கர்நாடகக் காவல்துறையின் வலைப்பதிவு
by வெங்கட் • December 13, 2005 • நகைச்சுவை • 14 Comments
கர்நாட்க அரசின் காவல்துறையினர் வலைப்பதிவைத் துவங்கியிருக்கிறார்கள் என்று பிரகாஷ் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அடுத்த வார விகடனின் இப்படி வரலாம்;
சமீபத்தில் கர்நாடக அரசின் காவல்துறை ஒரு பிளாக்கை ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி நெட்டில் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா போஸ்ட்-டாக்களையும் சியாட்டிலில் கம்யூட்டர் ஜாபிதா எழுதும் சிலரையும்போல கர்நாடாகா போலிஸும் வெட்டியாக இருக்கிறது போலிருக்கிறது. வீரப்பன் ஒழிந்த பிறகு இவர்களுக்கெல்லாம் நிறையவே நேரம் இருக்கிறது. கொஞ்சம் வேளச்சேரி பக்கம் வந்தால் பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை இறைத்துக் கொடுத்து தமிழ்நாட்டுக்கு உதவலாம். அதைவிட்டுவிட்டு இப்படி இரண்டு நிமிட உலகப்பிரசித்திக்கு அரசாங்க அதிகாரிகளும் அலைவது கண்டு வியப்பாக இருக்கிறது.
என்னையும் பிளாக் துவக்கச் சொல்லி நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது. ஒருபுறம் சுடச்சுட என் எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்று விரும்பும் என் இரசிகர்களின் மனநிலையை எனக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும் நம்மாழ்வார்,
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்என்று சொல்லியிருப்பதுதான் இவர்களுக்கெல்லாம் என்னுடைய தாழ்மையான பதில்.
ha ha ha…சத்தியமா விழுந்து விழுந்து சிரிச்சேன்
இன்னொருவாட்டி படிச்சேன்…ஆனாலும் குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு… டாஞ்சூர் ஜில்லா ஆளுதானே நீங்க, அதான்…
பிரகாஷ் சொன்னமாதிரி, தஞ்சாவூர்க்குசும்பு. அவ்ளோதான் சொல்லமுடியும்.
சிரிக்க வைச்சுட்டீங்க.
-மதி
[4] மதி – தஞ்சாவூர்க்காரனில்லை, objection கும்மோணத்தான்.:)
[2] பிரகாஷ் – டாஞ்சூர் ஜில்லா பரவாயில்லை
–
1. சுஜாதாவை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் உங்களுக்குத் தூக்கமே வராதே!
2. சுஜாதா போன்ற மூத்த எழுத்தாளரை கிண்டலடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
–
(வேற என்னென்னல்லாம் வரும்னு டச் வுட்டுப் போச்)
Dude, that was NICE…:-)
தஞ்சாவூர் என்ற அருமையான தமிழ் சொல்லை டாஞ்சூர் என்று கூறிய பிரகாசுக்கு எதிராக 17 கோர்டுகளில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்யமான கொஸ்டின்:- அந்த வலைப்பதிவிலும் போலி பின்னூட்டம் இடலாமுங்களா???
"என்று சொல்லியிருப்பதுதான் இவர்களுக்கெல்லாம் என்னுடைய தாழ்மையான பதில்."
I think it would be as
"என்றாலும் நம்மாழ்வார்,
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்
என்று சொல்லியிருப்பதுதான் இவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில்."
I have never seen "தாழ்மையான" in him.
Good one.
Nambi
[6] பரி – வேஸ்ட்:) என்ன வலைப்பதிவெல்லாம் படிக்கறதே இல்லையா? இங்க நடக்கற ரகளையத் தொடர்ந்து படிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா, 'வன்மையா கண்டிக்கறது' ரொம்ப ஈஸியா வருமே!
[9] நீங்க கோவாலு-ன்னு போட்டீங்கன்னு நெனக்கிறேன். நம்ம வலைப்பதிவு நிரலி கோவா-ன்னு வாலை வெட்டிடுச்சு.
அதெப்படி இல்லாமப் போகும். போலீஸ்-ன்னு வந்துட்டா அதுல பெரும்பகுதியே போலி தானே!
[10] பாத்தீங்களா, நம்ம தாழ்மையான புத்தி போகமாட்டேங்குது. எங்க ஊருல கொசத்தி வாய குண்டுபோட்டு பொசுக்கினாலும் குண்டு சட்டி நாலணான்னுதான் சொல்லுவா அப்புடீம்பாங்க!