நானறிந்த வகையில் ஒப்பன் ஆபீஸ் 1.4 தமிழ் வடிவத்தைத் தரவிறக்க அதிகச் சிக்கல்கள் இருக்கின்றன. ஓப்பன் ஆபீஸ் தளத்திலிருந்து போனால் பாரதீய தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கே சி-டாக்கின் வழங்கிகள் மிக மிக மெதுவாகச் செல்கின்றன.

தமிழா! குழுவின் தளத்திலிருந்தும் ஒப்பன் ஆபீஸ் பொதிகளுக்கு இணைப்பு இல்லை. எனவே, புதிய ஓப்பன் ஆபீஸ் 1.4 (தமிழ் வடிவத்தை) என்னுடைய வழங்கியில் போட்டுவைத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்டோஸ் கணினிகளுக்கானது

லினக்ஸ் கணினிகளுக்கானது

சிடாக்கின் சமீபத்திய தமிழ் குறுவட்டின் முழு உள்ளடக்கமும் இருக்கிறது. இதைப் பொதுவில் போடமுடியுமா என்று தெரியவில்லை. இந்தச் சந்தேகம் தீர்ந்தவுடன் பொதுவில் போடுகிறேன். இந்திய அரசின் முதன்மை கணினி நிறுவனமான சிடாக்கின் வழங்கிகள் ஏன் இப்படி ஒரு தலைமுறைக்கு முந்தைய வேகத்தில் இருக்கின்றன என்று தெரியவில்லை.

மேலும் அபத்தமாக, தமிழ் குறுவட்டைத் தரவிறக்கப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது வெற்று மேலட்டைதான். இதற்கு அடுத்த பக்கத்திற்குப் போனால் எந்தக் கடவுச் சொல்லும் இல்லாமல் தரவிறக்க முடிகிறது. கட்டுப்பாடுகள் வைத்தால் முழுமையாக, தகர்க்க முடியாததாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் முழுவதும் திறந்த வடிவில் இருக்க வேண்டும். (பொதுப்பணத்தில் செய்யும் காரியத்திற்கு இதுதான் சரி) இப்படி இரண்டும் கெட்டானாக இருப்பது தொழில்/நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.