கடந்த வாரம் மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் பற்றி நிறைய பேர் வலைக்குறிப்பில் எழுதியிருந்தார்கள். எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் அழுகை அரசி சௌகார் ஜானகியுடன் எப்படி காதல் செய்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. சின்ன வயதில் சினிமா அதிகம் பார்த்ததில்லை (இப்பவும் கூடத்தான்) – வீட்டில் விடமாட்டார்கள் (இப்பவும் கூடத்தான்).

ஆனால், இந்தச் செய்தியைப் படித்துப் புல்லரித்துப் போனது. ஜெமினி கணேசன் உடல் காவல்துறை மரியாதைகளுடன் – 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க – எரியூட்டப்பட்டதாக அறிகிறேன். இப்படி போலீஸ் மரியாதை, இராணுவ மரியாதை இதெல்லாம் மரித்துப் போனவுடன் கிடைக்க வேண்டுமென்றால் என்னனென்ன செய்ய வேண்டும் என்று எங்கேயாவது பரிந்துரைகள் இருக்கின்றனவா?

இல்லையென்றால் முன்னுதாரணங்களிலிருந்து நீங்கள் தெரிந்துகொண்ட தகுதிகள் என்னென்ன என்று சொல்லவும்.