தமிழ்ப் புத்தகவிக்கியில் மேலட்டைப் படங்களை உள்ளிடும் வசதியை முறைப்படுத்தியிருக்கிறேன். உள்ளிடுவது மிகவும் எளிதானது. JPG, PNG மாத்திரமே உள்ளிட முடியும்.

விக்கி பக்கம் எழுதும்பொழுது அதன் கட்டளைப்பட்டியில் (தொகுப்பியின் மேலிருக்கும் Bold, Italic, Underline,….Images பட்டி) கடைசியாக இருக்கும் “படம்” பொத்தானில் சொடுக்கவும்.

இப்பொழுது திறக்கும் புதிய பெட்டியைப் பயன்படுத்தி படத்தை வழங்கியில் மேலேற்றவும். கூடுமானவரை படக்கோப்பின் பெயராக புத்தகத்தின் பெயரையே வைக்கவும். இடைவெளிக்குப் பதிலாக _ பயன்படுத்தவும் (eezaam_ulakam.jpg)

பிறகு உள்ளிடப்பட்ட படத்தின் பெயரில் சொடுக்கவும். இது

{{book_cover.jpg}} என்ற வடிவில் படத்திற்கான இணைப்புக் கட்டளையைச் சேர்க்கும். இதைச் சற்றே மாற்றி

{{ book_cover.jpg}}

(முதலிரண்டு {{ – க்குப் பிறகு ஒரு இடைவெளி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதைக் காணவும். இது படத்தை பக்கத்தின் வலது பக்கத்தில் (right-aligned) இடும். Preview பொத்தானை அழுத்தி சரியாக வந்திருக்கிறதா என்று பார்க்கவும். சரியாக இருந்தால் பக்கத்தைச் சேமிக்கவும்.

மேலட்டைக்காண படத்தின் இணைப்பை பக்கத்தில் முதல் வரியாகச் சேர்க்கவும். இது அழகாகக தகவல் அட்டவணைக்கு அருகில் படத்தை ஒழுங்கு செய்கிறது. அடுத்ததாக ஒருவரிகூட இடம்விடாமல் அட்டவணையைத் துவக்கவும்.

சிக்கல்கள் இருந்தால் அறியத்தரவும். ஒழுங்கு செய்கிறேன். சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் அட்டைப்படத்தை இந்த முறையில் உள்ளிட்டிருக்கிறேன்.