சென்ற வாரம் ஐரோப்பாவில் நடந்த உலக வர்த்தப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து பிரஸில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முன்னேறிய நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்) தங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்தாதவரை வர்த்தக தாராளமயமாக்கல் பேச்சுக்கள் இம்மியளவும் நகராது என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். நேற்றைய நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் பிரஸில் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரைப் பாராட்டியிருக்கிறது.

பொதுவில் அமெரிக்காவில் தற்பொழுது நிலவும் பிரெஞ்சு எதிர்ப்பை உள்ளார்ந்த நோக்கமாகக் கொண்டிருந்தாலும் நி.யா.டைம்ஸ் வளர்ந்துவரும் நாடுகளின் நிலைப்பாட்டை தயக்கமின்றி ஆதரித்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்தத் தலையங்கத்துடன் கூட பிஸினஸ் ஸ்டாண்டர்ட்-ல் டின்.என் நினனின் இந்தக் கட்டுரையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தாராளமயமாக்கலைப் பற்றி பறைசாற்றும் அமெரிக்காவில் இந்திய வங்கிகள் கிளைகளைத் திறப்பதில் இருக்கும் சிக்கல்களை நினன் விவரிக்கிறார்.