இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை
by வெங்கட் • August 12, 2005 • பொது • 9 Comments
இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிபிஸி செய்தி வெளியிட்டிருக்கிறது.
செய்தி் கொலைக்கான நோக்கம் என்னவென்று தெரியாவிட்டாலும் புலிகளின்மீது சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்கிறது.
இது இலங்கையில் மெல்லிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அமைதியை மிகவும் பாதிக்கலாம் என்பது கவலையைத் தருகிறது. ஏற்கனவே பாதுகாப்புப் படைகள் கொழும்புவில் சோதனையிடத் துவங்கிருக்கிறார்கள்.
தற்போதுதான் செய்தியை நானும் அறிந்தேன். போர் திரும்ப மூழும் எல்லாச்சாத்தியங்களும் தெரிகின்றன். திரும்ப அப்பாவி மக்களே எல்லாருது அதிகார வெறிக்கும் இரத்த சிந்துவார்கள்.
வல்லவர்கள் தப்பித்துவிடுவார்கள். மெலிந்தவர்கள் திரும்பவும் எல்லாப் பாக்க பாக்கமும் இருந்துவரும் இந்நல்களையும் சகித்துக்கொண்டு வாழ்வேண்டியதுதான்… எப்பொழுத்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த மக்களைப்பற்றி அக்ககறைப்படப் போகிறார்களோ?
-தர்சன்
[1] லக்ஷ்மண் கதிர்காமர் was not a general public, he was the one in அதிகாரத்தில் இருப்பவர்கள் …. so don't blab so much about it!
ஒரு அரக்கன் அழிந்த நாளை தீபாவளியாக
கொண்டாடுகிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் இந்த அரக்கன் ஒழிந்த
நாளையும் தீபாவளியாக கொண்டாடலாம்.
[3] அப்படியாக நினைப்பது பொருந்தாது. கதிர்காமர் இறந்ததையிட்டு எனக்கு ஒரு சொட்டுக்கண்ணீரும் வராதென்றபோதிலுங்கூட, இலங்கையின் இருக்கும் நிலையை இந்நிகழ்வு மிகவும் மோசமாக்கியிருக்கின்றதென்றே நினைக்கிறேன். யார் இந்தக்கொலையைச் செய்திருந்தாலுங்கூட, நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கவேண்டுமென்ற நோக்கிலேயே செய்திருக்கின்றார்களென்று தோன்றுகிறது.
[4]நானும் இதையேதான் சொன்னேன். கதிர்காமரைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இதனால் இலங்கையில் மெல்லிழையில் ஊசலாடும் அமைதியும் இழந்துபோகக்கூடும். தர்சன் சொன்னதைப்போல என் கவலை மெலிந்தவர்களைப் பற்றித்தான்.
வெறிகொண்டு அலைபவர்களுக்கு தங்களை நியாயப்படுத்திக்கொள்ள ஒரு சிறிய பொறி கிடைத்தாலும் போதும், தீமூட்டத் தயங்கமாட்டார்கள்.இதை நாம் ஈழத்தில் எத்தனைமுறை பார்த்திருப்போம். இதன் இன்னொரு சாத்தியம் முகத்தில் அறையும்பொழுது கலக்கமாக இருக்கிறது.
எம்மைப்போன்ற கையாலாகாதவர்கள் இந்த நேரத்தில் என்ன செய்யமுடியும்?
இலங்கையில் அமைதி முயற்சி எப்போதோ ஊசலாட ஆரம்பித்து விட்டது.கிழக்கில் புலனாய்வு பிரிவு நிழல் யுத்தத்தினை ஆரம்பித்த போதே அதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.அவர்களின் நோக்கம் புலிகளை யுத்தத்தினை நோக்கி தூண்டுவதே.புலிகளை கொன்றார்கள்,மக்களை,புத்திஜீவிகளைக் கொன்றார்கள்.கருணாவின் வெளியேற்றம் அவர்களுக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு.முகமூடி வசதியாக கிடைத்தது
அதற்குள் புகுந்து கொண்டனர்.கிழக்கு மாகாணத்தில் தமிழ்
முஸ்லீம்களுக்கு இடையே 1990 ம் ஆண்டு தொடக்கம்
திட்டமிட்ட முறையில் முரண்பாடுகளை உண்டாக்குவதில்
வெற்றிபெற்றனர்.இன்றும் அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்ற பல அரசியல்
கொலைகள் கூட இலகுவாக புலிகளின் தலையில் போடப்பட்டன.எல்லாப் பாதைகளும் ரோமாபுரிநோக்கி என்பது போல எல்லாப் பழிகளும் புலிகளின் மீதே போடப்பட்டன.புலிகள் அரசியல் கொலைகள் செய்யவில்லை
என்று நான் சொல்ல வரவில்லை.ஆனால் பலரால்
செய்யப்பட்ட ப்டுகொலைகள் அது உட்கட்சி கொலைகள்.உள்
இயக்க முரண்பாட்டு கொலைகள்,அரசியல் ரீதியான கொலைகள்,வர்த்தகப்போட்டியினால் நிகழ்ந்த கொலைகள்
போனறன கூட புலிகளின் மீதே இலகுவாக ,வசதியாக போடப்பட்டன.
இன்று இலங்கையில் புலிகளிடமும் இராணுவத்தினரிடமும் தான் ஆயுதங்கள் இருக்கின்றன என்றால் அது 2005 ம்
ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.இன்று
பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி கொலைக்குழுக்கள்,ரவுடிகள்,இராணுவத்தில் இருந்து தப்பியோடியோர் போன்றோரிடம் கூட ஆயுதங்கள் உண்டு.
பக்கத்து வீட்டு கோழிச்சண்டைக்கு கூட "கிரைனைட்"
வீசப்படும் நிலை இன்று இலங்கையில் உள்ளது.
இப்போது நடந்திருக்கும் இக்கொலை நீண்டதூர சினைப்பர்
ஆயுத்தினைப் பாவித்து நடந்திருக்கும் முதல் கொலை.
யார் செய்தார்களோ அது கடவுளுக்குதான் வெளிச்சம்.ஆனால் எல்லாப் பாதைகளும் ரோமாபுரி நோக்கி
என்ப்து போல எல்லோர் கைகளும் புலிகளை நோக்கியே
நீழும் என்பது புலிகள் உட்பட யாபேருக்கும் தெரியும்.இதில்
ஜே.வி.பி,ஜே.வி.பி+இராணுவ புலனாய்வு,அல்லது கண்கானிப்பு குழு அடிக்கடி கூறும் "மூன்றாவது குழு"அல்லது
சில வல்லரசுகள் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்க சாத்தியங்கள் உண்டு.மறுப்பதற்கு இல்லை.சில வெளிநாட்டு
புலனாய்வு அமைப்புகள் நேரடியாகவோ அல்லது தமது
நலன்பேணுபவர்கள் மூலமோ இதில் ஈடுபட்டிருக்கலாம்.
இந்த சாத்தியத்தினையும் மறுப்பதற்கு இல்லை.
இல்லை.புலிகள் தான் இதை செய்திருப்பார்கள் என்றால்
அடுத்த கட்டத்தில் வலுவாக காலடி பதித்திருக்கிறார்கள் என்று சொல்லாம்.அதாவது இலங்கை புலனாய்வு பிரிவு
நடத்திவந்த பனிப்போரில் அடுத்த கட்டம் திறக்கப்பட்டுவிட்டது.குட்டக்குட்ட குனிபவன் முட்டாள்.
அதே போல யுத்தம் என்றால் அழிவு என்றுவிட்டு யுத்தத்தினை திணிக்கும் போது வாளா இருக்கவும் முடியாது
இருக்கவும் கூடாது.
இந்த கொலைக்காக நான் ஒரு
துளி சொட்டு கண்ணீர் சிந்துவேனா என்ற கேள்விக்கே இடமில்லை.ஏனோதெரியவில்லை இன்று எனது மனம்
மிகவும் மகிழ்சியாக இல்லை என்று
என்னால் பொய் சொல்லமுடியவில்லை.
பெயரிலி சொன்னதும் பின் வெங்கட் சொன்னதுமே என் கருத்தும்.
//கதிர்காமரைப் பற்றி எனக்குக் கவலையில்லை//
That doesn't sound like Venkat. Is this you honest opinion or peer pressure?
I didn't expect this kind of comment on a person brutally murdered by ruthless terrorists.