கடந்த சில நாட்களாக நான் நிறையப் பேசியிருக்கிறேன். யாருக்கும் பயனற்ற இவை தேவையில்லை என்று எனக்கே தெரிகிறது. மனதில் பட்டவை, நேர்மையானவை என்று சொல்லவரும்பொழுதுகூட வார்த்தைகள் நீண்டு கொண்டே போனால் புரிதலைக்காட்டிலும் பிணக்குகளே அதிகரிக்கின்றன. எனக்கு எல்லாவற்றையும்விட நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்கள். பேச்சைக் குறைக்கும்பொழுது தவறாகப் புரிந்துகொள்வதற்கான சாத்தியங்களும் குறையலாம்.

எனவே இதைவிட்டு சில நாட்கள் விலகியிருக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். மீண்டும் என் நிலைக்குத் திரும்பி ஆக்கபூர்வமாக எதாவது எழுதமுடிந்தால் எழுதலாம் இல்லையென்றால் சில நாட்கள் இதை மூடிவைக்கலாம் என்றும் இருக்கிறேன். பிற நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களும் இடமுடியாது என்றுதான் தோன்றுகிறது. எழுத ஆரம்பித்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப்பிறகு தொழில்நுட்பக் காரணங்களன்றி நானாக வலைப்பதிவை நிறுத்துவது இதுதான் முதல் தடவை.

வரும் வாரங்களில் அலுவலில் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதிகம் எழுதமுடியாது என்றுதான் தோன்றுகிறது.