• இந்தியப் பயணம்

    by  • December 25, 2005 • பொது • 14 Comments

    நாளை இங்கிருந்து கிளம்பி இந்தியா செல்லவிருக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பின் இந்தியா திரும்புவது மிகுந்த எதிர்பார்ப்பைத் தருகிறது. இதற்கு முந்தைய பயணத்தில் ஒரு வாரம்தான் இந்தியாவில் செலவிட்டிருந்தேன். இந்த முறை மூன்று வாரங்கள் சாத்தியமாகியிருக்கிறது. இதில் முதல் பத்து நாட்களை பெங்களூரிலும் மீத நாட்களை சென்னையிலும் செலவிட உத்தேசம். (சென்னையிலிருந்து இடையில் ஒன்றிரண்டு நாட்கள்கும்பகோணம், தஞ்சாவூர் செல்லக்கூடும்; இன்னமும் முடிவாகவில்லை).

    நீண்ட நாளைய நண்பர்களில் சிலர் அமெரிக்க, ஐரோப்பிய வாசத்திற்குப் பிறகு மிகுந்துவரும் வேலைவாய்ப்புகளின் காரணமாக இந்தியா திரும்பியிருக்கின்றனர். இவர்களில் சிலரைப் பார்த்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. கடந்த ஐந்து வருடங்களில் இலக்கிய மடலாடற்குழுக்கள், தமிழ் லினக்ஸ் குழுமங்கள், இசை ஆர்வலர் மின்மடல்கள் இவைகளின் மூலமாக நிறைய நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன். இவர்களில் பலரை முதன் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த முறை பயணத்தில் நண்பர்களைச் சந்திப்பது மாத்திரமே முக்கிய நோக்காக அமைந்திருக்கிறது. இதைத் தவிர இரண்டு வால்களும் இந்தியப் பயணத்தில் முழுமையாக கனவுக்கோட்டைகளில் மூழ்கியிருக்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவில் பசுமாடு, குரங்கு, வேப்பமரம் தொடங்கி கடற்கரை, கோவில், சிங்கம், புலி, முதலை என்று நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இயன்ற அளவுக்கு இதையும் நிறைவேற்ற வேண்டும்.

    என்னிடம் தனியே மின்னஞசல் முகவரி இருப்பவர்களிடம் என் வரவைச் சென்ற வாரம் தெரிவித்திருக்கிறேன். நிறைய பேரின் முகவரி இல்லை (அல்லது தோண்டி எடுக்க இயலவில்லை) எனவே என்னைச் சந்திக்க விரும்புவர்கள் மின்னஞசல் மூலம் தொடர்புகொள்ளவும் ( vvenkat_sympatico_ca). இந்தியாவில் மாறிவரும் கல்வித்திட்டம், படிப்பித்தல் முறைகள் இவற்றை நேரில் காணவும் விருப்பம். சென்னையில் இருக்கும் நாட்கள் புத்தகக் கண்காட்சி சமயம் என்பதை இன்னும் வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லவில்லை ;) .

    ஊரில் இல்லாத சமயத்திலும் இயன்ற அளவு தொடர்ந்து வலைப்பதிவு எழுத உத்தேசம். ஆனால் இது வீட்டிலிருந்து இயங்கும் வழங்கி என்பதாலும் இது கடுங்குளிர்க்காலம் (மின்சாரத் தடைகள் ஏற்படலாம்) என்பதாலும் வழங்கி தொடர்ந்து இயங்கும்பட்சத்தில்தான் இது சாத்தியமாகும். எனவே இப்பொழுதே ஒருமுறை சொல்வதில் தவறில்லை; நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    14 Responses to இந்தியப் பயணம்

    1. ஜெ. உமா மகேஸ்வரà
      December 26, 2005 at 1:19 am

      வெங்கட்,

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் (குறிப்பாக வருண், விக்ரம் இருவருக்கும்) இந்தியப் பயணம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

      தங்களை இந்தியாவில் முதன் முறையாகச் சந்திக்கப் போவதில் மகிழ்கிறேன்.

    2. December 26, 2005 at 1:51 am

      புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட். உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்!

    3. Suresh Kannan
      December 26, 2005 at 3:33 am

      Venkat,

      Welcome to Chennai.

    4. December 26, 2005 at 8:24 am

      Venkat,

      Welcome to Chennai, have a great Indian vacation :)

      Wishing you and family a wonderful year 2006 !!!!

    5. December 26, 2005 at 8:50 am

      வெங்கட்
      உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். பெங்களூரில் இருக்கும் போது ரிஷிவாலி பள்ளி செல்ல விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும். நீங்களும் உங்கள் மகனும் பள்ளியில் நேரம் செலவிட , சில மணிநேரங்கள் செலவிட, மாணவர்களை சந்தித்து உரையாட ஏற்பாடு செய்ய முடியும்.

    6. December 26, 2005 at 9:11 am

      வெங்கட்,
      இத்தனை பெரிய ஆசைப் பட்டியலை வைத்துக்கொண்டு மூன்று போதுமா? Good luck.
      பெங்களூர்-சென்னைப் பயணத்தை தொடர்வண்டி மூலம் செய்வது குழந்தைகளுக்கு குதூகலமளிக்கும் (வீட்டில் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்த பண்டங்களையும் கூட சாப்பிடக் கற்றுக்கொடுத்துவிடும்).

    7. December 26, 2005 at 11:48 am

      Bon Voyage Venkat!

      -Mathy

    8. December 26, 2005 at 1:10 pm

      புத்தாண்டு வாழ்த்துக்கள்.
      இனிய விடுமுறைக்கும் அதே!

    9. December 26, 2005 at 1:55 pm

      உமா மகேஸ்வரன், பாலாஜி, சுரேஷ் – நன்றி. உங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

      பிற நண்பர்களுக்கு – நன்றிகள்.

      சுந்தரமூர்த்தி – என்ன செய்ய! ஊருக்கு என்று கிளம்பிவிட்டால் வண்டிவண்டியாக கனவுகளும் வேலைகளும் குவிந்துவிடுகின்றன. இயன்றவரை பார்ப்போம்.

    10. December 26, 2005 at 1:57 pm

      பத்மா – உங்கள் வலைப்பதிவு கூடுமானவரை சரியாக வேலை செய்ய வேண்டும். பிரச்சினைகள் வந்தால் மன்னிக்கவும். ரிஷிவாலி பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. தேவைப்பட்டால் தொடர்புகொள்கிறேன்.

      ஏதாவது ஒரு அரசுப் பள்ளிக்குப் போய் மாணவ மாணவிகளுக்கு மேஜிக் ஷோ மாதிரி செய்து அறிவியலில் சில விஷயங்கள் சொல்லித்தர ஆசை. எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை.

    11. December 26, 2005 at 2:06 pm

      வெங்கட்,
      Bon Voyage!

      அப்படியே அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    12. December 26, 2005 at 7:10 pm

      வெங்கட்: கர்னாடகாவில் உள்ள சில கிராமப்புற பள்ளிகளில் இதுபோல வரும் ஆராய்ச்சியாளர்களை வரவேற்பதாக அறிந்தேன். ரம்யாவின் நண்பர் ஒருவர் இதுபோல அரசு பள்ளிகளில் எளிமையாக சில அறிவியல் விழிப்புணர்வை தூண்டுவது போல தன்னார்வத்துடன் ஈடுபடுவதுவம் தெரியும். அவர்களை தொடர்பு கொண்டால் நேரமிருக்குமானால், ஆரம்பம் கிடைக்கலாம்.
      என்னுடைய பதிவு வேலைசெய்யாமல் போனாலும், தற்போது கவலை இல்லை. எனினும் உங்கள் அன்பிற்கு நன்றி:)

    13. சன்னாசி
      December 26, 2005 at 8:16 pm

      பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    14. karthikramas
      December 26, 2005 at 11:28 pm

      உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *