கொஞ்ச நாளாவே இதை எழுத நெனச்சிருந்தேன். தமிழ்மணம் நட்சத்திர மொறையை நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கேனா அல்லது எல்லாருமான்னு தெரியல. வெளங்க வச்சா உங்களுக்கு… கடைசில்ல சொல்லேறன்.

பதிவ மத்தவங்க படிக்கலாமா வேணாமான்னு மத்தவங்களுக்குச் சொல்லத்தான் காசி சாரு இந்த நட்சத்திர சமாச்சாரத்தைக் கொண்டுவந்தாரு. வழக்கமாக ஊருகூடி தேரு இளுக்கறச்ச வார சிக்கல்தான் இங்கயும். சனமெல்லாம் இளுக்க வேணாம் வடத்தைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டாலே புண்ணியம்னு நெனக்கிது. இப்ப என்னோட பக்கத்தையே எடுத்துகிங்க, அதிகமாபோனா ஒரு பதிவுக்குப் பத்து நட்சத்தெரம்தான் விளுவுது. எங் கணக்குப்படி நா ஒன்னு எளுதினா நூத்தம்பது பேரு படிக்கிறாங்க. இதுல பத்துல ஒம்போது கண்ணுல ஒத்திகிட்ற ஆளுங்கதான்

செலபேருக்கு நட்சத்தெரம் மளையா பொளியுது. நம்மமாரி ஆசாமிக்கு வானத்துல எப்பயும் மேகமூட்டந்தேன். செல சமயம் இருபது பேரு கருத்து எளுதுவாங்க ஆனா ரெண்டுபேருகூட நட்சத்துரத்துல குத்தமாட்டங்க. இப்பிடி இருந்தா இந்த நட்சத்துர மொறைய காசி மீள்வாசிப்பு செய்யலாம் [அருள், மீள்வாசிப்புன்னு சொன்னதுக்காக சாப்பாடு இல்லைன்னு வெளில துரத்திடாதீங்க, நீங்களே எல்லா பார்வைகளும் கண்டிப்பாகப் பதிக்கப்பட வேண்டும் சொல்லுவீங்க அப்பொறம் பேசினா தட்டத் தூக்கிகிட்டு வெளில ஓடும்பீங்க. பாக்குற பக்கத்துவூட்டு காரங்களுக்கு கவுண்டமணி செந்தில் காமெடியாட்டம் இருக்கும். எல்லாருஞ் சிரிக்கிறாங்கன்னு விளுந்து விளுந்து சிரிப்பாங்க 🙂 ].

நெறயா பேரு நட்சத்திரத்துல ‘+’ குத்திட்டேன், ஓங்கி ‘-‘ குத்திட்டேன் அப்புடீன்லாம் எக்ஸிட் போலிங்க் செய்றாங்க (சூப்பர் படம் சார், மொத பைட்டுக்கே காசு சரியாபோச்சு). “கரெக்ட் தலீவா, உனுக்கு ‘+’ போட்டேன்”, “அந்தாளு பார்ப்பனீய வன்முறையைப் பரப்புறான் அவனுக்கு எல்லாரும் ‘-‘ போடுங்க” அப்படின்னு பின்பெட்டியில் கருத்துறாங்க. இப்படி ‘-‘ ஓட்டுப் போட்றது கருத்தியல் வன்முறை (அய்யய்யோ… அருள் அடிக்காதீங்க…) இல்லியா? எனக்குச் சுத்தமாப் புரியல. எளுதினதோட ஒப்பில்லம போவலாம், ஆனாக்கவும் மத்தவுகளும் தாராளமா படிக்கலாம் அப்ப்டின்னா ‘+’ போடுங்ள். நாம் படிச்சு டைம் வேஸ்டு நைனா நீ படிக்காதே அப்படீன்னா ‘-‘ போடுங்க இன்னுதான் காசி ஸார் (இன்னா… ‘ஸார்’ இல்லியா, இல்ல இந்தமாரி வெசயம்லா எளுதறப்ப ஒங்களுக்கு ஸார் போடனும் ஸார்) சொன்னதா நெனச்சேன். இல்ல நாந்தான் தப்பா புரிஞ்சிருக்கேனா?

இதெல்லா ஒரு பக்கங் கெடக்கட்டும். இந்த ‘+, -‘ ன்னு ரெண்டு ஏண் இருக்கனும்னே எனக்கு இன்னும் புரியல. படிச்சேன் மச்சி, நீனும் படி அப்படின்னு சொல்ல மாத்ரம் ஒரே ஒரு ‘+’ போதாதா? இதுல ‘-‘ எதுக்கு? ஓட்டுப் போடம போயிட்டா சுவாரசியம் இல்லைனுதானே அர்த்தம்? நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால ‘+’ தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). முளுக்கப் படிக்கப் பொறும இல்லாம பாதிலயே ஓடிப்போயிலான்னு நெனச்சா நட்சத்துரத்துல மௌஸ வச்சி சொடுக்கி ஏன் இன்னும் நேரத்த வேஸ்ட் பண்ணனும்? (அதுதான் ஜனங்க இப்ப பண்ணிகிட்டு இருக்கு).

இப்ப பரிசுக்கு வந்தாச்சு. பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு ஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே, அதாங்க, எச்சி தொட்டு இழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே, அதுல ஒன்னு வாங்கித்தாரேன். (அப்பாடி இந்த மாதுரி கடைசில பரிசு வெச்சாக்க எல்லாரும் என்னோட கணக்குப்படி ஓட்டுப் போடுவாங்கல்ல…)