மைக்ரோஸாப்ட் நிறுவனம் பிரிட்டனில் இருக்கும் 14-17 வயதுவரையான குழந்தைகளுக்கு ஒரு போட்டி நடத்துகிறது. இதற்குச் சிந்தனைத் திருடர்கள் போட்டி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது ஒரு குறும்படப் போட்டி, சிந்தனைத் திருட்டால் தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம் என்று குறும்படம் எடுத்து மைக்ரோஸாப்ட்டுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் பரிசாக இரண்டாயிரம் பிரிட்டிஷ் பவுண்ட்களுக்கு விடியோ உபகரணங்கள்.

என்ன அபத்தம்? சிந்தனைத் திருட்டைப் பற்றி சிறுவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட மைக்ரோஸாப்ட் முயற்சிக்கிறதாம். மைக்ரோஸாப்ட் செய்து மாட்டிக் கொண்ட/மாட்டிக் கொள்ளாத சிந்தனைத் திருட்டுகளைப் பற்றி படமெடுத்தால் பரிசு தருவார்களா என்று தெரியவில்லை.

இதற்கு ஏன் சிந்தனைத் திருடர்கள் போட்டி என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. மைக்ரோஸாப்டைப் பற்றிய விளம்பரப் போட்டி என்று தலைப்பிட்டிருக்கலாம்.

இனி… வழக்கம்போல நான் மைக்ரோஸாப்ட் எதிரி, அமெரிக்கா எதிரி என்றெல்லாம் மொட்டையாகக் குற்றம் சாற்றுவதற்கு முன்னால் கொஞ்சம் மைக்ரோஸாப்ட்டின் வரலாறைப் படித்துவிட்டு வாருங்கள். குறிப்பாக, Stac, Borland, Dr. Dos, இவற்றுடன் Microsoft பெயரைத் தனித்தனியாக இணைத்து கூகிளில் தேடினால் வேண்டிய அளவு விஷயம் கிடைக்கும்.