இன்றைக்கு படித்த தி ஹிந்துவின் இந்தச் செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது. தில்லி சட்டசபை உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும் சம்பளம் இரட்டிக்கப்படுகிறதாம். முதலமைச்சருக்கு மாதம் அரை இலட்சம் சம்பளமாகக் கொடுக்கப்படவிருக்கிறது (கட்டாயம் இவர்களுக்கு இலவசக் குடியிருப்பு, வாகன வசதி, இவையெல்லாம் சட்டபூர்வமாகவும், தினசரி சமையலுக்குக் கத்தரிக்காயிலிருந்து இரவு விருந்துக்கு சாராயம் வரை திருட்டுத்தனமாகவும் இலவசமாகக் கிடைக்கும்). என்ன ஒரு விரயம்!!

நானறிந்த வகையில் எந்த ஒரு ப்தவியிலும் சம்பளம் ஒரே தவணையில் இரட்டிக்கப்படுவதில்லை. (பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு இப்படிக் கிடைக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒரு வேலையைவிட்டு இன்னொரு வேலைக்கு – அதே நிறுவனத்திலோ, வேறொன்றிலோ மாறினால் மாத்திரமே அதி உயர்வுகள் சாத்தியமாகும்). தங்கள் கையில் சட்டமியற்றும் உரிமை இருக்கிறது என்பதால் செய்யும் அராஜகம் இது.

இதை எதிர்த்து யாராது பொதுநல வழக்கு போடுவார்களா?