• ஊழல் – இன்னொரு பலி : மஞ்சுநாத் சண்முகம்

    by  • November 23, 2005 • பொது • 7 Comments

    indianoil advt

    இன்னொரு சத்யேந்திர தூபே. மஞ்சுநாத் சண்முகத்தின் உடல் 20ம் தேதியன்று லக்னோவுக்கு அருகில் சீதாப்பூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சுமந்து சென்ற கார் சுலக்ஷ்ண் மித்தல் என்ற பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மகனுடையது. கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாகத்தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் வர்த்தக மேலாளரான மஞ்சு நாதன் என்றழைக்கப்படும் மஞ்சுநாத் சண்முகம் முறைகேடுகளின் காரணமாக மித்தலின் பெட்ரோல் பங்கை இழுத்து மூட உத்தரவிட்டிருந்தார்.

    தன்னுடைய கடைமைச் செய்ததற்காக உயிரை இழந்திருக்கும் இந்த இளைஞர்
    லக்னோ இந்திய மேலாண்மைக் கழகத்தில் (Indian Institute of Management) பட்டம் பெற்றவர். கொல்லப்படுவதற்குப் பல நாட்கள் முன்னதாகவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனைச் சேர்ந்த பெட்ரோல் வழங்கிகளில் நடக்கும் தில்லு முல்லுகளை மென்மையாகவும் கொஞ்சம் கடுமையாகவும் கண்டிக்க முற்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக எல்லா பங்க்-லிரும் ஊழல்களும் கலப்படும் நடத்தினால் இதைத் தட்டிக்கேட்க முடியாமல் போகும் என்பது பங்க் உரிமையாளர்களின் திமிர்த்தனமான நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதை மஞ்சு தன் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். மஞ்சுவின் நண்பர் கௌரவ் சப்னிஸ் தன்னுடைய வலைப்பதிவி்ல் எழுதியது;


    Conversation invariably turned to Manju’s work life. We asked him how it felt to work in a PSU like IOCL. Was he the “bada babu”. He shrugged. He said work was OK and all, but he felt that the business would improve a lot more if there was transparency. Apparently, part of his job was to inspect samples from petrol pumps, and report back to the company. The petrol pumps were ideally supposed to adhere to very high standards of purity. But he said the adulteration in the petrol pumps in UP, where he was posted, was usually so rampant, it’s a wonder even a single petrol pump was functioning. Sunil and I, ever the free-market-nuts, talked about how allotment of petrol pumps, rather than being an “allotment” should be a transparent auction or bidding process. A petrol pump license should not be a political capital to be bartered. Manju agreed. He said the reason why this adulteration happened so brazenly was that the dealers knew that no matter what happens, their licenses couldn’t be cancelled. If everyone does it, how many pumps will the company shut down? He said he usually tried to cajole, convince and scold the dealers to not indulge in such dishonesty. He said some fell in line, but most of them usually got back to the same old adulteration business. In fact Manju said, some of the petrol pump owners are downright scary. Whatever he spoke of his job shocked me and Sunil. It was clearly a job that tested one’s integrity and courage a lot.

    சத்யேந்திர தூபேயின் கொலையை மறந்தாகிவிட்டது. எல்லோரும் குஷ்புவையும் சுகாசினியையும் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கவலையில் மஞ்சுவின் சாவு கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. இன்னொரு மஞ்சு, இன்னொரு தூபே வேண்டாம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதைப் பற்றி உரக்கப் பேசி விழிப்பூட்டுவது ஒன்றே இதுபோன்ற அவலங்களைத் தடுத்து நிறுத்த உதவும் என்று தோன்றுகிறது. இயன்ற அளவு இதைப் பற்றி எல்லோரிடமும் பேசுங்கள், அந்தச் சாவு பயனற்றதாக காற்றில் கரைந்து போகாமலிருக்க நம்மாலானதைச் செய்வோம்.

    இந்தியா ஒளிர்கிறது என்று பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் முழங்கிக் கொண்டிருக்க ஒளிரச் செய்யும் தீ அச்சமூட்டுவதாக இருக்கிறது.

    7 Responses to ஊழல் – இன்னொரு பலி : மஞ்சுநாத் சண்முகம்

    1. karthikramas
      November 23, 2005 at 4:46 pm

      ஜனநாயகம் பேச்சளவில் இருக்கும் நாட்டில் இப்படித்தான் நடக்கும். தனி மனிதனின் பாதுகாப்பு எங்கு கேள்விக்குறியாகிறதோ அங்கு ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

      இந்த கொலையை வன்மையாக கண்டிக்கிறேன்.

    2. November 23, 2005 at 4:51 pm

      வெங்கட்,
      இதை விக்னேஷ் என்பவர் தனது பதிவில் சில மணி நேரங்களுக்கு முன் எழுதியிருந்தார்.

      இந்த நாள் இனிய நாள் அல்ல …
      http://dhandora.blogspot.com/2005/11/blog-post_113276787051074836.html…

      //அனைவரும் குஷ்புவையும் சுகாசினியையும் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

      எது அரசியல் இலாபமும் விளம்பரமும் தருமோ அதுதான் அரசியல்வாதிகளின் குறிக்கோள். அதனைச் சுற்றியே வலைப்பதிவுகளும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
      வலைப்பதிவுகளில் விமர்சிப்பது பொது மக்களைச் சேர்வதில்லை. பொது மக்களைச்சென்றடையும் ஊடகங்கள் அவற்றின் தேவைகளுக்காகவே செய்திகள் தருகின்றன.
      நாம் அரசாங்கத்தை மட்டுமே கேள்வி கேட்க முடியும். அவர்களே இதற்கு பொறுப்பு. ஊழல்களின் ஊற்றுக்கண்களில் ஒன்று இந்த பெட்ரோல் பங்குகள்.

    3. November 23, 2005 at 4:58 pm

      [1] கார்த்திக் – பல முறை நான் பீஹார், உ.பி, மாநிலங்களில் என்னதான் நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
      [2] கல்வெட்டு – நான் அவருடைய பதிவைப் படிக்கவில்லை. என்னுடைய செய்தி படிப்பியில் முதல் மூன்று வரிகளில் அது கங்கூலியைப் பற்றி இருந்ததால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு ஆங்கிலப் பதிவின் வழியே போய் எக்ஸ்பிரஸ் செய்தியைத் தேடிப்படித்தேன். விக்னேஷ்-ம் மிகச் சரியாக எழுதியிருக்கிறார். அந்தச் சுட்டிக்கு நன்றிகள்.

    4. November 23, 2005 at 4:59 pm

      [2] நான் படித்தவரையில் இந்தியாவில் பத்திரிக்கைகள் இதற்குப் பெரிய முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளிலாவது இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டியது அவசியம். முன்பு சத்யேந்திர தூபேயின் கொலை பற்றிய நிறைய செய்திகளை பத்ரி விரிவாக எழுதியிருந்தார்.

    5. November 23, 2005 at 6:45 pm

      good post.how many bloggers know abt him(manju)?? usually they want to post unnecessary things kushboo, ramadoss,tamil etc.

    6. November 23, 2005 at 8:56 pm

      //எல்லோரும் குஷ்புவையும் சுகாசினியையும் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கவலையில் மஞ்சுவின் சாவு கவனிக்கப்படாமல் போயிருக்கிறது//

      தமிழ் வலைப்பதிவு = தமிழகம் + உலகம் – rest of india

    7. November 26, 2005 at 12:00 pm

      வெங்கட்,
      பதிவுக்கு என் நன்றி. நிஜமாகவே நெஞ்சு கொதிக்கிறது! சில சமயங்களில் நாமிருப்பது (உண்மையான!) ஜனநாயக நாடு தானா என்று தோன்றுகிறது. கட்டுப்பாடற்ற நாம், ஜனநாயகம் என்ற அமைப்புக்கு, லாயக்கானவர்களா என்ற கேள்வியும் எழுகிறது. இக்கொலையைச் செய்த கயவர்களுக்கு, அரபு நாடுகளில் வழங்கப்படுவதைப் போன்ற தண்டனையை அளித்தால், அந்த பயத்தில் இவரைப் போன்றோர் திருந்துவார்களோ என்ற எண்ணமும் வருகிறது :(

      இது பற்றி இன்னும் தகவல்கள் சேகரித்து ஒரு பதிவிட முயற்சிக்கிறேன்.
      என்றென்றும் அன்புடன்
      பாலா

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *