• ஃபார்முலா 1 : நாராய்ண் கார்த்திகேயனின் முதல் புள்ளிகள்

    by  • June 20, 2005 • பொது • 3 Comments

    இந்த வருடம் (2005) தொடரில் முதன்முதலாகக் கலந்துகொள்ளும் இந்தியரான நாராய்ண் கார்த்திகேயன் முதல் தடவையாக ஃபார்முலா 1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். யு.எஸ் க்ரான் ஃப்ரீயில் நான்காம் இடத்தைப் பெற்று ஐந்து புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் நாராய்ண். இதே போட்டியில் சென்ற வருடத்தின் அசைக்க முடியாத சாம்பியனாக வந்த மிகைல் ஷுமாக்கர் முதல் முறையாக முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.

    ஆனால் இந்தப் போட்டி விநோதமான சூழ்நிலையில் நடந்தேறியிருக்கிறது. ஃபார்முலா 1 கார்களுக்கு மிகைலின் அல்லது ப்ரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கார்கள் மிகைலின் டயர்களைக் கொண்டவை. ஆனால் இண்டியானாபோலிஸ் மைதானத்தில் 13வது திருப்பத்தில் இந்த டயர்கள் ஆபத்தானவை என்றும் இதைக் கொண்ட கார்வீரர்கள் இந்த வளைவில் தங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும் ஃபார்முலா 1 குழுமம் விதித்தது. இதற்கு மிகைலின் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே போட்டியில் மூன்று குழுக்களைச் சேர்ந்த (ஃபெராரி, ஜோர்டான், மினார்டி-காஸ்வொர்த்) ஆறே ஆறு வீரர்கள்தான் பங்கேற்றார்கள் (மீதம் 14 பேர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள்). இந்தப் போட்டியில் நான்காவதாக வந்த கார்த்திக் தனது முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். (இவர் இன்னும் கொஞ்சம் முந்தியிருந்தால் மூன்றாமிடத்திற்கு வந்து வெற்றிமேடையில் ஏறியிருக்கக் கூடும்). அதிகப் போட்டியில்லாத நிலையில் முதல் புள்ளிகளைப் பெற்றது கார்த்திக்-க்கு சுவாரசியமாக இருக்காது.

    ஆமாம், அதனாலென்ன ஆனாப்பட்ட சாம்பியன் ஷுமாக்கரே தன்னுடைய 2005 முதல் வெற்றியை இப்படித்தான் பெற்றிருக்கிறார். அவரும் மேடையில் சந்தோஷமாகத்தான் கொண்டாடினார். எனவே கார்த்திக்கின் துவக்கம் எனக்கு சந்தோஷத்தைத்தான் தருகிறது. முதல் முறையாக தவழும் குழந்தையைப் போலத்தானே இதுவும்.

    3 Responses to ஃபார்முலா 1 : நாராய்ண் கார்த்திகேயனின் முதல் புள்ளிகள்

    1. June 20, 2005 at 3:14 pm

      வெங்கட்,
      நாராயண்-னைப் பற்றி நான் சில நாட்களுக்கு முன் தான் எழுதினேன் . இந்தியர் ஒருவர் பங்கேற்பது நன்றாக இருந்தாலும், அவரின் திறமை மீது எனக்கு சந்தேகம் உண்டு.

      அதை மாண்டியாலில் செய்த டென்ஷனில் செய்த தவறும், இந்த தடவை டியகோ மாண்டேரோவை இவ்வளவு நேர வித்தியாசத்தில் தோற்றதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. மினார்டியின் early pit-stop இல்லாவிடில் 5 இடத்தில் தான் முடித்திருப்பார் என்றும் எண்ணத்தோன்றுகிறது.

      மற்றபடி, FIA அதிலும் Ferrari-யின் அராஜகத்தை வெளிக்கொணர்கிறது இந்த ரேஸ். மற்ற ஓட்டுனர்களின் உயிர் மிசெலின் செய்த தவறால் பணயம் வைக்கப்படுகின்றது என்று தெரிந்தும் எதைச் செய்தும் வெற்றி பெறுவது என்ற தன்னலமிக்க குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டது ரசிகர்களே.

    2. June 20, 2005 at 3:23 pm

      [1] ராமநாதன் – இருக்கலாம். கார்த்திக் ஒன்றும் முதல்தர போட்டியாளர் இல்லை. ஆனால் ஃபார்முலா 1 என்பது ஒரு பெரிய மாஃபியா அதில் உள்ளே நுழைவது கடினம். நாராய்ண் கார்த்திக் மாதிரி ஒன்றிரண்டு பேர் எப்பாடுபட்டாவது உள்ளே வந்தால்தான் வருங்காலத்தில் வேறு நல்ல இந்தியப் போட்டியாளர் சாத்தியம்.

      நேரடி ஒப்புமை – செஸ் விளையாட்டில் இருக்கிறது. ஒரு காலத்தில் எந்த இந்தியருமே சோவியத் வீரர்களின் கால்தூசிக்குக்கூட சமமில்லாத நிலை இருந்தது. ஒரு ஆனந்த் உருவாக பல சோனி வீரர்கள் அவ்வப்பொழுது உலக அரங்கில் தலைகாட்ட வேண்டியதாயிற்று. இப்பொழுது இந்தியா செஸ் உலகில் மிக முக்கியமான நாடுகளுள் ஒன்று.

      மற்றபடி என்னைப் பொருத்தவரை இந்த இண்டியானாபோலிஸ் ரேஸை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், ரத்து செய்திருந்தாலும் இப்படித்தான் கூக்குரல் வரும் – மிக்கெல்லின் மாபியா தங்கள் திற்மைக் குறைவுக்காக எல்லாரையும் பழிவாங்கிவிட்டார்கள் என்று கத்தியிருப்பார்கள்.

    3. June 20, 2005 at 4:19 pm

      வெங்கட்
      நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நாராயண் திறமை அவ்வளவு குறிப்பிட்டுச் சொல்லும்படியில்லை. இதில் இண்டி ரேசின் உண்மையான ஹீரோ டியகோ என்பது என் கருத்து. எனினும் நாராயண் இந்தியாவில் அடையும் புகழால் மேலும் பல திறமைசாலிகள் வந்தால் நம் நாட்டுக்கு பெருமைதான்.

      மிசெலின் செய்தது incompetence-இன் உச்சம். இவ்வளவு கோடிகள் செலவு செய்யப்படும் ஒரு விளையாட்டில், இப்படி கோட்டை விடுவது திறமைமிக்கோர் செய்யும் காரியமல்ல. மிச்ச அணியினரும் ரேஸில் கலந்து கொண்டு அதிகப்படியான ஒரு pit-stop உடன் tyre-களை மாற்றியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

      மினார்டியும், ஜோர்டனும் விடுத்துள்ள அறிக்கையின்படி பார்த்தால் Ferrari-யே இந்த கூத்துக்கு காரணம் என்பது போல் உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் மிச்ச அணியினர் போட்டியிட்டிருந்தால் (if என்றாலும் வலுவான வாதமாகவே படுகிறது) McLaren, Renault, BAR Honda ஏன் Toyota-வை விட quick-ஆக ferrari இருந்ததாக தோன்றவில்லை.இந்த மாதிரி ஒரு force majeure situation-இல் தங்களின் பெருந்தன்மையை காட்டி ஆஸ்திரியாவில் ஏற்பட்ட களங்கத்தை Ferrari துடைத்துக்கொண்டிருக்கலாம் என்றே படுகிறது. அதை விடுத்து "Schumacher Wins Race of Shame" என்று தலைப்புச் செய்திகளில் நாறியிருக்க வேண்டாம் என்பதும் என் எண்ணம். இதில் உங்களின் கருத்து என்ன?

      அதே போல் மாண்டிரியாலில் JPM disqualify செய்யப்பட்டது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *