This is the missing part of

Tamil Linux – More Questions/Answers -3 {>>http://www.zynot.org/info/fork.html அருமையான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. (இதுதான் விவாதங்களின் பெரும்பயன்! இவ்விவாதத்தில் கலந்துகொண்டதால் இக்கட்டுரையைப் படிக்கும் அரும்பாக்கியம் பெற்றேன். மீண்டும் நன்றிகள்!). வெல்ச் (Welch) அவர்களும் Source பிளத்தலைப்பற்றியே கதைக்கிறார். பிளத்தல் என à®´-கணினி குழுவினர் ஏற்கும்பட்சத்தில் இதைபோல கட்டுரையை அவர்களின் இணையத்தில் இட்டால் மகிழ்வீர்களா?}

மீண்டும் சிரிப்புத்தான் வருகிறது; வெல்ச் ஜெண்டூ லினக்ஸை இரகசியமாக ஒருநாள் பிளந்துவிட்டு, வலையில் “நான் ஏன் பிளத்தேன்” என்று விளக்கம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அதைப் பிளப்பதற்கு முன்னால் ஜெண்டூவின் முதிய நிரலர்களுடன் அவரும் அவர் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களும் விவாதித்திருக்க மாட்டார்கள் என்று ஊகிக்கிரீகளா? இன்னும் கொஞ்சம் வரலாற்றில் பின்னால் போய்ப் பார்த்தால் EMACS – GNU EMACS, NCSA httpd – Apache போன்ற பிளவுகளெல்லாம் எந்த அளவிற்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றன, அந்த விவாதஙக்ள் நம் அறிவை எந்த அளவிற்கு முன்னெ எடுத்துச் சென்றிருக்கின்றன என்பதைப் போன்று நிறையப் படிக்க முடியும். நான் ஏன் பிளந்தேன் என்று எழுதுவதைவிட ஏன் பிளக்கவேண்டும் என்று சிந்தப்பதும், அதைத் தவிர்க்க மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும் மிகவும் முக்கியம். பிளவினால் தீமை என்று இல்லை; PhpNuke – PostNuke பிளவு எப்படி ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது என்பது சுவாரசியம். gcc -> pgcc – > gecs -> gcc எப்படிப் பிளந்தது, பின்னர் எப்படி மீண்டும் ஒன்றிணைந்தன என்பதை எல்லாம் படித்தால் பிளப்பது ஏன் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பது எளிதில் தெரியும்.

கட்டுரை எழுதி (என்னை மாத்திரமோ) எல்லோரையுமோ மகிழ்விப்பதைவிடச் சேர்ந்து செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

>>பின்னர் சமூகத்தில் சான்றான்மை என்பதற்கு எந்தத் தேவையும் இல்லை என்று சொல்கிறீர்களா. இல்லை. செவிடன் காதில் சங்கு ஊதாமல் இருக்க சொல்கிறேன். எச்சத்திலிருந்து விழக பணிகிறேன்!}

புளித்துபோன உவமைதான்! சாக்கடையைச் சுத்தம் செய்ய…

{அகராதியை அப்படி வகைப்படுத்தமுடியாதே? American English Dictionary is a Plagiary of the Oxford (or Webster et al) dictionary என்பது அபத்தமாக தோன்றவில்லையா?}

ஒன்னே முக்கால் மாதத்தில் தனியாக ஒருவர் உட்கார்ந்து கொண்டு பத்தாயிரம் வார்த்தைகளுக்கு (அதுவும் அவர் லினக்ஸ் தொடர்பில்லாதவர் என்பதை அவரே எழுதியிருக்கிறார்), தமிழ் பதங்கள் எழுதியிருக்கிறார் என்பதில் இருக்கும் நேரடி அபத்தத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு (அதுவும் அவர் அடிப்படையில் தமிழில் கணினியை இயக்குவதில் நம்பிக்கையில்லாதவர்) சப்பைக்கட்டு வாதங்களை வரவழைப்பது வியப்பாக இருக்கிறது.

{>>அப்படியென்றால் “எழுத்தாளர் சுஜாதாவின் முயற்சியில் இந்திய மொழிகளிலேயே முதன்
>>முறையாகத் தமிழில் கணினி” “எழுத்தாளர் சுஜாதாவின் முயற்சியில்” என வந்து அதை அவர் மறுக்காதிருந்தால் சுஜாதாவை வெளிச்சதிற்கு கொண்டுவர உங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை அளிக்கிறேன்}.

ஒன்று மட்டும் என்னால் ஊகிக்க முடிகிறது; அப்படியரு நிலைவந்தால் சுஜாதா கட்டாயம் “ராயப்பேட்டை பாலு” என்ற பெயரில் புனைப்பெயரில் எழுதுபவர்க்கெல்லாம் என்னால் பதில்சொல்லமுடியாது என்று பன்னிரண்டடியானமைந்த பலவிகற்பப் ப·à®±à¯Šà®Ÿà¯ˆ வெண்பா எழுதி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்துவார். நீங்களும் பாடல்பெற்றவர் ஆகலாம் 🙂

மீண்டும் ஒருமுறை எனது வாதங்களின் சாரம்:
[1] தமிழ் தளயறு மென்பொருள் தயாரிப்பில் உங்கள் பங்களிப்பை மறுக்கவில்லை.}

நன்றி, தமிழ் லினக்ஸில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன. நீங்கள் வேண்டுமானால் “ஏனிந்த வெளிநாட்டுத் தமிழர்கள் அங்கீகாரத்திற்கு அலைகிறார்கள்” என்று அரவிந்த கேட்பதைச் சொன்னாலும், நிச்சயம் தளையறு மென்கலன் உலகில் சமூக ஆர்வமும், தன்னொத்தவர்களின் பாராட்டும் மிகவும் முக்கியம்தான் (See for eg. Eric Reymond’s The Social Context of Open Source Software)

[2] தனி ஒருவரை சுட்டிக்காட்டுவதை நிறுத்த கேட்கிறேன்

அந்தத் தனியருவரால் எல்லோரும் எப்படி இகழப்பட்டிருக்கிறோம், பின்னர் அதே தனியருவர் எப்படி அதைச் சாதகமாக்கிக்கொள்கிறார், என்பதற்கு நீங்களும் நானும் கொடுக்கும் முக்கியத்துவம்.

[3] சம்பந்தம் இல்லாத துறையில் ஒருவர் புகழடைய காரணமாய் இருக்காதீர்கள்

எனக்கென்னமோ, இதைப்பற்றிக் குரலெழுப்பாமல் இருந்திருந்தால் இங்கேயிருக்கும் பத்துபேருக்குக் கூட யாருக்குப் புகழ் என்று தெரிந்து கொண்டிருக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. அவர்மீது குற்றம் சொல்லக்கூடாது என்றும் அவர் ஈகோவைப்பாதித்துவிடக்கூடாது என்றும் தொடர்ச்சியாக நீங்கள் வற்புறுத்துவதுதான் ஆர்வமாக இருக்கிறது.

உங்களுடைய கடந்த இரண்டுநாள் வாதங்களால் அவருடைய புகழ் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் குறைத்து மதிப்பிடவேண்டாம், தயவு செய்து.

[4] ழ-கணினி குழுவினருக்கு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள், அவர்களும் உங்கள் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதாகவே தெரிகிறது.

உண்மை, இது இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் நான் விழைந்தது, விழைவது இதுதான். மகிழ்ச்சியாக இருக்கிறது.

[5] சுஜாதா என்ற தனிமனிதனின் அங்கீகாரம் உங்களின் தயாரிப்பிற்கு தேவையற்றது.

இந்த விவாதம் இதைவிட ஆழமான தளத்தில் நடக்கிறது, இதைச் சடுதியில் இப்படி திசைதிருப்ப முயலாதீர்கள்.

[6] மடல்களில் ழ-கணினி திட்டதை பொதுப்படையாக விளித்து, தனி நபரை குறிவைப்பதை தவிர்க்கவும்.

கிட்டத்தட்ட இப்பொழுது à®´-திட்டத்தினர் பல விஷயங்களைத் தெளிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவில் நாங்கள் எப்படிச் சேர்ந்து செயல்படுவது என்றும் எங்களுக்குள் தெளிவாகி வருகிறது.

மிஞ்சியிருப்பது தனிமனிதரின் இரட்டை வேடம்தான். அதன் முக்கியமும் அவசியமின்மையும் உங்களுக்கும் எனக்கும் வேறுபடுகிறது. எனவே, கிட்டத்தட்ட நாம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக ஏற்றுக்கொண்டு அடுத்த தளத்திற்கு நகரலாம். 🙂

>விவாதத்தின் சில பகுதிகளை மட்டுமே வெளியிட்டால் வாசகன் குழம்ப வாய்ப்புள்ளது.

எனக்குத் தெரிந்தவகையில் உங்களுடைய கருத்துக்களுக்கு வரிக்கு வரியாக நான் பதிலளித்துவருகிறேன். எனவேதான் மீண்டும் உங்கள் கடிதத்தை வெட்டி ஒட்டவில்லை. மேலும் நேற்று யாகூவின் பக்கங்கள் சரியாக ஏறவில்லை. எனவே என்னுடைய அஞ்சல்பெட்டியிலிருந்து என் கடிதத்தை எடுத்துப் போட்டேன். எதையும் மறைக்கும் நோக்கம் எனக்கில்லை. இன்றைக்கு அதன் முகவரியைப் போடுகிறேன். குழப்பியிருந்தால் என்னை மன்னிக்கவும்.