நீனா என்ற (ஆங்கில) வலைப்பதிவர் தி ஹிந்துவில் கௌதமன் பாஸ்கரன் என்பவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் எப்படித் தொடர்ச்சியாக நியூ யார்க் டைம்ஸ் பதிப்பிலிருந்து திருட்டுத்தனமாக உருவப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறார்.

Alexander, Mona Lisa Smile, The Forgotten, Troy, Aviator போன்ற படங்களுக்கான விமர்சனங்களில் நி.யா.டைம்ஸின் விமர்சன வார்த்தைகள் எப்படி உருவிச் செருகப்பட்டிருக்கின்றன என்று விபரமாக எழுதியிருக்கிறார் நீனா.

இதைப் போன்ற பத்தித்திருட்டுகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்துவருவதை பல ஆங்கில வலைப்பதிவுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

நம்ம தமிழில் இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஒரு முறை இங்கே டொராண்டோவில் வெளியாகும் குமுதம் சைஸ் பத்திரிக்கையில் என்னுடைய கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு ஒரு நண்பர் தொலைபேசியில் நன்றாக இருப்பதாகச் சொன்னார். அப்படியொரு பத்திரிக்கையை நான் பார்த்ததேயில்லை; சொல்லப்போனால் அவர் சொல்வதற்கு முன்னால் கேள்விப்பட்டதுமில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதம் கழித்து நண்பர் என் வீட்டுக்கு வந்தபொழுது மறக்காமல் அந்தப் பத்திரிக்கையை எடுத்துவந்து கண்ணில் காட்டினார். இதன் பின் பல முறை இது நிகழ்ந்துவிட்டது; இங்கேயே சில வலைத்தளங்களில், இலங்கையில் ஒரு பத்திரிக்கையில். ஆனால் இவற்றில் எதிலுமே என்னுடைய பெயர் நீக்கப்படவில்லை. (அண்மையில் டுபுக்குகூட இப்படி எழுதியிருந்தார்). ஒருவகையில் இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது. உண்மையில் இலங்கையில் என்னுடைய கட்டுரை ஒன்று ஒரு தினசரியில் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபொழுது எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அது தமிழ் லினக்ஸ் பற்றிய கட்டுரை, என்னுடைய தமிழில் லினக்ஸ் பற்றி பலருக்கும் சொல்லவேண்டும் என்றா நோக்கத்தை என் அனுமதியில்லாமல் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்ற மனநிலை வித்தியாசமானது. ஆனால் ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பணபலம், ஆட்பலம், பல வருட சரித்திரம் கொண்ட ஒரு பெரிய நிறுவனங்களில் இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது என்னும் பொழுது எரிச்சல்தான் வருகிறது.

கௌதமன் பாஸ்கரன் தனக்கென்று ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார். அதில்

My task was to write on cinema in The Hindu in a manner that befitted its editorial poise. This is what I have since been doing and there hasn�’t been a dull moment for me and hopefully for the reader.�

No domain experience is worthwhile unless it connects to the larger picture. This is even truer of a medium like cinema that draws its strength from and impacts a slew of broader social issues. In keeping with this spirit, my work content has expanded over the years. Today, my writing extends to health, environment, wildlife,�civil rights and child welfare.

இவர் உடல்நலம், சுற்றாடல், வனவிலங்குகள், மனித உரிமைகள் இவற்றைப்பற்றியெல்லாமும் எழுதுகிறாராம்! No domain experience is worthwhile unless it connects to the larger picture என்று கௌதமன் சொல்கிறார். உண்மைதான்; அந்தக் காரியத்தை இப்பொழுது நீனா செய்து நம் அனுபவத்தை முழுமையாக்கியிருக்கிறார்.