1. நான் காணம்ல்போல் திரும்ப வந்தபிறகு என்னுடைய வலைத்தளத்தின் முகவரி மாறியிருக்கிறது. பல நண்பர்கள் தங்கள் வலைப்பக்கங்களில் என்னுடைய பதிவுக்குக் கொடுத்திருக்கும் இணைப்பை இன்னும் மாற்றவில்லை. தயவு செய்து http://www.domesticatedonion.net/blog என்ற முகவரிக்கு இணைப்பை மாற்றவும்.

என்னுடைய வலைப்பதிவில் நண்பர்களின் பெயர்களையும் இணைப்புகளையும் விரைவில் சேர்க்கிறேன்.

2. வலைப்பதிவு எழுதும் நண்பர்களில் சிலர் ப்ளாகர் கணக்கு இல்லாதவர்களுக்குத் தங்கள் பக்கங்களில் கருத்தெழுதும் உரிமையை நீக்கியிருக்கிறார்கள் (நேற்று மூக்கு சுந்தர் பக்கத்தில் எழுதமுடியவில்லை). என்னைப் போன்ற ப்ளாகர் தவிர்த்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு இதனால் கருத்தெழுத முடியவில்லை. எனவே, தயவு செய்து இதை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!