தமிழ்ப் புத்தக விக்கி – யில் கடந்த இரண்டு நாட்களில் என்னைத் தவிர வேறுசிலரும் தகவல்களை உள்ளிடத் துவங்கியிருக்கிறார்கள். சந்தோஷமான விஷயம். சிவராஜ், பத்ரி, ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இதுவரை தகவல்கள் போட்டிருக்கிறார்கள். இதில் விபரங்களைச் சேர்ப்பது மிக எளிது, எனவே தயங்காமல் முயற்சி செய்யவும். விக்கியைக் கற்றுக் கொள்வது எளிது.

உதவிப்பக்கம் இங்கே இருக்கிறது

அகரவரிசை ஒழுங்குமுறை இருக்கிறது. தயவு செய்து உங்கள் உள்ளிடல்களை அவற்றினுள்ளே சரியான இடத்தில் போடவும். ஒற்றை எழுத்துக்குள்ளேயும் இயன்றவரை அகரவரிசை முறையைப் பின்பற்றவும். (‘க’ எழுத்தைத் தவறாக விட்டுவைத்திருக்கிறேன்) யாராவது ஒழுங்கு செய்யவும். அதேபோல பழைய இடுகைகள் இன்னும் வரிசைப்படுத்தப்படவில்லை. யாராவது வெட்டியொட்டலாம்.

உங்களிடம் இருக்கும், பழைய புழக்கத்திலில்லாத புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். குறிப்பாக ஈழத்து நண்பர்கள் அதிகம் வெளியில் தெரியாத புத்தகங்களின் தகவல்களைப் பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்.

படம் சேர்க்கும் வசதி இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. விரைவில் ஒழுங்கு செய்கிறேன்.

இதன் இடைமுகத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டும். அதிக வேலையில்லை. ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்.

இதற்கு அழகான முகப்புப் பக்கத்தை வடிவமைக்க ஆர்வமுள்ளவரும் தொடர்புகொள்ளவும். இதன் வெளிவடிவத்தை CSS (Style Sheet) மூலம் சிறப்பு செய்ய ஆர்வமுள்ளவர் முன்வரவும்.