ஒப்பன் ஆபீஸ் தமிழ் விரைவாகத் தரவிறக்க
by வெங்கட் • April 28, 2005 • அறிவியல்/நுட்பம் • 11 Comments
நானறிந்த வகையில் ஒப்பன் ஆபீஸ் 1.4 தமிழ் வடிவத்தைத் தரவிறக்க அதிகச் சிக்கல்கள் இருக்கின்றன. ஓப்பன் ஆபீஸ் தளத்திலிருந்து போனால் பாரதீய தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கே சி-டாக்கின் வழங்கிகள் மிக மிக மெதுவாகச் செல்கின்றன.
தமிழா! குழுவின் தளத்திலிருந்தும் ஒப்பன் ஆபீஸ் பொதிகளுக்கு இணைப்பு இல்லை. எனவே, புதிய ஓப்பன் ஆபீஸ் 1.4 (தமிழ் வடிவத்தை) என்னுடைய வழங்கியில் போட்டுவைத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சிடாக்கின் சமீபத்திய தமிழ் குறுவட்டின் முழு உள்ளடக்கமும் இருக்கிறது. இதைப் பொதுவில் போடமுடியுமா என்று தெரியவில்லை. இந்தச் சந்தேகம் தீர்ந்தவுடன் பொதுவில் போடுகிறேன். இந்திய அரசின் முதன்மை கணினி நிறுவனமான சிடாக்கின் வழங்கிகள் ஏன் இப்படி ஒரு தலைமுறைக்கு முந்தைய வேகத்தில் இருக்கின்றன என்று தெரியவில்லை.
மேலும் அபத்தமாக, தமிழ் குறுவட்டைத் தரவிறக்கப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது வெற்று மேலட்டைதான். இதற்கு அடுத்த பக்கத்திற்குப் போனால் எந்தக் கடவுச் சொல்லும் இல்லாமல் தரவிறக்க முடிகிறது. கட்டுப்பாடுகள் வைத்தால் முழுமையாக, தகர்க்க முடியாததாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் முழுவதும் திறந்த வடிவில் இருக்க வேண்டும். (பொதுப்பணத்தில் செய்யும் காரியத்திற்கு இதுதான் சரி) இப்படி இரண்டும் கெட்டானாக இருப்பது தொழில்/நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.
Thanks Venkat. I am sure that will be helpful for a lot of us.
It seems that there is some problem with your newsfeed in ThamizmaNam. Please discard this comment if you have already fixed that.
நன்றி வெங்கட். நான் சில முறை இதை அங்கிருந்து இறக்க முயற்சி செய்து அலுத்திருந்தேன்.
ரொம்ப நன்றிங்க வெங்கட். உங்கள் நேரத்துக்கும், ஆர்வத்துக்கும். நானும் பதிவெல்லாம் செய்து இறக்க ஆரம்பித்து விட்டுவிட்டென். இன்றிரவு உங்களிடத்தில் இறக்கிப்பார்க்கிறேன்.
மீண்டும் நன்றி.
Dear Venkat,
Thanks for your effort.
[2] நவன் – உங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்குத் தரமுடியுமா? இந்தப் பக்கத்தின் தலைப்பிலிருக்கும் contact மூலம் எனக்கு நேரடியாக எழுதமுடியும். சில உதவிகள் தேவை. நன்றி
நண்பர்களுக்கு – இன்னும் முக்கியமான, தேவையான மென்கலன்களுக்கு அதிகச் சிக்கலில்லாத இலகுவில், விரைவாக இறக்க வசதியான தளம் வேண்டுமானால் மென்கலனைக் குறிப்பிட்டு எழுதவும். நான் தளத்தில் போட்டு வைக்கிறேன்.
ஓப்ப்ன் ஆபீஸை இறக்குவதில் பிரச்சனையிருந்தால் எழுதவும். அதேபோல யாராவது ஒருத்தர் சரியாக இறக்கியதைப் பற்றி எழுதினால் நிம்மதி.
//ஓப்ப்ன் ஆபீஸை இறக்குவதில் பிரச்சனையிருந்தால் எழுதவும். அதேபோல யாராவது ஒருத்தர் சரியாக இறக்கியதைப் பற்றி எழுதினால் நிம்மதி.//
இன்று நான் உங்கள் தளத்திலிருந்து சரியாக இறக்கிக் கொள்ள முடிந்தது.
ஆனால் நிறுவும்போது தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக தெரிந்ததால் எல்லாம் default ஆக செய்ய வேண்டியதாயிற்று. மென்கலனை இயக்கும் போதும் menubar கட்டம் கட்டமாகவே இருப்பதால் பயன் படுத்துவது கடினமாக உள்ளது. ஆனால் பயன்பாடு சரியாக உள்ளது.
[8] மணியன் – நான் நிறுவிப் பார்க்கிறேன். அநேகமாக சிடாக்கின் ஏதாவது ஒரு எழுத்துருவை முதலில் நிறுவவேண்டியிருக்கலாம்.
ஓப்பன் ஆபீஸ் 2 இன் சோதனைப்பதிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
rpm களாக வழங்கியிருப்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
சன் ஏன் rpm களில் மட்டும் தங்கியிருக்க முயற்சிக்கிறது?
நன்றி வெங்கட். சி-டாக் சென்று கஷ்டப்படாமல் தரவிறக்கம் செய்ய முடிந்தது. இதே போல் எழுத்துணரி போன்றவையும் இறக்கிக் கொள்ள முடிந்தால் சௌகரியமாக இருக்கும். என்னுடைய முன்கூட்டிய நன்றிகள்.