• சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? – 1

    by  • January 28, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    சமீபத்தில் என்னிடம் சிலபேர் உன்னுடைய domesticatedonion.net தளத்தை எப்படி உருவாக்கினாய்? இதைப் போல நானும் சொந்தத்தில் இணையதளம் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பதில் தரும் முகமாகவும் தமிழ் வலைப்பதிவு விக்கியை வளப்படுத்துவதற்காகவும் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சொந்த வலைப்பதிவு அமைப்பதைப் பற்றி என்றாலும் இது பொதுவில் வலைப்பதிவு கடந்த விஷயங்களையும் தொடுகிறது.

    பல நாட்களாக ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த இதற்கான இன்றைய வினையூக்கி மூக்கு சுந்தரின் இந்த வலைக்குறிப்பு. நன்றி சுந்தர்.

    தனக்கென்று இணையதளம் வைத்துக் கொள்வதன் நன்மைகள் என்ன?

    1. அடையாளம். உங்கள் பெயருடன் ஆளுமையுடன் இணைத்துப் பேச மின்வெளியில் ஒரு தளம்.

    2. உங்களுக்கு வேண்டிய விஷயங்களைத் திரட்டும் வசதி; பிறருடன் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களை நேரடியாகப் பிறர், தயவின்றி பரிமாறிக்கொள்ளும் வசதி.

    3. நிரந்தர மின்னஞ்சல் முகவரி. மாறும் மின்வெளியில் ஓரளவுக்கு நிரந்தரமான அடையாளத்துடன் மின்னஞ்சல் பெறும்/அனுப்பும் வசதி.

    4. இலவசச் சேவைகள் ஒருநாள் மாயமாக மறைந்துபோகும் அபாயம் எப்பொழுதும் உண்டு. நிச்சயமின்மையைக் குறைக்க சொந்த தளம் உதவும்.

    5. உங்களுக்குத் இணையம்/கணினி சார்ந்த நுட்பங்களில் ஆர்வம் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்க்க ஒரு வழி.

    6. சும்மா..

    சொந்தத்தில் இணையதளம் வைத்துக் கொள்வது அவ்வளவு சிக்கலான விஷயம் கிடையாது.

    அ. இணையதளம் பதிவு செய்தல்

    1. முதலில் உங்களுக்குப் பிடித்தமான பெயரைத் தெரிந்தெடுங்கள். பலரும் முதலில் தெரிவு செய்யும் விஷயம் அவர்களுடைய சொந்தப் பெயர்தான் (பல பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் கைகொள்ளப்பட்டிருக்கும்). உதாரணமாக நான் தெரிந்தெடுத்த பெயர் domesticatedonion (கேட்பவர் முகத்தில் உடனே ஒரு நொடி புன்னகை வர வேண்டும் என்பது என் விருப்பம்). நீங்கள் உங்கள் பெயர், உங்கள் மாமனார் பெயர், நாய்க்குட்டியின் பெயர், பள்ளிப்பருவத் தோழி/தோழன் பெயர், என எது விருப்பமோ அதைக் குறித்துக் கொள்ளுங்கள். எதற்கும் இரண்டு மூன்று பெயர்கள் கைவசம் இருக்கட்டும். (ஒன்று கிடைக்கவில்லை என்றால் வேறொன்று). பின் அதை எந்த முதன்மை புலத்துடன் இணைக்க விருப்பம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். .காம், .ஆர்க், .நெட்,…

    நம்முடைய உதாரணத்திற்கு coovam.org என்ற இணைய தளத்தை வைத்துக் கொள்வோம்.

    2. அடுத்ததாக உங்கள் தெரிவு இப்பொழுது உங்களுக்குக் கிடைக்குமா அல்லது வேறு யாராவது இதைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும். இதைப் பல தளங்களின் மூலம் சோதிக்க முடியும். உதாரணமாக 1and1.com சென்று அங்கிருக்கும் பெட்டியில் உங்கள் தெரிவை உள்ளிட்டால் இது கிடைக்கிறதா என்பது தெரியும். கூவம்.நெட் கிடைக்கிறது என்று பதில் வரும். (ஆசப்பட்டது கெடைக்கலன்னா கெடைக்கறதுக்கு ஆசப்படனுன்னு தமிழ் சினிமா வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்).

    3. பல நிறுவனங்கள் வலைத் தளத்தின் பெயரைப் பதிவு செய்கின்றன. இவற்றின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். அதேபோல பதிவு செய்யும் ஒரே சேவைக்கு ஐந்து டாலர் தொடங்கி ஐம்பது டாலர் வரை வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய தேடல் அனுபவத்தில் மேலே சொன்ன 1and1.com ஓரளவுக்கு நல்ல சேவை, குறைந்த கட்டணத்தில் தருகிறது. நான் என்னுடைய தளத்தை வருடத்திற்கு ஆறு டாலர்களுக்குப் பதிவு செய்தேன். பல நிறுவனங்கள் நேரடியான மின்வணிக வசதி மூலம் (கடன் அட்டை) உடனடியாக பதிவு செய்கின்றன.

    4. பதிவு நிறுவனத்திற்கு இதைச் செய்து முடிக்க 24 மணி நேரம் ஆகக் கூடும். அதன் பிறகு இந்தத் தளம் உங்கள் பெயரில் உறுதியாக நிச்சயமாகும்.

    பெயர் கிடைத்துவிட்டது. இனி தளத்தை எப்படி உருவாக்குவது? இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி அடுத்ததாக எழுதுகிறேன்.

    5 Responses to சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? – 1

    1. January 28, 2005 at 11:16 pm

      (எல்லாமே கூடி வருகிறது… நேற்று காசி, இன்று நீங்களா!?)

      மிக்க நன்றி வெங்கட், எல்லா நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் , லிங்குடன் எழுதுங்கள் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

      (முதல் 2 வரி புரியலியா… கவலைப்படாதீங்க… அது என்னுள்ளே சொல்லியது:)

    2. January 29, 2005 at 12:13 am

      nalla muyarchi thodarnthu ezhuthavum

    3. Tulsi Gopal
      January 29, 2005 at 1:15 am

      அன்புள்ள வெங்கட்,

      4 வது பாய்ண்ட் படிச்சா பயமா இருக்கே! சொந்த வீடு கட்டாயம் வச்சிரணும்போல!

      விளக்கமா எழுதுங்க. என்னை மாதிரி ம.ம.களுக்குப் புரியும்படி!

      என்றும் அன்புடன்,
      துளசி.

    4. March 6, 2008 at 1:19 am

      அன்புடையீர்,
      வணக்கம்.
      எம். சுப்பிரமணி எனும் நான் இக்கடிதம் வாயிலாக தங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      நான் ” முத்துக்கமலம் ” ( http://www.muthukamalam.com )எனும் இணையச் சிற்றிதழ் ஒன்றினை கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறேன்.
      நான் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் மூலம் எம்.பில், (இதழியல் & மக்கள் தொடர்பியல்) [M.Phil (J.M.C)] பயின்று வருகிறேன்.
      இந்த ஆய்வுக் கல்விக்காக ” தமிழ் இணையச் சிற்றிதழ்கள் – ஓர் ஆய்வு ” எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்து சமர்ப்பிக்க உள்ளேன்.
      இந்த ஆய்வுக்கு ” தமிழ்த்திணை ” இணையச் சிற்றிதழின் ஆசிரியரும், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியருமான முனைவர்.தி.நெடுஞ்செழியன் அவர்கள் வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார்.
      அச்சுப்பிரதியாக வெளியாகாமல், வணிக மூலமான இலாப நோக்கமில்லாது ஏதாவது ஒரு (உயரிய) நோக்கத்துடன் இணையத்தில் மட்டும் வெளியிடப்படும் இணைய இதழ்களை ” இணையச் சிற்றிதழ்கள் ” என்று ஒரு வரையறை செய்து ஆய்வு செய்யப்பட உள்ள எனது ஆய்வுப் பணிக்கு
      தங்கள் இணைய இதழ் குறித்த கீழ்க்காணும் தகவல்கள் எனக்குத் தேவையாக உள்ளது.
      தங்களின் மேலான பணிகளுக்கிடையில், தயவு செய்து எனக்குத் தேவையாக உள்ள கீழ்காணும் தகவல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு (msmuthukamalam@yahoo.co.in)அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.
      நன்றி.
      தங்கள் உண்மையுள்ள,
      எம்.சுப்பிரமணி,
      தேனி.
      தொலைபேசி: 91-4546-265630
      கைத்தொலைபேசி: 91-9940785925

      __________________________________

      ” தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு ” க்குத் தேவையாக உள்ள தகவல்கள்

      1. இணைய இதழ் பெயர் :

      2. இணைய இதழ் முகவரி :
      ( உதாரணமாக, http://www.tamilthinai.com/)

      3. துவங்கப்பட்ட நாள் / ஆண்டு :

      4. துவங்கப்பட்ட நோக்கம் :

      5. முக்கியக் கருத்து :
      ( சமூகம் / இலக்கியம் / அரசியல் / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் / பல்சுவை… போன்று எது சார்ந்தது எனக் குறிப்பிடவும் )

      6. வெளியிடும் அமைப்பு / வெளியிடுபவர் :

      7. வெளியீட்டு முகவரி :
      (நாடு குறிப்பிடவும்)

      8. பயன்படுத்தும் எழுத்துரு :

      9. பயன்படுத்தும் தொழில்நுட்பம் :

      10. கணினி வடிவமைப்பு :
      (தாங்களே மேற்கொள்கிறீர்களா? நண்பர்கள் / ஊழியர்கள் உதவுகிறார்களா?)

      11. வாசகர்கள் நிலை :
      ( வாசகர்கள் மற்றும் அவர்களது நாடுகளை குறிப்பிடுங்கள்)

      12. வாசகர்கள் அதிகரிப்புக்கு தங்களின் முயற்சி :

      13. படைப்புகளில் வாசகர்களின் பங்கு :

      14. விளம்பர வாய்ப்பும் தங்கள் முயற்சியும் :

      15. வரவேற்பில்லாத இணைய இதழின் தற்போதைய நிலை குறித்து தங்கள் கருத்து :

      16. இணைய இதழ்களின் எதிர்காலம் :

      17. தாங்கள் கூற விரும்பும் பிற தகவல்கள் :
      (ஏதாவது இருந்தால்…)

    5. Pingback: சொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி? - 1 « தமிழ் இணைய நண்பன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *