நேற்று கனேடியப் பிரதமர் திரு. பால் மார்ட்டின் தெற்காசியப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கனேடிய உதவியை $40 மில்லியனிலிருந்து $80 மில்லியனாக அதிகரித்தார். தனிநபர் வருமானத்தில் அடிப்படையில் பார்க்க்கும் பொழுது கனடாவைவிட மிகச் சில நாடுகளே அதிகம் உதவி செய்கின்றன. இவற்றில் நார்டிக் நாடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நார்வே, ஸ்வீடன், டென்மார்க் இவை போட்டி போட்டுக்கொண்டு உதவிகளைப் பொழிகின்றன. இவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள். ஜப்பானுக் சௌதி அரேபியாவும்கூட. (ஆனால் சௌதியின் உதவிகள் சக இந்தோனேஷியாவிற்கு மாத்திரமே போகின்றன என்று சொல்கிறார்கள்) இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெர்மனி, ப்ரான்ஸ், அமெரிக்கா போன்றவைகளின் போக்கு வியப்பூட்டுகிறது. இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் இப்படிச் சொல்கிறது;

Though Canada may have its share of problems such as drug abuse, youth violence and other usual crimes, it is rated as one of the best places to live in. Why?

Better infrastructure? Better medicare? Better social security network? Better education facilities? Lack of racism?

Yes, these are the major reasons why about 250,000 people from all over the globe make this country their home each year.

But Canada has something more that makes this country attractive and unique: its conscientious and liberal citizenry. This streak runs across the whole spectrum of this society.

இப்படிப் பிற நாடுகள் போற்றினாலும் கனடாவிலே அரசு செய்தது சரியில்லை என்று குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. அரட்டை வானொலிகளைக் கேட்டால் அதில் சிலபேர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குச் சென்ற மார்ட்டின் பேரழிவு என்றவுடன் ஏன் விடுமுறையைத் துறந்து ஓடிவரவில்லை என்று கத்துகிறார்கள். பிறருடைய துன்பத்தைத் நம் துன்பம்போலக் கருதி கனடா துடிப்புடன் செயல்பட வேண்டும், செய்தது போதாது என்று சொல்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இடையில் மார்ட்டின் நேற்று விடுமுறை முடிந்து திரும்ப வந்தார். முதல்காரியமாக அமைச்சவைக் கூட்டம். முடிவில் மார்ட்டின் இந்த நிவாரண அறிவுப்புகளை வெளியிட்டார்;

  1. பணவுதவி இருமடங்காக உயர்த்தப்படும். $40 மில்லியனிலிருந்து $80 மில்லியன்
  2. ராணுவத்தின் பேரழிவு வல்லுநர் குழு (DART – Disaster Assistance Relief Team) உடனடியாக இலங்கையில் அம்பாறை மாவட்டத்திற்கு விரையும்.
  3. பிரதமர் நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) டொராண்டோவில் தெற்காசிய வம்சாவளித் தலைவர்களைச் சந்திப்பார். (இது விடுமுறையை இரத்து செய்யாததைச் சரிக்கட்டும் முயற்சி என்று சொல்கிறார்கள்).
  4. தனியார் திரட்டும் நிதியை அரசு இரட்டிப்பாக்கும். அதாவது தனிநபர் நிவாரண்த்திற்குக் கொடையளிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அரசும் ஒரு டாலரை அவர் நிதியளிக்கும் அதே தன்னார்வக் குழுவுக்குத் தரும். இதுநாள்வரை கனடாவில் தனியார் உதவி $36 மில்லியன் டாலர்கள். எனவே அரசு $80+$36 மில்லியன் டாலர்கள் பணமாகச் செலவிடுகிறது.
  5. பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் அகதி மற்றும் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
  6. இந்த வாரம் முழுவது அரசு துக்கம் கடைபிடிக்கிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.
  7. உடனடியாக மூத்த அமைச்சர்கள் (வெளிவிவகாரம், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர்கள்) பாதிக்கப்பட்ட இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியாவிற்கு நேரடிப் பார்வையிடச் செல்கிறார்கள். இதை கனடா மிகவும் முக்கியம் எனக் கருதுகிறது. உடனடி நிவாரணங்களைத் தவிர நீண்டகால புணரமைப்பு நிர்மாணப் பணிகளைக் கனடா திட்டமிட இது உதவும் என்று தெரிவித்திருக்கிறது. உள்துறை அமைச்சர் உஜ்ஜல் தோஸான்ஜ் (Ujjal Dosanjh, இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) இந்தியா இலங்கைக்குச் செல்கிறார்.

இன்றைக்கு பின்னரவுச் செய்தியில் பிரதமர் இலங்கை வம்சாவளியினரிடன் என்ன ஆறுதல் சொல்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.