கூகிள் வலைப்பதிவுத் தேடல்
by வெங்கட் • September 15, 2005 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

இன்றைக்கு கூகிள் வலைப்பதிவுகளில் தேடும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகிள் செய்திகளின்கூட, வலைப்பதிவுகள் மாற்றுச் செய்தி/கருத்து ஊடகமாக அங்கீகாரம் பெறுவ்தன் அடுத்த கட்டம் இது.
தமிழில் தேடிப் பார்த்தேன் நன்றாகவே வேலை செய்கிறது. (தமிழ் வலைப்பதிவுகள் பெரும்பாலும் யுனிகோடிலேயே இருப்பது இதற்கு முக்கிய காரணம்). எந்த ஒரு வார்த்தை/வார்த்தைகளையும் உள்ளிட்டுத் தேடும்பொழுது கூடவே அந்தத் தேடலுக்கான செய்தியோடை ஒன்றும் கிடைக்கிறது. உதாரணமாக ‘இலக்கியம்’ என்றொரு வார்த்தையை உள்ளிட்டுத் தேடினால் கிடைக்கும் முதல் பத்து விடைகளின் கீழ் அந்தக் கூகிள் தேடலுக்கான செய்தியோடை ஒன்றும் கிடைக்கிறது. இந்தச் செய்தியோடையை படிப்பியில் போட்டுவைத்தால் போதும் ‘இலக்கியம்’ தொடர்பான பதிவுகள் வரும்பொழுது தானாகச் செய்தியோடையில் அவை பிரதிபலிக்கப்படும். என்னைப் பொருத்தவரை இது மிக நல்ல வசதி. ஒரு குறிப்பிட்ட தலைப்பில்/சொல்லில் வரும் பதிவுகளைத் தொடர இது மிக எளிய வழி.
'டெக்நோரட்டி' இதே வேலையை இன்னும் அற்புதமாக, பல காலம் முன்பிருந்தே செய்து வருகிறது. லேட்டாக வந்தாலும் சோபையாக இருக்கிறது கூகிளின் வலைப்பதிவு தேடல்
(
மேலும் விரிவான ஒப்பீடுகளும் அலசல்களும் இங்கு கிடைக்கிறது: http://www.threadwatch.org/node/3829
http://www.threadwatch.org/node/3829