சென்றவாரம் கனடாவின் உதவிகள் இலங்கைத் தமிழருக்கு நல்லது என்று எழுதியிருந்தேன். அப்பொழுது நண்பர் ரோஸா வஸந்த் உட்பட இன்னும் சிலர் என்ன போய் என்ன. இலங்கை அரசாங்கம் இவற்றையெல்லாம் திசை திருப்பிக்கொள்ளும் என்று ஆதங்கப்பட்டிருந்தார்கள். அந்த நேரத்த்தில் என்னால் நம்பிக்கையை மாத்திரமே வெளியிட முடிந்தது. கடந்த இரண்டு நாட்களில் இங்கு வரும் செய்திகள் என் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது நிறைவாக இருக்கிறது.

இன்றைய National Post செய்தித்தாளிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். இதன் இணைய முழுபதிப்பு சந்தாக்காரர்களுக்கு மாத்திரம்தான் கிடைக்கும் எனவே சரியான சுட்டியைத் தரமுடியவில்லை.

Canadian Aid Hits The Beach in Sri Lanka

….
The aid, flown in the last week by a Canadian Forces Cargo Plane was dispatched to refugee camps in northeastern Sri Lanka,…

“That is the ara where it’s really needed” said Ted Itani, field coordinator for the Canadian Red Cross in Sri Lanka. “I was so pleased that we were able to get our material out within 48 hours of flying it into the country”

Mr. Owen (Sri Lankan co-ordinator for the aid group Save The Children) said the Canadian aid was sent to the part of the country that needs it the most – a sector that remains under the control of the rebel Tamil Tigers,. Because the area is remote, less international aid has so far made it through, he said….

So far much of the international aid has gone to the south largely because of its proximity to Colombo’s international airport and a network of roads that are still good enough…

இந்தோனேஷிய வம்சாவளியினர் ஏன் கனடா முதல் விமானத்தை அதிகம் பாதிக்கபப்ட்ட இந்தோனேஷியாவுக்கு அனுப்பவில்லை என்று கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள். இன்றைய டொராண்டொ ஸ்டாரில்;

So many questions for Prime Minister Paul Martin, who, freshly returned from his vacation in Morocco, will today meet with Toronto’s South Asian leaders whose local communities have been devastated by the Dec. 26 tsunami.

Indonesians will first ask why Canada’s Disaster Assistance Relief Team (DART) is still sitting on Canadian soil while the island of Sumatra has been ruined and more than 80,000 people are dead.

“It’s terrible because they could use more than just donated money,” said Taufik Prijono, 62, one of Toronto’s most prominent Indonesians. “They should be there by now.”

ஆனால் பிற நாடுகளின் உதவி இவர்களுக்கெல்லாம் கிடைக்கிறது என்றும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுவரும் வடக்கு, கிழக்கு இலங்கைக்குக் கனடா உதவ வேண்டும் என்ற கருத்து வலுவாக இருக்கிறது.

இதன் பின்புலத்தில் கனடா தன்னுடைய இரண்டாவது நிவாரண விமானத்தையும் ராணுவ உயர்வல்லுநர்கள் குழுவையும் (DART) தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்புகிறது. முதல் விமானம் வடகிழக்கில் உதவிப்பொருள்களைத் தந்தது.

நான் மாலையில் அரைகுறையாகக் கேட்ட செய்தியில் கனேடியப் பிரதமர் பால் மார்ட்டின் நேரடியாக சந்திரிகா குமாரதுங்கவிடம் தமிழர்களுக்கு நிவாரணம் மறுக்கப்படுவதைப் பற்றிய கவலையைச் சொன்னதாகத் தெரியவருகிறது.

கனடாவின் உதவி கட்டாயம் இலங்கைத் தமிழர்களுக்கு உண்டு என்று நிம்மதியாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை கனடாவைவிட தமிழர்களின் நிலையை இன்னும் உறுதியாகப் புரிந்துகொண்ட நாடு நார்வே மாத்திரமாகத்தான் இருக்கமுடியும். நார்வே அதன் பிராந்தியத்தில் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளை வழிப்படுத்தும் (நிவாரண உதவியில் இவர்கள்தான் அதிகம் முனைப்புடன் இருக்கிறார்கள்). ஓரளவுக்கு சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசுன் அடாவடிப் புரிந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.