• இயற்பியல் ஆண்டு குறித்த பிபிஸி செவ்வி

    by  • January 25, 2005 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    பிபிஸி தளத்தில் இருக்கும் என்னுடைய இயற்பியல் குறித்த செவ்வியைக் கேட்பதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் சொன்னதால், அந்த 30 நிமிட நிகழ்ச்சியை இறக்கி அதிலிருந்து ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்கு ஒலிபரப்பான என்னுடைய பகுதியை மாத்திரம் தனியே வெட்டி, என் வசமிருக்கும் வழங்கியொன்றில் போட்டுவைத்திருக்கிறேன். இதன் முகவரி

    http://www.optics.utoronto.ca/venkat/bbc_venkat_physics.mp3

    பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்பி3 வடிவம் அது. ஒலிபரப்பை மோனோ வடிவில் மாற்றியிருக்கிறேன். இருந்தும் கோப்பின் அளவு சற்றுப் பெரிது (6.9 மெகாபைட்கள்). ரியல் கேட்கும் வசதியில்லாதவர்களுக்காக.

    மோடம் இணைப்புள்ளவர்களுக்கென இதை இன்னும் சுருக்கி ரியல் ஆடியோ வடிவில் போட்டிருக்கிறேன். இந்தக் கோப்பின் அளவு 1.8 மெகாபைட்கள்.

    http://www.optics.utoronto.ca/venkat/bbc_venkat_physics.rm

    5 Responses to இயற்பியல் ஆண்டு குறித்த பிபிஸி செவ்வி

    1. January 25, 2005 at 9:07 pm

      Venkat, It was very good.

    2. karthikramas
      January 25, 2005 at 9:07 pm

      1. எல்லோர்க்கும் அறிவியலின் இசை லேசாய் சிரிப்பை வரவழைத்தது.
      2. முதல் நிமிடம் பேசும்போது வார்த்தைகள் சரளமாக வரவில்லை, 2 , 3-ஆம் நிடங்களுக்கு பிறகு சரளமாக பேசி இருக்கிறீர்கள். ரமேஷ் உங்களைவிட சரளமாக பேசுவதாகப் பட்டது. தினமும் 8 மணிநேரம் ஆங்கிலத்தில் பேசியே தீரவேண்டும் என்ற் சூழ்னிலையினால் வரும் வினையோ?
      3. கவின்கலைகளை பயில்பவர்கள் ,அறிவியலை பயில்வதில்லை/கலையாக பாவிப்பதில்லை என்ற ப்ளாஷ் செய்தி சூப்பர்
      4. பிற்பாதி செய்தி சமூகவியலாய்போனதும் திருப்தியே. கேள்வியாளரும் ஐன்ஸ்டீனை தொங்கவிட்டுவிட்டு மாணவர்களுக்கு போய்விட்டார்.

    3. January 25, 2005 at 9:15 pm

      வெங்கட்,

      மீண்டும் ஒருமுறை தெளிவான தமிழ் உச்சரிப்புடன் உங்கள் செவ்வி. நன்றாக இருக்கிறது. அறிவியல் மனப்பாங்கை ஊக்குவிக்க உங்கள் பணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

      சிறு குறிப்பு:

      1. நேற்றுத்தான் மறுபடியும் 'குவாண்டம் கணீனி' முதல் அத்தியாயம் வாசித்தேன், அறிவியலாளர் – கவின் கலையில் ஈடுபடல் – கலைஞர்கள் அறிவியலை ஒதுக்குதல் ஒரு repetition-ஆக தெரிந்தது (எனக்கு மட்டுமே இருக்கும்)

      2.model என்பதற்கு உருவகம் என்று பயன்படுத்தியிருந்தீர்கள். எனக்கு மிகவும் உடன்பாடான சொல்லாக்கம். வேறு ஒரு இடத்தில் எழுதும்போது மாதிரி என்ற சொல் பயன்படுத்தினீர்கள். அப்போதே அதை மாற்றச் சொல்ல வேண்ட எண்ணினேன், மறந்து போனது. 'மாதிரி' ஒரு dummy/prototype ±ýÀ¾üÌô ¦À¡ÕóÐõ. model- க்கு உருவகமே சரியாக இருக்கும். என்ன நினைக்கிறீர்கள்?

      அன்புடன்,
      -காசி

    4. January 25, 2005 at 9:25 pm

      உங்கள் செவ்வி கேட்டேன் நன்றாயிருந்தது. குறிப்பாகப் பெற்றோரின் தலையீடு பற்றிக் குறிப்பிட்டது மெத்தச் சரி. இது பற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவமொன்றை என் பக்கத்தில் எழுதியுள்ளேன்.

    5. ரோஸாவசந்த்
      January 26, 2005 at 2:06 am

      கேட்டேன். இணைப்பு தந்தமைக்கு நன்றி.

      குறுகிய நேரத்தில், பொருத்தமான வார்த்தைகளால், தேவையான விஷயங்களை தெளிவாக சொல்லியிருப்பதாக படுகிறது.

      உருவகம் என்ற வார்த்தை பொருத்தமானதாகவே எனக்கும் இப்போது படுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *