• எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பதினான்கு பாடகர்களும்

    by  • June 26, 2005 • இசை • 22 Comments

    பொதுவில் தமிழ்த் திரையுலகில் ஒருவர் செய்ததை இன்னொருவர் தன் பாணியில் செய்துபார்க்க முயற்சிப்பதில்லை. இதுபோன்ற முயற்சிகள் சுவாரசியமானவை. உதாரணமாக, பாப் மார்லியின் பிரபலமான I shot the Sheriff பாடல் பிறகு எரிக் க்ளாப்டனால் பாடப்பட்டு மிகப் பிரபலமானது. பாப் டிலனின் Like a Rolling Stones பாடலுக்கு ஜிம்மி ஹென்ட்ரிக்ஸ் தனது அற்புதமான கிடார் இசையைச் சேர்த்தார். இன்னும், கிளாப்டனின் பாடலை பீட்டில்ஸ் பாடுவது, ஜான் லென்னானின் பாடலை மடோனா பாடுவது இதெல்லாம் சகஜம். எனக்குத் தெரிந்தவகையில் பாப் டிலனின் Knockin’ on Heaven’s Door பாடலை Eric Clapton, Greatful Dead, George Harrison, Bob Morley, U2, Guns N’ Roses என்று பலர் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒருவிதமாக இருக்கும். க்ளாப்டனின் ப்ளூஸ் கிட்டார் வடிவம், கண்ஸ் அண்ட் ரோஸஸின் ஹெவி மெட்டல் வடிவம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இதுவரைக் கேட்காதவர்கள்கூட கற்பனை செய்து பார்க்கமுடியும்.

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    பாடல் : ஒரு நாள் போதுமா

    படம் : திருவிளையாடல்

    பாடியவர் : எம். பாலமுரளிகிருஷ்ணா

    பாடலாசிரியர் : கண்ணதாசன்

    இசை : கே.வி. மஹாதேவன்

    மறுமுயற்சி : எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    ஆனால் நம்மூரில் பொதுவாக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் குறைவு. நம்மாட்கள் அநியாயத்திற்குச் சுருங்கிப் போகிறார்கள். ஒன்று மற்றவர் பாடலை நாம் பாடினார் அவருக்கு மரியாதை கொடுப்பதைப் போலாகிவிடும் (கொடுத்தால்தான் என்ன?) என்ற திமிர், மற்றது அவரையும் நம்மையும் ஒப்பிட்டுவிடுவார்களோ என்ற பயம். இதையெல்லாம் கடந்து முயற்சி செய்வதற்கு நிறைய திறமையும், பரந்த மனதும், தைரியமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைத்தனமான ஆர்வம் வேண்டும்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் இவை எல்லாமே நிறைய இருக்கின்றன. அதனால் 14 பாடல்களைப் பொறுக்கியெடுத்துப் பாடியிருக்கிறார். இதில் அந்தக் காலத்து திருச்சி லோகநாதனில் தொடங்கி இப்பொழுதைய ஹரிஹரன், ஏ.ஆர். ரகுமான் வரை அடக்கம். கவனிக்கவும் – பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜெயச்சந்திரன், யேசுதாஸ், ஹரிஹரன், போன்றவர்களின் குரல்களைப் பாடுவதில் எஸ்.பி.பிக்கு அவ்வளவாகப் பிரச்சனையில்லை. ஆனால் திருச்சி லோகநாதன், எம்.எஸ். விஸ்வநாதன் போன்றவர்களின் பாடல்களைப் பாடுவதில் நிறைய சிக்கல் இருக்கிறது. இதில் எஸ்.பி.பி நிறையவே வெற்றி கண்டிருக்கிறார். 14 பாடகர்கள், கிட்டத்தட்ட அறுபது வருட இடைவெளியில் வந்த பாடல்கள் – இவற்றை ஒரே பாடகரின் குரலில் கேட்பது சுவாரசியமனா விஷயம்தான். இன்னொரு முக்கியமான விஷயம் – இந்தப் பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் வெவ்வேறு வயதுகளில் பாடியிருக்கிறார்கள், உதாரணமாக இருபது வருடங்களுக்கு முன்வந்த கண்ணே கலைமானே பாடலை இப்பொழுது யேசுதாஸ் பாடினால் அதுவே மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும். அந்த நெளிவு சுளிவுகளைத் திரும்பக் கொண்டுவருவது அவருக்கே இயலாததாகத்தான் இருக்கும்.

    மாதிரிக்கு இரண்டு பாடல்களையும் அவற்றின் முதல்வடிவங்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன். இரண்டுமே கடினமான பாடல்கள். ஒன்று கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா தன்னுடைய சாஸ்திரிய இசைத் திறமையெல்லாம் பயன்படுத்திப் பாடுவது – குறிப்பாக பாடலின் இறுதிப்பகுதி. மற்றது தனித்தன்மை கொண்ட திருச்சி லோகநாதனின் அற்புதமான பாடலை எஸ்.பி.பி பாடுவது. இந்தப் பாடலில் பல இடங்களில் உச்சஸ்தாயியில் பாடவேண்டியிருக்கும். எஸ்.பி.பி நன்றாகவே செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

    பாடல் : ஆசையே அலைபோலே

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    படம் : தை பிறந்தால் வழிபிறக்கும் (1966)

    பாடியவர் : திருச்சி லோகநாதன்

    பாடலாசிரியர் : கண்ணதாசன்

    இசை : கே.வி. மஹாதேவன்

    மறுமுயற்சி :
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    இதே போன்ற சிறுமுயற்சிகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதானிருக்கின்றன. உதாரணமாக சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் தொட்டால் பூமலரும் பாடலுக்கு தன்னுடைய பாணியில் இசையமைத்தார். இதற்கு முன்னால், இளையராஜா உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் பாடலை டூயட்டாக்கினார். சொல்லப்போனால் பாடகர் அதே ட்யூனில் திரும்பப் பாடுவதைவிட இசையமைப்பாளர் வடிவத்தையே மாற்றுவதுதான் இன்னும் சுவாரசியமானது. ஆனால் இங்கே எப்பொழுதாவதுதான் அப்படி நடக்கிறது. சில சமயங்களில் பழைய பாடல் ஒன்றின் வரிகள் புதிய படத்தின் சூழலுக்கு அற்புதமாகப் பொருந்துவதைக் கண்டிருக்கிறேன். “ஆஹா, இந்த எடத்துல அந்தப் பாட்டு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று தோன்றும்.

    இந்த இசைத்தொகுப்பின் பிற பாடல்களை தூள்.காம் மூலம் கேட்க முடியும். பின்னர் தூள்.காம் பேட்டியில் எஸ்.பி.பி இது அரைகுறை முயற்சி என்றும் எந்தவிதமான பெரிய தயாரிப்புகளும் இல்லாமல் எதேச்சையாகப் பாடியது என்றும், இது அப்படியே வெளிவந்தது தனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து நன்றாகச் செய்திருக்கலாம் என்பது அவருடைய ஆசை. என்னைப் பொருத்தவரை இதில் எஸ்.பி.பிக்கு முழுத்தோல்வி சீர்காழி கோவிந்தராஜனின் பாடலில்தான். கொஞ்சமும் சரிவரவில்லை. ஆனால் இவற்றை மூலங்களுடன் வரிக்குவரி ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு இன்னொரு இசைமேதை செலுத்தியிருக்கும் மரியாதை என்ற கண்ணோட்டத்துடன் கேட்டுப்பாருங்கள் – அற்புதமாக இரசிக்க முடியும்.

    22 Responses to எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பதினான்கு பாடகர்களும்

    1. June 26, 2005 at 4:19 pm

      Venkatttttttttttttttttttttttttttt,
      I thought of writing about this :) I have all the songs in a CD. I bought this in Chennai, Music world. This is one of my fav cd now.
      Thanks for the post, SPB is a gr8 singer.

      Regs,Arun

    2. bb
      June 26, 2005 at 5:21 pm

      Venkat, these songs were obviously the best of the other singers. If someone were to do this on SPB songs, what songs of SPB would you want them to sing?

    3. June 26, 2005 at 10:18 pm

      [2] அருண் – சிடி கவர்ல எந்த ட்ரூப் மியூஸிக்னு போட்ருக்கா? வேறேதாவது தகவல் இருக்கா? எனக்கு பாலாஜிகிட்டேந்துதான் கெடச்சது

    4. June 26, 2005 at 10:50 pm

      [2] பாலாஜி – ம்ம்ம்.. நான் கொஞ்சம்கூட இந்தமாதிரி யோசிக்கல. சிக்கல்தான். ஆனா, ட்ரை பண்ணி பாக்கலாம்;

      பல எஸ்.பி.பி பாட்டை வேற யாராலயும் பாடமுடியாதுன்னுதான் தோணுது.

      • ராத்திரியில் பூத்திருக்கும், வான்நிலா நிலா அல்ல – யேசுதாஸ்
      • காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ – பிபிஸ்ரீனிவாஸ்
      • விழியிலே மலர்ந்தது, பனிவிழும் மலர்வனம் – ஹரிஹரன்
      • நந்தா என் நிலா – பாலமுரளிகிருஷ்ணா
      • திருத்தேரில் வரும் சிலையோ – டி.எம்.எஸ்
      • சொல்லச் சொல்ல என்ன பெருமை, தகிட தஜிமி (சலங்கைஒலி) – சங்கர் மகாதேவன்
      • அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி – ஏ.ஆர். ரஹமான்
      • பொன் என்பதோ, பூவென்பதோ, காலை நேரப் பூங்குயில் – ஜெயச்சந்திரன்
      • கடவீதி கலகலக்கும் – மலேஷியா வாசுதேவன்
      • போகுதே போகுதே (கடலோரக் கவிதைகள்) – இளையராஜா

      ம்ம்… இது கொஞ்சம் விபரீதமாத்தான் போகுது. ஆனா என்ன எப்படித்தான் பாடுறாங்கன்னு பாப்போமே.

    5. June 27, 2005 at 12:06 am

      அய்யா, தூள்.காமில் இந்த பாடல்கள் வேலை செய்யவில்லையே. வெகுநாட்கள் முன்பிருந்து பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். ம்ஹும்! இப்போது ஒருவேளை எனக்கு மட்டும் கிடைக்காமல் மற்றவர்களுக்கு வேலை செய்கிறதோ?

      உங்கள் பாடல்களுக்கு மிகவும் நன்றி. SPB எல்லா ஜெம்ஸ்களுமே ஏதேச்சையாக தருணத்தில் வந்தவையாகவே தெரிகிறது. இப்படி இத்தனை பரிமாணமுள்ள ஒரே பாடகனாக (முறைப்படியான சங்கீத பயிற்சியில் வராமல்) அவர் மட்டுமே தெரிகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.

    6. June 27, 2005 at 12:29 am

      'ஒரு நாள் போதுமா' கலக்கிவிட்டார். ஆனால் 'ஆசையே அலை போல' எனக்கு ரசிக்கவில்லை. படலுக்கு பொருந்தாமல் அங்கங்கே (தனது முத்திரையாக)குழைவது காரணம் என்று தோன்றுகிறது. ஒருமுறை கேட்டதில் வந்த தனிப்பட்ட கருத்து என்று சொல்ல தேவையில்லை.

    7. June 27, 2005 at 8:04 am

      [5] வஸந்த் – கட்டாயமாக, இயற்கையிலேயே இத்தனை வளமான குரலும், பாவமும், நெகிழ்வும், கம்பீரமும் வேறு எவரிடமும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. பல நல்ல பாடல்களை எஸ்.பி.பி பாடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் எஸ்.பி.பியின் அற்புதப் பாடல்களை அப்படிப் பிற பாடகர்களுக்குப் பொருத்தத் தோன்றுவதில்லை.

    8. June 27, 2005 at 8:06 am

      [7] என்ன பாலாஜி – கேள்வியைக் கேட்டுட்டுப் பதில் சொன்னா ஆளையே காணும்!

      எம்.ஜி.ஆர் சட்டசபைல இப்படித்தான் செய்வார். ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதில் சொல்ற சமயத்துல தூங்கிடுவார். :)

    9. ரோஸாவசந்த்
      June 27, 2005 at 9:39 am

      பிபி, உங்களுக்கு சம்பிரதாயமாய் (இந்த பதிலுக்கும், சுட்டிக்கும்) மட்டும் நன்றி சொன்னால் போதாது. ரொம்ப நாளாய் கேட்டு வரும், SOTD தொடங்கி ஏகப்பட்ட கடன் இருக்கு. அதானல் நான் முதல்வரானால் அண்ணா சாலையில் உங்களுக்கு ஒரு சிலை வைக்கிறேன்.

      (ஆசையே அலை போல மீண்டும் கேட்டபோது எஸ்பிபி கலக்கியிருப்பதாகவே படுகிறது, குறிப்பாய் சரணங்களில். இதற்கு மூன்று முறை கேடக வேண்டியிருந்தது. )

    10. ரோஸாவசந்த்
      June 27, 2005 at 9:47 am

      பிபி, பாடல்களை கேட்டேன். எஸ்பிபியை கேட்க தூர்தர்ஷன் மெல்லிசை வகை பிண்ணணி இசையை சகித்து கொள்வது மட்டும் கஷ்டமாக இருந்தது.

    11. June 27, 2005 at 11:04 am

      [10] வஸந்த் – ஆசையே அலைபோலே மிகவும் கஷ்டமான பாட்டு. நீங்கள் முதல்தடவை அப்படி எழுதியபொழுது நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இரண்டு முறை ஒரிஜினலையும் எஸ்.பி.பியையும் மாற்றி மாற்றிக் கேட்டுப்பாருங்கள். குறிப்பாக நீங்கள் சொன்ன சரணங்களின் உச்சஸ்தாயி துவக்கங்கள்.

      இன்னொரு விஷயம் – ஸ்டுடியோவில் பதிவு செய்வதற்கும் ஒரே தடவையில் மேடையில் பாடுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறதுதானே. ஆனால் இப்படிப் 14 பாட்டுக்களை முழுக்க, துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு ஒன்றுமாற்றி ஒன்றாகத் திருப்பிப்பாடுவது எனக்கென்னமோ அசுரசாதனையாகத்தான் தோன்றுகிறது.

    12. June 27, 2005 at 11:25 am

      Venkat,
      I will give you the details…today evening.

    13. bb
      June 27, 2005 at 6:00 pm

      [9] என்ன பாலாஜி – கேள்வியைக் கேட்டுட்டுப் பதில் சொன்னா ஆளையே காணும்!

      hee hee :) ) You've played it easy. naan kashtamaana songs-aa list pOda irundhEn. songs that no one can come close to SPB in singing, like "niththam niththam en kaNNOdu" and "sOgam ini illai".

    14. June 27, 2005 at 11:13 pm

      [12] வெங்கட் நீங்கள் சொல்வது உண்மை என்றே உணருகிறேன். திருச்சியின் குரலில் கேட்டு மிகவும் பழக்கமாகிப் போன காரணத்தால், முதல் முறை கேட்டபோது என்னால் உணர முடியாமல் போயிருக்கலாம்.

    15. June 28, 2005 at 2:45 pm

      Hear SPB singing Rajavin Paarvai here..

      http://www.musicindiaonline.com/l/20/s/movie_name.6996/…

    16. June 29, 2005 at 10:14 am

      Dear Venkat,
      Sorry for the delay…
      The orchestra is done by Dindugal Angingu.
      The cd is released by a new company ..I guess!

    17. அல்வாசிட்டி.சம
      June 29, 2005 at 10:08 pm

      அடடே இத வச்சி இப்படி ஒரு பதிவு வேற போடலாமா? நன்று. இந்த பாடல்கள் என்னிடம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுக்கு முன்பே http://www.coolgoose.com -ல் இருந்து இறக்கி இருக்கிறேன். மேலும் என் தந்தைக்காக உண்மையான பாடல் அடுத்து எஸ்.பி.பி பாடியது என ஒரு வட்டு வேறு எழுதி கொடுத்தேன். இப்பொழுது கூட மேற்சொன்ன வலைதளத்தில் சென்று தேடல் பொட்டியில் "unsung" என்று தட்டி தேடுங்கள் இந்த பாடல்களை வருசைபடுத்தி கொடுக்கும்.

      எனக்கு பிடித்தவை ஒரு நாள் போதுமா, சொல்லத்தான் நினைக்கிறேன்…

    18. August 29, 2008 at 12:51 am

      அன்புள்ள வெங்கட் அவர்களூக்கு,

      வணக்கம் கோவை ரவீ எழுதும் அன்பு மடல். இங்கே கொடுத்துள்ள சுட்டியில் கடந்த ஜூன் 4 2008 அன்று பாலுஜியின் பிறந்த நாள் பரிசாக கோவை நேயர்களூக்கு நீங்கள் பதிவில் குறிப்பிட்ட பாடல்களை வானொலித் தொகுப்பாக வழங்கினேன். அவற்றை கோவை சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பினார்கள். ஜூன் 2005 ல் நன்றாக ரசித்து சிலாகித்து கேட்டிருக்கீறீர்கள். கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 2005 ல் தான் நான் இணையத்தில் அடியெடுத்து வைத்த காலம். ஆகையால் இந்த பதிவை நான் பார்க்கவில்லை இப்போது தான் படித்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. http://www.myspb.blogspot.com இந்த தளத்தில் அவருக்கென்றே தனியாக ஒரு தளம் ஆரம்பித்து பாடாத பாடல்கள் என்ற தலைப்பில் (11.6.2006 முதல் 18.7.2006) வரை தனித்தனியாக தொகுப்புகளாக (பாஸ்டன் சுந்தர், நானும் )வழங்கியுள்ளோம் உங்களூக்கு நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள். நீங்கள் பாலுஜியின் மீது அதீதமான அன்பு வைத்துருப்பது இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன். மிக்க்க மகிழ்ச்சி. பாலுஜியின் பாடல்கள் முடிந்தவரை வாரத்தில் 2 அல்லது 3 பாடல்கள் பதிவது என் கடமையாகவும் அவருக்கும் செய்யும் மரியாதையாகவும் நினைக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் விரும்பும். கோவை ரவீ

    19. August 29, 2008 at 1:08 am

      அருண், வெங்கட் சார்

      //[2] அருண் – சிடி கவர்ல எந்த ட்ரூப் மியூஸிக்னு போட்ருக்கா? வேறேதாவது தகவல் இருக்கா? எனக்கு பாலாஜிகிட்டேந்துதான் கெடச்சது//

      இனித ஆல்பத்தின் மியுஸ்க் திண்டுக்கல் அங்கிங்கு இசைகுழுவினர். அதன் மேளாளர் திரு. முத்தைய்யா அவர்கள் அவர் பாலுஜியுடன் உள்ள புகைப்படம் பாடும் நிலா பாலு தளத்தில் நான் மேலே குறிப்பிட்ட தேதிகளில் பதிவாக உள்ளது.

    20. admin
      August 29, 2008 at 9:29 am

      ரவி – myspb தளத்தை வழக்கமாக உடனுக்குடன் படிக்க முடியாவிட்டாலும் அதிலிருக்கும் ஒவ்வொரு பதிவையும் சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதெல்லாம் ஒட்டுமொத்தமாகப் படித்து வருகிறேன். (எல்லா தளங்களுமே இப்பொழுது அப்படித்தான் என்றாகிவிட்டன). உங்கள் பதிவுகளுக்கு ஒட்டுமொத்த நன்றிகள்.

      ஒருக்காலத்தில் பாலுவின் 1980 வரையான அனைத்து பாடல்களையும் திரட்டிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நேரமின்மை காரணமாக அதைத் தொடரமுடியாமல் நின்றுபோய்விட்டது.என்னிடம் தற்பொழுது இருக்கும் பாடல்களின் பட்டியலை உங்களுக்கு அனுப்புகிறேன். இதில் இல்லாதது ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் (உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றாலும். ஆனால் உங்களைத் தொடர்ந்து வாசித்ததில் உங்களிடம் இல்லாதது ஏதுமில்லை என்றுதான் தோன்றுகிறது).

      பாலுவின் சில பழைய தனிப்பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். (தணிகை வாழும் முருகா, நல்லதமிழ் சொல்லாலே, திருப்பதி வெங்கடேசா…) இவையெலாம் கே.வி. மஹாதேவனின் துணை இசையமைப்பாளர் புகழேந்தி இசையில் பாலு பாடியது, உங்களிடம் உண்டா?

    21. December 15, 2008 at 4:15 am

      திருத்தணிகை வாழும் முருகா ஏற்கெனவே பாலுஜியின் பக்தி பாடல் தளமான என்னுடைய தெய்வீக ராகம் பதிவில் முதல் பாடலாக பதிந்துள்ளேன். இதோ அதன் சுட்டி. http://spbdevo.blogspot.com/2007/06/blog-post_03.html கேட்டு மகிழுங்கள். மற்றவை தேடி பார்த்து சொல்கிறேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *