அடுத்த இரண்டு மாதங்களில் பதினெட்டு இயந்திரன்களை இராக் போருக்கு அனுப்பவிருக்கிறதாம் அமெரிக்கா.

உண்மையில் இவை கதைகளில் வருவனவற்றைப் போல தன்னிச்சையாக மனிதர்களைச் சுட்டுத்தள்ளும் இயந்திரன்கள் அல்ல. போரில் முன்னால் நிறுத்தப்பட்டு இவற்றின் உணரிகள் வாயிலாகக் காண்பதை அனுமானித்து பொத்தானை அமுக்கினால் மாத்திரமே சுடக்கூடியவை. பனியோ, பாலைப்புயலோ இனி ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. துப்பாக்கி பிடித்த சந்தோஷத்தில் அழுத்துவது என்பார்களே, அதேபோல வெப்பச்சமன் செய்யப்பட்ட அறைகளில் உட்கார்ந்து கொண்டு, பனியிலோ பாலைப்புயலிலோ அலையும் எதிரியைச் சுட்டுத்தள்ளும் போர்முறை.

மனிதத்தன்மையற்ற இந்தப் போரின் அடுத்த கட்டம் இது என்று தோன்றுகிறது. அமெரிக்கர்களின் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் கொஞ்சம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் புஷ் கையில் ஆட்சியைக் கொடுத்ததைவிட இயந்திரன் கையில் துப்பாக்கி கொடுப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை என்று ஸ்லாஷ்டாட் விவாதத்தில் சொல்கிறார் ஒருவர்.