்க ஒரு 'காவி' காரணம் – துறைத்தலைவர் பெயர் மேற்கத்திய (கிருஷ்துவ சிருபான்மை) பெயர்.
அதே பல்கலை கழக பேராசியர் மற்றொருவர், கர்னாடக மாநில சிறையில்! காரணமாக சொல்லப்பட்டது – தலைமறவாகிவிட்டார் என்பது. தலைமறைவானவர் எப்படி அரசூதியம் பெறமுடியும் என்று கேட்டால் நீங்கள் 'தேசவிரோதி'. அதனால் தான் இவ்விஷயத்தில் தமிழ் காவலர்கள் எல்லோரும் மவுன தியானம்! பதவி அய்யா பதவி – தனக்கோ – மகனுக்கோ – பேரனுக்கோ.
தெற்கோ வடக்கோ, சுய அடையாளம் பறிக்கப்பட்ட சமூகமாகவே உள்ளது – தமிழ் சமூகம்.
'வடக்கு' தமிழன் போராட எழுந்துவிட்டான்.
ஆனால், 'தெற்கு' தமிழன் தூங்காமலே கனவு கண்டு, ஆதர்ச நடிகனை தலைவனென்றும், பெற்ற தாய்க்கே 'யாருடைய கரு இவன்?' என்ற குழப்பமேற்படுத்தும் வகையில் பெயர் சூட்டிக்கொள்வதும், அரசியல் வியாபாரியை மக்கள் தலைவனென பின்பற்றுவதும், அவர்கள் சிறைசெல்ல நேரிடின் தற்கொலைக்கு முயல்வதும் அல்லாது மற்றாரை கொல்வதுமே
தன் இன அடையாளமாய் வெளிப்படுத்தி வந்துள்ளான்.
'சுனாமி'யால் வெளியே தெரிந்துவிட்ட புதைவுகள் கூட தாய்லாந்து நாட்டடிலிருந்து 'அடித்து' வரப்பட்டதாக புனையப்படும்.
செம்மொழிக்கே 1000 வயதாக குறைத்த 'குரைப்பே'
அடங்கவில்லை இன்னும் – 5000 வருடம் தமிழன் நாகரீக அடயாளம் உள்ளதென்றால் அங்கே தான் அடுத்த 'பொக்ரான்'.
நீங்கள் வேறே!
-கதிரவன்.