இந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்
by வெங்கட் • March 13, 2005 • பொது • 7 Comments
என்னுடைய முந்தைய வலைப்பதிவு (லக்ஷ்மி மிட்டலைப் பற்றியத்) நீண்ட விவாதத்தைத் துவக்கியது. முக்கியமாக பிரகாஷ்க்கும் எனக்கும் நடந்த பரிமாற்றங்கள். இதன் இறுதியாக பிரகாஷ் எழுதிய கருத்துக்களின் அடிப்படியிலானது இப்பதிவு (மிட்டலைவிட்டு நீங்கி இந்தியாவிற்குத் தாவிவிட்டதால் இதைத் தனி இழையாக்கலாம் என்று தோன்றுகிறது). இதன் பின்னணியை அறியத் தயவு செய்து முந்தைய வலைப்பதிவின் மீதான கருத்துக்களைப் பார்க்கவும்.
பிரகாஷ் சொன்னது:
இந்தியாவை ஒரு மெகா எண்டர்பிரைசாக நினைத்துக் கொண்டு, அதன் சீஈஓ நீங்களாக இருக்கும் பட்சத்தில் , முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்ல வருவதன் நோக்கம் புரியும். இருக்கிற விஷயங்களை முதலில் consolidate செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் diversification.
பிரகாஷ் – நீங்கள் சொல்வதன் முரணைச் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் இந்தியாவை மெகா எண்டர்பிரைஸாக உருவகிக்கிறீர்கள் (நானும்தான்) ஆனால் அது ஒற்றைத் துறையில் (மென்கலன்) ‘மாத்திரமே’ தன்னை உறுதிப்படுத்திக் (consolidate) கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்கள் பார்வை துவக்கநிலை சிறு நிறுவனத்திற்குத்தான் (start-up) பொருந்துகிறது – மெகா எண்டர்பிரைஸைக்கு அல்ல. உண்மையில் இரண்டு பில்லியன் தோள்களைக் கொண்ட இந்தியா ஒரு மெகா எண்டர்பிரைஸ்தான். அதற்கு அறிவுசார் துறைகளில் மாத்திரம்தான் தகுதியிருக்கிறது என்று நம்புவது தவறானது. நம்மிடையே பல துறைகளில் niche சந்தையை உருவாக்கிக் கொள்ளும், அவற்றில் இந்தியாவை வல்லரசாக்கும் திறமை இருக்கிறது. சொல்லப்போனால் அதற்கான அடித்தளங்கள் ஏற்கனவே நம்மிடையே இருக்கின்றன. உதாரணங்கள் – அணுசக்தி, ராணுவம், விண்கலன், இரயில்பாதைகள், தொலைத் தொடர்பு, ஆடைகள், … நான் நீங்கள் சொல்லும் “இந்தியா எண்டர்பிரைஸஸ்”க்கு முதலாளியாக இருந்தால் இவை எல்லாவற்றிலும் சம கவனம் செலுத்துவேன்.
கொஞ்சம் பொறுங்கள் அகலக்கால் வைக்கும் கற்பனைவாதி என்று என்னை உடனடியாக முடிவுகட்டிவிடாதீர்கள். எனக்குத் துவக்கநிலை நிறுவனங்களைக் குஞ்சு பொரிப்பதில் (incubation) அனுபவம் இருக்கிறது. எங்கள் ஆராய்சி நிறுவனத்தின் சார்பாக மூன்று உயர்நுட்ப சிறுதொடங்கிகளை (small start-ups) பிரித்துச் சுழலவிட்டிருக்கிறோம் (spin-off). நாளை மறுநாள் காலைக்குள் மைல்கல்லை எட்டாவிட்டால் பணம்போடும் முதலாளிகள் (Venture Captitalists) முட்டையைக் கட்டி ஏற்றிவிடும் அபாயங்களைச் சந்தித்திருக்கிறேன்.
ஆனால் இந்தியா எண்டர்பிரைஸ் வேறு, இது இராட்சத நிறுவனம். அதை நிர்வகிக்க முற்பட்டால் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு அதில் நம் பலம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுக்க முற்படுவேன். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பார்க்கலாம்.
இரயில் பாதைகள் – உலகின் பெரிய இரயில் நாடு இந்தியா. உலகில் இருப்புப்பாதைகளே பதியாத நாடுகள் பல இருக்கின்றன (ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய நாடுகள்,…) இவற்றில் இருப்புப்பாதைகளுக்கான தேவையிருக்கிறது. இதைக் கண்டறிந்து அங்கே கால்பதித்து வளர்த்தெடுக்க முடியும். (ஏற்றுமதி என்றவுடன் நம்மில் பலருக்கு அமெரிக்காவும் ஜெர்மனியும்தான் கண்ணில்படுகின்றன. உண்மையில் நம்மைவிட ஏழை நாடுகளுக்கு நம் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் நிறைய சம்பாதிக்க முடியும் (both goodwill and good cash). இந்தியா ஏற்கனவே இரான் உட்பட சில நாடுகளில் இதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது.
விண்வெளி – இந்தியாவிற்கு இப்பொழுது செயற்கைக்கலங்களை ஏவும் திறன் இருக்கிறது (உலகில் இந்தத் திறமையிருக்கும் நாடுகளை எண்ண ஒரு கைவிரல்கள் போதும்). இதற்கான தேவைட் ஜப்பான் துவங்கி, பிரஸீல், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா வரை இருக்கிறது. இது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய துறை. விண்கலன் துறையில் இந்தியாவின் சதவீத வெற்றி பல நாடுகளைவிடச் சிறந்தது.
இதே துறையில் இன்னொரு சாத்தியம் – ஹெலிகாப்டர்கள். அமெரிக்கா இராணுவம் தொடங்கி, கம்போடியாவரை இதற்கானத் தேவை இருக்கிறது. இந்தத் துறையில் ஏர்பஸ், போயிங், ப்ராட்&விட்னி, ரோல்ஸ் ராய்ஸ் போட்டி கிடையாது. அமெரிக்காவின் இராணுவ ஹெலிகாப்டர்கள் பிரஸீலில் தயாரிக்கப்படுகின்றன. இந்த இடத்தில் இந்தியா மோதவேண்டியது ப்ரேஸிலிடம்தான். இதை வெல்ல முடியாவிட்டால் நாம் உயிருடன் இருப்பதில் அர்த்தம் இல்லை.
இன்னொன்று – இந்தியா ஸ்க்ராம் ஜெட் நுட்பம் பெற்ற விரலெண்ணும் நாடுகளில் ஒன்று. மிகச் சிறிய ஸ்க்ராம்ஜெட்களுக்கு வளிமண்ட ஆராய்ச்சித் தொடங்கி ஒற்றாடல் (Spy) விமானங்கள் வரை சாத்தியங்கள் இருக்கின்றன. இப்படிச் சந்தைப்படாத துறைகளிலும் இந்தியாவிற்கு நுட்பம் இருக்கிறது.
ஆடைகள் – திருப்பூர், அகமதாபாத் அடிப்படைத் தொழில்நுட்பங்களை நாம் சந்தைப்படுத்தாமல் பங்களாதேஷ், பாக்கிஸ்தானிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். மேலாக, இந்தியாவின் நவீன பாஷன் இரக ஆடைகளை (இந்தியப் பாரம்பரிய வடிவமைப்புடன்) தயாரித்து உலகைப் பிடிக்கும் சாத்தியம் இருக்கிறது. இந்தியாவின் வடிவமைப்பாளர்கள் இப்பொழுது உலக அளவில் கவனம் பெற்றுவருகிறார்கள்.
தொலைதொடர்பு – உலகம் முழுவதும் தொலை தொடர்பு சரிந்திருக்கும் நிலையில் இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. இரயில் பாதைகளைப் போலவே இதற்கும் ஜிம்பாப்வே, அர்ஜென்டினா, தாய்லாந்து என்று திறக்கப்படாத சந்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த இடத்தில் பத்து இலட்சம் இணைப்புகள் தரும் எக்ஸ்சேஞ்சுகளைத் தயாரிக்கும் எரிக்ஸன், சீமென்ஸ், அல்கேட்டல் இவர்களுடன் போட்டியிடாது ஆயிரம் இணைப்புகளைத் தரக்கூடிய குட்டி எக்ஸ்சேஞ்சுகளின் கவனம் செலுத்தினால் இரண்டு வழிகளில் பயன்; ஒன்று இந்தியா தொடங்கி ஜிம்பாப்வே வரை கிராமங்களுக்கானது, மற்றது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பலமாடிக்கட்டிடக் குடியிருப்புகளுக்கானது. சென்னை முழுவதுமாக நிர்வகிக்கத் தேவையான பத்துலட்சம் கருவிகளை ஸீமென்ஸ்-இடமிருந்து வாங்கும் அதே நேரத்தில் ஐயாயிரம் – ஆயிரம் இணைப்பு எக்ஸ்சேஞ்சுகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டால் – ஒரு விசேட இடம் இந்தியாவிற்குச் சாத்தியம். இவற்றில் பல கன முதலீடுகள் தேவையற்றவை. இதை நேரு கால்த்திய கையேந்தலுடன் ஒப்பிட முடியாது. இப்பொழுதிருக்கும் உலகச் சூழ்நிலையே வேறு திறமையிருந்தால் அரசியலைத் தாண்டி முதலீடு செய்ய இப்பொழுது உலகம் முழுவதும் ஆட்கள் காத்துக் கிடக்கிறார்கள் (அற்புத உதாரணம் சீனா). நம்மிடம் முதலீடு இல்லை என்று கையைக் கட்டிக் கொண்டு முயற்சியில்லாமல் இருப்பது தவறு.
* * *
இந்தியாவின் தயாரிப்பு என்று பேசும்பொழுது முற்றுமுழுதாக ஆணியிலிருந்து தயாரித்து இந்தியாவில் கார் கட்டுவதை நான் Made in India என்று சொல்வதில்லை. இன்றைய உலகில் ஒரு உற்பத்திப் பொருளை உருவாக்குவதற்குத் தேவையான எல்லா உள்ளீடுகளையும் ஒரே நாட்டில் தயாரிப்பதாகச் சொல்வது அபத்தம். எனவே, நான் மேற்ச்சொன்ன ஒவ்வொரு துறைக்கும் தேவையான உதிரிப்பாகங்களை இந்தியா தயாரிக்க முற்படாமல் சீனாவிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில் மறுகருத்துக் கிடையாது.
Made in India என்ற கருத்து தவறாக வரையறுக்கப்படுகிறது.
* * *
மறுபுறத்தில் அறிவு சார் நுட்பங்களை முற்றாகச் சார்ந்திருப்பதில் இருக்கும் பல அபாயங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை. இந்தத் துறையில் தேவையற்ற அளவுக்கு அதிக கவனம் செலுத்துவதாக அமெரிக்காவின் உள்ளிருந்தே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தேவைக்கு அதிகமாக தயாரிப்புத் தொழிலை நாட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டதாக அமெரிக்கா கவலைபட்டுக் கொண்டிருக்கிறது. (கவனிக்கவும், தேவையானால் அவர்கள் ஒரே நாளில் இதை நிறுத்தி உள்ளூரில் திருப்பிவிட முடியும், அவர்களிடம் தொழில்நுட்பம், முதலீட்டுப் பணம், கைமுறுக்கும் இராணுவம், அரசியல் பலம் எல்லாம் இருக்கிறது. மறுபுறத்தில் இதில் திறமையே இல்லாமல் இந்தியாவை முழுதாக இதில் இறக்கிவிடுவது தற்கொலைக்குச் சமானம்).
தூங்கும் அரக்கர்கள். அறிவுத் துறையில் இந்தியாவை முழ்கடிக்கக் கூடிய அற்புதத் திறன், ரஷ்யா, போலந்து, சீனா, ஜெர்மனி நாடுகளுக்கு உண்டு (தயவு செய்து இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பற்றி இந்த இடத்தில் பேச வேண்டாம். அறிவுக்கு ஆங்கிலம் தேவையில்லை). இந்த நாடுகளின் அடிப்படைக் கல்விகள் இந்தியாவைவிட அற்புதமானவை. கவனத்தில் கொள்ளவும், அளவுக்கு அதிகமாகப் புகழப்பட்டுவிட்ட இந்தியாவின் மூளை இவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் மட்டம்தான். (பிரிட்டன், ஜப்பான், கனடா போன்ற முன்னேறிய நாடுகளில் வசித்தவன், அறிவுத்துறை சார்ந்த பல்கலைக்கழகம், தேசிய ஆய்வுக்கூடங்களில் வேலை செய்தவன், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுடன் நேரடித் தொடர்புடையவன் என்ற முறையில் இதைச் சொல்ல எனக்கு ஓரளவுக்குத் தகுதியிருப்பதாகவே நினைக்கிறேன். தன்னம்பிக்கை வேறு சுயமதிப்பீடு வேறு). அடிப்படை கணித, அறிவியல் கல்வி ரஷ்யாவிலும், போலந்திலும், ஜெர்மனியிலும் இந்தியாவைவிடப் பலமடங்கு நன்றாக இருக்கிறது. சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் அதிஅற்புத உழைப்பாளிகள் (அடிப்படையில் நாம் அற்புத சோம்பேறிகள்). இவர்கள் விரைவில் அறிவுசார் துறைகளில் போட்டியிடத் துவங்குவார்கள். ஓவ்வொரு இந்திய Mathematical Algorithms நிறுவனத்திற்கும் போட்டியாகப் பத்து நிறுவங்களை உருவாக்கும் திறமையும் சாத்தியமும் ரஷ்யாவில் இருக்கிறது. (என்னைப் பொருத்தவரை முன்னாள் சோவியத் நாடுகள் ஒரு கம்யூனிஸத் தளைகள் அறுந்த உன்னதத்தில் ஒரு extended orgasm நிலையில் இருக்கின்றன. இந்த முதலிரவு முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் வேலைக்கு வரப்போகிறார்கள். அப்பொழுது இந்தியாவின் மூளைகளின் உண்மை நிலவரம் தெரியவரும்).
* * *
மறுபுறத்தில் இந்தியாவில் வசிக்கும் பலர் இப்பொழுது IT நம்மைப் புணர்ந்து கொண்டிருக்கும்பொழுது இதுதான் Knowledge based என்று கனவுலக orgasm நிலையில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. நான் ஒரு அறிவியல் மாநாட்டில் சந்தித்த ஒரு பேராசிரியர் (கொஞ்சம் க(கொ)டுமையாக இதையே இந்தியாவில் தங்கள் மூளையைத் தாங்களே வியந்து கொண்டு சுய இன்பம் தூய்க்கிறார்கள் என்று சொன்னார். அடிப்படையில் Knowledge based industry (here I refer to IT industry as defined in India). என்பதே அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்படும் கோபுரம்தான். இதை அப்படியே பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைக்க முடியும் (உதாரணமாக, ஆரக்கிள் தன்னுடைய ஹைதராபாத் அமைப்பை வசதிக்காகத் தாய்லாந்தில் மாற்றி, அங்கே இப்பொழுது வேலை செய்யும் இந்தியர்களில் 60% – முக்கியமானவர்களை – தாய்லாந்து குடியுரிமையுடன் – அழைத்தால் கட்டாயம் போகத் தயாராக இருப்பார்கள். அந்த நிலையில் ஆரக்கிள் சார் இந்தியக் குடிசைத் தொழில் மென்கலன் நிறுவனங்கள் முழுவதும் நசிந்துபோகும்).
* * *
மற்றொரு முக்கியமான ஆபத்து, இந்தியாவில் Knowledge based வரையறை மிகவும் தவறாக இருக்கிறது. இவர்கள் கணினி நுட்பத்தைச் சார்ந்தவற்றை மட்டுமே இப்படியாகப் புரிந்து கொள்கிறார்கள். இது Information Technology என்று சொல்வதுதான் சரி. (அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடப்பது Software, இல்லை… programming, coding என்ற சிறிய பிரிவு மாத்திரமே. ஒரு மென்கலன் பொதியைத் திட்டமிடுதல், அதைப் பாகுபடுத்தல், வரையறுத்தல், சந்தை சாத்தியம் அறிதல் என்ற முக்கியமான கட்டங்கள் இந்தியாவிற்கு வெளியேதான் நடக்கின்றன).
உண்மையில் அறிவுசார் துறையாக அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள் நம்புவது அவர்களின் காப்புரிமை உருவாக்கும் திறமையை. (இது இந்தியாவில் அறவே கிடையாது). உதாரணமாக, ஆண்குறியை எழுப்பும் விஷயங்களை ஆராய்ந்து நைட்ரஜனுக்கு அதற்கும் உள்ளத் தொடர்பைக் கண்டுபிடித்து வயாகரா மாத்திரையை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெறுவதுடன் அறிவுசார் தொழில் முடிந்துவிடுகிறது. பின்னர் டன் கணக்கில் வயாகரா குளிகைகளை உருவாக்குவது, அதைப் பெட்டியில் அடைப்பது எல்லாம் தயாரிப்புத் துறை. அமெரிக்கா கணினி தொடங்கி மருந்துகள், ஆயுதங்கள், விவசாயப் பொருட்கள் என்று பல துறைகளில் இந்த முதற்கட்டத் திறமை பெற்றிருக்கிறது. அதனால் அது தைரியமாக இரண்டாம் கட்டத்தை வெளியில் அனுப்புகிறது. (தைவானில் அதைப் புரிந்துகொண்டு கள்ளப் பொருட்கள் தயாரிப்பதற்குள் அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். இப்படிக் “கண்டுபிடிக்கும்” திறமை இருக்கும்வரை “காப்பியடிப்பவர்களைப்” பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்தக் காப்பியடித்தலைச் சிக்கலாக்கத்தான் சர்வதேசக் காப்புரிமை விஷயங்களையும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. (நம்மிடம் கண்டுபிடிக்கும் திறனும் இல்லை, காப்பியடிக்கும் சாதுரியமும் இல்லை).
இதெல்லாம் கொஞ்சம்கூட இல்லாமல் இந்தியாவில் அறிவுசார் துறைகள் இருப்பதாகவும், அதில் திறமையிருப்பதாகவும் நம்பிக்கொண்டிருப்பது உலகமகா அபத்தம். இந்தியாவின் திறமையிருக்கும் இடங்கள் ஊக்குவிப்பு இல்லாமல் மழுங்கடிக்கப்படுகின்றன.
வெங்கட்:
உங்கள் முந்தைய பதிவை ஆர்வமின்றி மேலோட்டமாகப் படித்து, அதற்கு வந்த எக்கச்சக்கமான பின்னூட்டங்களை முற்றிலுமாகத் தவிர்த்தேன் (ஐந்து பின்னூட்டங்களுக்கு மேலிருந்தால் விஷயம் திசைமாறி எங்கோ போகிறதென்ற எண்ணத்தை மாற்ற முடியமாட்டேங்குது).
இந்த பதிவு முக்கியமானது. இன்று முக்கியமானது நம்மை சீனருடன் ஒப்பிட்டுக்கொள்ளவேண்டியதே. நீண்டவரலாறு, கலாச்சாரம், கீழைத் தத்துவம், மக்கள்தொகை, புவியியல், பரப்பு என்று பலவகைகளில் ஒற்றுமை இருந்தபோதிலும் அரசியலில் மட்டுமல்லாமல் தனிமனித விழுமியங்களிலும் பல வித்தியாசங்களைப் பார்க்கிறேன். நாம் வாய்ச்சொல் வீரர்கள். அவர்கள் செயல்வீரர்கள். மேற்கில் புலம் பெயர்பவர்களில் கூட மாண்ட்ரின் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டே அவர்கள் எட்டும் உயரத்தில் பாதியைக்கூட ஆக்ஸ்·போர்ட் ஆங்கிலத்தை வைத்து நம்மவர்கள் எட்டுவதில்லை என்பதை கண்கூடாகவே பார்க்கிறேன். போட்டி மிகுந்த அந்நியச் சூழலிலேயே இப்படி என்றால் உள்நாட்டுச் சூழலில் எப்படி இருக்கும்? இரு நாடுகளின் வளர்ச்சிப் பாதையில் தெரியும் வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள இதுவே போதும்.
we have major weaknesses.
corruption
2. religious phonetism
3. to oppose even good plans by any govt by opposition
4.fear of change and do nto want to leave the comfort zone
5. instead of analyzing the weakness and failure, blam eit on third party..
6. poor infrastrutcure
7. Each party is findig an opportunity to stag eblocks in others plans and ideas
Unless we overcome these, strengths alone can not do anything.
மிக நல்ல பதிவு. கடின உழைப்பாளிகள் என்ற ரீதியில் பார்த்தால் சீனர்களை அடித்துக்கொள்வது சுலபமல்ல. உண்மையில், 'ஆங்கிலம் நன்றாகப் பேசத்தெரிவது' என்பதற்கு யோசனையின்றிக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிலசமயம் குமட்டவைக்கிறது. அடிப்படையாக, ஏகப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் ஒரு பல்கலைக்கழகம் என்ற அடிப்படையில், எங்கள் பல்கலைக்கழகத்தை ஒரு representative sample ஆகக் கொண்டால், இந்திய மாணவர்களில் கிட்டத்தட்ட 85% சதவீதம் பேர் குவிந்திருப்பது பொறியியல் துறையில்தான் இருக்கும். மொழியியல்? ம்ஹூம். உயிரியல்? அங்கொன்றும் இங்கொன்றும். புள்ளியியல்? இயற்பியல்? வேதியியல்? இத்தனை துறைகளிலும் சீன மாணவர்களின் எண்ணிக்கையுடன் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுக்கூடப் பார்க்கமுடியாது. இத்தனை பேரும், அதே உடைந்த மாண்டரின் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சமாளிப்பவர்கள்தான்.
கடைசி மூன்று பத்திகள் பற்றிய என் கருத்துக்கள்:
அமெரிக்க/மேற்கத்திய வாழ்க்கைத்தரத்தை/தொழில்நுட்பத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க உதவும் வேலைகள்தான் வெளியே ஏற்றுமதியாகின்றன என்பதையும் நினைவுகொள்ளவேண்டும். இந்தியா வரை ஏற்றுமதியான ஒரு வேலையின் இறுதி output, உடனுக்குடன் இந்தியாவுக்கு உதவுகிறது என்று நம்பிக்கொண்டிருப்பது/உதவவேண்டுமென்று எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதான். அது 'அங்கே' போய்தான், பிறகு 'இங்கே' திரும்பி வரும். முதற்கட்டத் திறமை என்று வெங்கட் குறிப்பிட்டிருப்பது அனைத்தும், அவர்களது (பொதுவாக மேற்கத்திய நாடுகளது) வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவும், தக்கவைத்துக்கொள்ளவும் தெரிந்துவைத்திருப்பதனால்தான், "கள்ளப் பொருட்கள் தயாராவதற்குள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட முடிகிறது". ஒவ்வொரு சமுதாயத்துக்கும் culture and lifestyle-based innovations இன்றியமையாதவை. நமக்குத் தேவையானவற்றில் – அதை எவ்வளவு தூரம் நாம் செய்துகொண்டிருக்கிறோமென்பதுபற்றி முற்றுமுழுதாக என்னால் சொல்லமுடியவில்லை.
test
testing again
[5]
hearing loud and clear
நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. ஆனாலும், நிறைய விசயங்கள் இந்தியாவிலும் நடந்து வருகிறது. தனிபதிவாக மாலையில் பதிகிறேன்.