• இந்தியா :அடுத்த அறிவு அதிசக்தி – New Scientist

    by  • February 20, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    new scientist india cover பிரிட்டனிலிருந்து வெளிவரும் அறிவியல் வார இதழான நியூ சயன்டிஸ்ட் இவ்வாரத்தை இந்தியாவை மையமாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. முன்னட்டை India – The next knowledge superpower என்ற தலைப்பைத் தாங்கி வந்திருக்கிறது. இந்த இதழில் இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பல கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் சில அவர்கள் தளத்திலிருந்து நேரடியாகக் கிடைக்கின்றன.

    • Space programme presses ahead
    • The silicon subcontinent
    • Young IT crowd lives it up
    • Millions get mobiles
    • Making science pay
    • Vaccines for pennies
    • Radio telescope offers dishes to savour
    • Closing the door on generic drugs
    • The returning scientist
    • The IT pioneer
    • Welcome to the global village
    • The mystery of disappearing gravity
    • The next knowledge superpower
    • Embracing GM crops
    • Bold plans for the nuclear future
    • Sight for sore eyes

    என்று பல தலைப்புகளில் கட்டுரைகளும் செவ்விகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகச்சிலவற்றின் முழு வடிவமும் அவர்கள் தளத்திலிருந்து கிடைக்கிறது. பலவற்றின் முதல் பத்திகள் முன்னோட்டமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. நாளை என்னுடைய ஆய்வகத்திற்குச் சென்றால் அங்கே பல்கலைக்கழக வலைமூலம் முழுக்கட்டுரைகளும் எனக்குக் கிடைக்கும். இதைப் பற்றி விபரமாக என்னுடைய கருத்தை எழுத முயற்சிக்கிறேன்.

    நுணிப்புல் மேய்ந்ததில் சில கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. குறிப்பாக இந்திய விண்ணாராய்சித் துறையைப் பற்றிய முதல் கட்டுரை (Space programme presses ahead) நன்றாக இருக்கிறது. ஆனால் சில ஹைப் என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போல அலட்டல் வகையாகத் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவின் சில குறைகள் சரிவர சொல்லப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. இப்பொழுது உலக அளவில் இந்தியாவின் அறிவைப் பற்றி புகழ்வது ஒரு பேஷனாக இருக்கிறது. இது பத்திரிக்கைச் சந்தையில் விலைபோகிறது. டைம், நியூஸ்வீக், ஃபார்ச்சூன் போன்றவை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டாக் நியூஸாக இந்தியாவைப் பற்றி ஏதாவது சரக்கை அவிழ்த்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. நம்மூரில் இதுபோன்ற புகழ் போதைகளில் மூழ்கிப் போவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. எனவே, இந்தத் தருணத்தில் இவற்றை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நமக்கு நாமே முதல் விமர்சகர்களாக ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    மேலோட்டமாகத் தோன்றிய இன்னொரு கருத்து பிரிட்டனிலிருந்து இந்த இதழைத் தயாரிக்க வந்த ஆள், சென்னை மையமாகக் கொண்டிருந்திருக்கிறார். பல கட்டுரைகள் சென்னைக்கு அருகிலிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கின்றன.

    மீண்டும் – நான் இந்த இதழ் முழுவதையும் இன்னும் அணுகிப் படிக்கவில்லை. விரைவில் இதன்மீதான என் கருத்துகளை எழுதுகிறேன். (இதெல்லாம் ஞாயிறு இரவில் சொல்வது, நாளை காலை அலுவலில் தலைக்குமேல் வேலை காத்துக் கிடக்கிறது. முதல் காரியம் இப்பொழுது வெளியில் கொட்டிக் கொண்டிருக்கும் பனியைத் தள்ளிக் காரைக் காலையில் வெளியே எடுக்க வேண்டும்).

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *