இன்று மாலை டொராண்டோ பல்கலைக்கழக ட்ரினிடி காலேஜில் நடந்த பாலா ரிச்மானின் உரைக்குச் சென்றிருந்தேன். “Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India” பாரதி, அம்பை உள்ளிட்ட தமிழ் தெலுகு சிறுகதையாசிரிகளின் படைப்புகளில் சீதையின் பாத்திரம் எப்படி புதுமையாகச் சித்தரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி பேசினார். இதைப் பற்றிய முழு விபரங்களும் அடுத்த வாரத்தில் எழுதுகிறேன். நான் பேச்சை பதிவு செய்ய கருவிகள் எதுவும் கொண்டு செல்லவில்லை. வேறு யாரும் பதிவு செய்யவுமில்லை. எனவே விரிவாக குறிப்புகள் எடுத்திருக்கிறேன்.

<%image(20050604-paula_richman.jpg|410|307|பாலா ரிச்மான்)%>

பாலா மிகவும் சரளமாக, அருமையாகப் பேசினார். அதையும்விட கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொன்னார். ஒரு நல்ல உரையைக் கேட்ட திருப்தி.

நம் வலைப்பதிவு உலகிலிருந்து மதி மாத்திரம் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்பொழுது சுந்தரவடிவேலையும், பாலாஜி-பாரியையும் பார்க்க முடிந்தது. நாளை மொழிபெயர்ப்புப் பட்டறையும் புத்தக வெளியீடும் – அங்கே இன்னும் பல நண்பர்களைக் காணமுடியும்.

(எழுதி முடித்து காமெராவிலிருந்து படத்தை இறக்குவதற்குள் இன்று நாளையாகிவிட்டது)