கடந்த மூன்று தினங்களாக சற்றும் எதிர்பாராமல் பல பரப்புகளுக்கு உள்ளாக நேர்ந்தது. சனிக்கிழமை எங்கள் ஊர் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் ஆர்க்கிட் கண்காட்சிக்குப் போய்விட்டேன் (நான் ஒரு ஆர்க்கிட் பைத்தியம்). ஞாயிறன்று வீடு முழுவதும் நண்பர்கள். இன்றைக்கு அலுவலில் வருடாந்திர சா(வே)தனையெல்லாம் பட்டியலிட்டு அறிக்கை எழுத வேண்டும். தவிர பணம் கேட்டு எழுதவேண்டிய ஆய்வு விண்ணப்பங்கள், இத்யாதி… மாலை நேரங்களில் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்பொழுது தொடரும் செரிப்பு அமிலப் பெருக்கத்தினால் தாளமுடியாத நெஞ்செரிச்சல்…

இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய நடந்திருக்கின்றன. முக்கியமாக ஜெயகாந்தனுக்கு ஞானபீடம். பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி, கூடவே என்னுடைய ஆர்க்கிட் அனுபவங்களைப் பற்றி நான் இன்னும் எழுதாதது வியப்பளிக்கிறது. எல்லாவற்றுக்கும் முன்னால் ஒத்துக் கொண்டபடி என் முந்தைய பதிவுக்கு கருத்தெழுதிய நண்பர்களுக்கு மேலதிகப் பதில்கள் எழுதவேண்டும். எழுதுகிறேன்.