குவாண்டம் கணினி – அ. முத்துலிங்கத்தின் விமர்சனம்
by வெங்கட் • January 21, 2005 • அறிவியல்/நுட்பம் • 3 Comments
இந்த வாரத் திண்ணையில் என்னுடைய ‘குவாண்டம் கணினி’ புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் விமர்சனம் வந்திருக்கிறது. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் முகந்தெரியாமல் என்னைப் பாராட்டி, ஊக்குவித்துக் கடிதம் எழுதியவர் திரு. முத்துலிங்கம். எதேச்சையாக அவர் வசிக்கும் ஊருக்கு நானும் வந்து சேர்ந்தது விந்தை.
விமர்சனத்தின் துவக்கத்தில் அவர் எழுதியிருக்கும் தமிழகத்தின் ‘பிரபல எழுத்தாளர்’ சம்பவத்தை அவர் எனக்கு முதலில் எழுதியபொழுது நான் பெரிதாக நம்பவில்லை (என்னைப் பற்றி ‘இன்னார்’ சொல்வதாவது என்றுதான் நான் நினைத்திருந்தேன்). சிறியவனான என்னை ஊக்குவிக்க நல்ல வார்த்தை சொல்கிறார் என்றுதான் தோன்றியது.
ஆனால் பின்னர் அந்த எழுத்தாளரே என்னிடம் அ.முத்துலிங்கம் என்னை அறிமுகப்படுத்தியதாகச் சொன்னபொழுதுதான் அதன் உண்மை புரிந்தது. இவையெல்லாம் நான் அறிவியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த காலத்தில் என்னைப் பெரிதும் ஊக்குவித்தவை. இதற்கு அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
திண்ணைச் சுட்டி (தாப் எழுத்துருவில்)
குவாண்டம் கணினி விமர்சனத் தொகுப்பு (யுனிகோட் எழுத்துருவில்,மற்றும் வானொலி விமர்சன ஒலிவடிவம்)
நல்ல விமரிசனம், நூலை படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்
மிகச் சிறப்பானதொரு விமர்சனம். தாங்கள் தமிழ் கலைச் சொற்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்பது என் ஆவல்.
kpfTk; ed;whf cs;sJ je;fspd; tpku;rdk;.
please send yours (a.muthulingam sir’s )email address to my prinstionj@gmail.com. kind to send i must wants to tolk with muthulingams sir.please help me