• Tamil Linux – More Questions/Answers -3

    by  • January 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    டைனோவுக்கும் எனக்கும் ராயரில் நடந்த அடுத்த பரிமாற்றம்.

    டைனோபாயின் கடிதத்தை இந்தச் சுட்டியில் காணலாம்: http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5553 அன்புள்ள டைனோ,

    வெங்கட் விளக்கமான மடலுக்கு நன்றி.

    {என்னைப்பற்றிய விவரங்களை அறிவிக்க இயலாமைக்கு வருந்தி, நெறியினை சுட்டிக்காட்டிமைக்கு நன்றிகளுடனும் மடலைத்துவக்குகிறேன். அதனால் பெயருக்கும் விவாதத்திற்கும் தொடர்பு இல்லாதிருத்தல் நலம் என்ற (என்) கருத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்!}

    நிழலுடன் யுத்தம் (வார்த்தைதான்) நடத்துவது கொஞ்சம் அயர்வைத்தான் தருகிறது.

    {அவருடைய (ஜெயராதா) தனிமைத்துவத்திற்கு முக்கியத்துவமளித்ததற்கு பாராட்டுக்கள்.}

    நன்றி,

    {{>>என் கடிதத்தை அவர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள்.
    >>அவருடைய குழுவினர் இவற்றில் சிலவற்றுற்கு இணையப் பக்கங்கள் மூலம் விளக்கங்கள் தந்திருக்கிறார்கள்.}

    மேலே உள்ளது திண்ணையில் உங்களின் கட்டுரையின் பகுதிகள். இதில் ஜெயராதாவுடன் பேசியதை அவரின் பெயரை குறிப்பிடாமல்ம் தெரிவித்திருக்கலாம்.}

    திண்ணையில் எழுதியதன் பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ஜெயராதாவிடம் தூதுவனில் பேசியது, மின்னஞ்சல் எல்லாமே திண்ணையின் விளைவாகத்தான் நடந்தன.

    {உங்கள் சந்தேகங்களை தமிழ் லினிக்ஸ் (tamilinix) யாஹ¥ குழுமத்தில் முன்பே (பல மடல்களில்) விவாதித்திருக்கிறீர்கள் (http://groups.yahoo.com/group/tamilinix/message/2894) அதற்கு Ma.சிவக்குமார் விளக்கமளித்திருக்கிறார். (அவர் கேட்ட கேள்விக்கு நீங்கள்
    இன்றுவரை பதிலளிக்கவில்லை). ழ-கணினி ஆர்வலர்களுடன் நேரிடையான தொடர்பிருந்தும், அதை கட்டுரையில் தெளிவாகவிளக்காததன் அவசியம் எனக்கு புரியவில்லை! }

    அவர் கேட்ட எந்தக் கேள்வியை என்று தெரியவில்லை. ழ-திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரிருவர்தான் தமிழினிக்ஸில் பங்கேற்கிறார்கள் (சிவக்குமார் ழ-க்கு முன்னாலிருந்தே தமிழினிக்ஸ் உறுப்பினர்). என்னுடைய ஆதங்கம் எல்லாம் ஏன் எல்லோரும் ஒளிந்து கொண்டு வேலை செய்யவேண்டும், இது திறந்த ஆணைமூலத்தின் செயல்முறைகளுக்கு முற்றிலும் புறம்பானது என்பதுதான்.

    {உங்கள் கட்டுரையைப் படிக்கும் யவருக்கும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், அவர்களின் திட்டங்கள் பகிரங்கப்படுத்தபடாததை போலவும் தோற்றமளிக்கும் வண்ணம் உங்கள் கட்டுரை அமைந்தது ஏன்?

    ழ-கணினியின் ஒவ்வொரு வெளியீடும் tamillinix குழுமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே?}

    இல்லை.

    நான் மேலே சொல்லியிருப்பதுதான், தமிழ்பிசி குழுவாக இருந்த காலத்திலிருந்தே அவர்கள் stealth-mode-ல்தான் வேலை செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒருவருட நடவடிக்கைகளைப்பற்றி தமிழ் லினக்ஸ் ஆர்வலர்கள் யாருக்கும் பெரிதும் ஒன்றும் தெரியாது. சென்னையில் ப்ரிஸாப்ட்வேர் இந்தியா (தளையறு மென்கலன் நிறுவனம், இந்தியா)வின் கிளை இருக்கிறது. இவர்களில் சில டெமோ-லினக்ஸ் என்ற குழுவைக் கொண்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் லினக்ஸைப் பயிற்றுவிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் லினக்ஸில் தொழில்நுட்ப ரீதியில் நிறையத் தெரிந்த இளைஞர்கள். இப்படி எல்லாரையும் ஒன்றாகச் சேர்த்து ஆரம்பகாலத்திலிருந்தே முயன்றிருக்கலாம் என்பதுதான் என் ஆதங்கம். அப்படியிருந்தால் பல குழப்பங்களுக்கு இடம் வந்திருக்காது.

    யாருக்கும் சொல்லாமால் தனியாக ஒருவர் உட்கார்ந்து கொண்டு அகராதி எழுதி, இன்னும் சிலபேரை தனியாக ஒரு அறையில் உட்கார வைத்து மொழிபெயர்ப்பு செய்து திடீரென ஒரு நாள் நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என்று சொல்வது தளையறு மென்கலன் உற்பத்தி வழிகளுக்குப் புறம்பானது. என்னையும், தமிழ் லினக்ஸில் இருக்கும் பல நண்பர்களையும் பொறுத்தவரை, தமிழில் லினக்ஸ் கொண்டுவருவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் நம் மாணவர்களிடையே தளையறு மென்கலன் வழிமுறைகளையும், அதன் மேன்மையையும் பரவச் செய்தல். ஒரு அகராதியைக் கொடுத்து இதை வைத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு செய், என்பது ஆர்வமுள்ள, திறமையுள்ள இளைஞர்களை எந்த வழியிலும் முன்னெடுத்துச் செல்லாது.

    {ழ-கணினியின் ஒவ்வொரு வெளியீடும் tamillinix குழுமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே?}

    இல்லை, இப்படியிருந்தால் ஒப்பன் ஆபீஸ் திட்டத்தில் குழப்பமே வந்திருக்காது. முகுந்தும் குழுவினரும் அதிகார்வபூர்வ ஓப்பன் ஆபீஸை நடத்திக்கொண்டிருக்க, இன்னொருபுறம் யாருக்கும் சொல்லாமல் ழ- இரகசியமாகச் செய்துகொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள். இப்பொழுது ஒரே வேலையை இரண்டு குழுவினர் செய்திருக்கிறார்கள். வேலைசெய்ய ஆளில்லாமல் இருக்கும் தமிழ்த் திட்டங்களுக்கு இது தேவைதான் என்று சொல்லுங்கள்.

    {>>”இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விட்டேன்” “எனக்கு தெரிவில்லாத விடயங்களில் மூக்கை நுழைக்காமல் அறிந்ததை செய்தேன்.” – ஆ.வி.யில் படித்தபோது இந்த பொருள்தான் எனக்கு மனதிற்பட்டது. இந்த திரு(த்தப்பட்ட)குறளுக்கு முன்னிருந்த பத்தியை படித்ததினால் அவ்வாறு தோன்றியிருக்குமோ? “எல்லாம் சரியா இருக்கா? என கல்யாணச் சாப்பாட்டின்போது ஒருவர் விசாரிப்பாரே… அதுபோல”. இதில் மேலாளர் என்ற ஊகம் எங்கே வந்தது?}

    ஆய்தல், அவன் கண்விடல் மேலாளரின் பணியில்லையா? :) ) – வள்ளுவர் எந்த அதிகாரத்தில் இதைச் சொல்கிறார்?

    ‘பின்னால் கையைக் கட்டிக்கொண்டு’ == மேலாண்மை செய்வது??

    இந்த எழுத்து உத்தியை ஹரி மிக அழகாக உரித்துக் காட்டியிருக்கிறார். உங்களுக்கு அவரால் எதுவும் நடக்கவில்லை என்பதால் அப்படிப் புரிந்துகொள்ளத் தோன்றியிருக்கிறது. ஒன்றும் தெரியாதவருக்கு, “பாத்தியா, வாத்தியார் நல்ல ஆள எல்லாம் புடிச்சு, அவங்களுக்கு எப்படிச் செய்யனும்னு சொல்லிக் கொடுத்து, எல்லாத்தையும் வெச்சு வேலைவாங்கினதோட இல்லாம, நேரத்துக்குப் பந்திக்கு வந்து அது பயன்பட்றதையும் பாத்துக்கிட்டு இருக்காரு” என்றுதான் தோன்றும். துரதிருஷ்டவசமாக, இரண்டாம் வகையினரின் எண்ணிக்கை 99, உங்களைப் போன்றவர்கள் 1 என்ற ரீதியில்தான் இருக்கிறார்கள்.

    அவருக்கு இருக்கும் பெரிய அதிருஷ்டம் அந்த ஒரு சதவீதமும் அவரை வெளிச்சம்போட்டுக் காட்டாமல் அவருக்குத் துணையிருப்பதுதான்.

    {>>நான் வேண்டியது, முன்னோடித் திட்டங்களைக் குறிப்பிடுங்கள் என்று சொல்லித்தான்… இதை சுஜாதாவிடம் தெரிவிக்கதேவையில்லை. நீங்கள் Ma.சிவக்குமாருக்கு எழுதிய மடலை மதித்து இணையத்தில் சுட்டியிட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். (http://www.zhakanini.org/contributors1.html)}

    ஹிஹி. இது முந்தாநாள் காலைவரை கிடையாது. என்னுடைய குரல் எழும்பியிருக்க்காவிட்டால் இது இல்லாமலே போயிருக்கும் சாத்தியங்கள் அதிகம். திண்ணைக் கட்டுரை -> ஜெயராதா உரையாடல், என்னுடைய சத்தம் -> ழ-பக்கங்களில் மாற்றம் இவற்றை காலரீதியாகப் பார்க்காமல் திரிக்காதீர்கள், தயவுசெய்து.

    {இருபக்க நியாங்களையும் சமச்சீருடன் அணுகியுள்ளேன். சுஜாதாவை தாக்கியும் மடலில் குறிப்பிட்டுள்ளதை மறுக்கிறீர்களா?}

    இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ரொம்ப அசதியாக இருக்கிறது.

    {அக்கடிதத்தை வாசிக்கும் யவருக்கும் உங்களின் வன்மையான நடை புலப்படும். அதற்கு மாறாக, உங்கள் கேள்விகளுக்கு ழ-கணினி சார்பில் (வன்மையை கண்டிக்காது) பதிலளித்துள்ளார்கள்! ஜனவரி 19/20 தேதியில் துவங்கிய விவாதத்தில் இத்துணை விடயங்கள் நடந்தேறியுள்ளதை நினைத்து வியக்கிறேன்}.

    உண்மைதான், சில சமயங்களில் ஒரு விஷயத்தை உணர்வுபூர்வமாக அணுகும்பொழுது வார்த்தைகள் தடித்துத்தான் போகின்றன. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? (இங்கே இருக்கும் சில நண்பர்களுக்குத் தெரியும்) நான் சுஜாதாவிற்கு எழுதிய அந்தக் கடிதத்தைப் பொதுமைப்படுத்தத் தயங்கினேன். தமிழிலினிக்ஸ் நண்பர்கள் சிலருக்குக் கூடத் தனியாகத்தான் அனுப்பினேன். அதற்கு முக்கிய காரணம், இது சுஜாதா என்ற தனிமனிதரைப் பாதித்துவிடக்கூடாதே என்ற எண்ணம்தான். அந்தக் கடிதங்களை à®´-குழு வழியாக அவருக்கு அனுப்பினேன். அவர்கள் தொடர்ந்தும் அவற்றைக் காணாததுபோலக் காட்டிக்கொண்டார்கள். (அப்படிக் காட்டிக்கொண்டு இன்றைக்கு அவர்கள் பக்கங்களில் இருக்கும் மாற்றங்களைச் செய்திருந்தால் கூட நான் நிறுத்தியிருப்பேன்). ஆனால் so what? who knows about you, who cares you? என்பதைப் போலத்தான் நடந்துகொண்டார்கள். என்னிடம் எந்த மறுவிளக்கங்களையும், என்னுடைய கேள்விகளில் இருப்பவற்றைப் பற்றிய சந்தேகங்களையோ, தவறுகளையோ அவர்கள் கேட்கவில்லை. நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்த முகவரிக்கு சுஜாதாவிற்கு நேரடியாக எழுதினேன், அதற்குப் புறங்கையால் ஒதுக்குவதைப் போல ஒற்றைவரி பதில் வந்தது. அந்த நிலையிலும் அவர்கூட “ஏன்யா எங்கிட்ட கேக்குற, போய் à®´-குழு நிர்வாகியைக் கேளு” என்று எழுதவில்லை. எனவேதான் என்னிடம் ஜெயராதா வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்படும்வரை நான் யார் நிர்வாகி என்று தெரியாமல் இருந்தேன். ஜெயராதாவிடமும் அதே கேள்வியைக் கேட்டேன். (அதன் விபரங்களைத் தரமுடியவில்லை, மன்னிக்கவும்). பிறகு..

    ரகசியமாக, à®´-வில் FAQ வந்து விழுந்தது. அதிலும் “பிளத்தல் இல்லை” என்ற ரீதியில் மொட்டையாகத்தான் பதில் இருந்தது. எனவேதான், இந்த விவாதத்தைப் பொதுத்தளத்திற்கு எடுத்துவந்தேன்.

    என்னுடைய வார்த்தைகளில் இருக்கும் கடுமையை சுட்டும் உங்களுக்கு என்னுடைய செயல்முறையில் இருக்கும் பொறுமையைச் சுட்டவேண்டியிருக்கிறது. இந்த வாதத்தைப் பொதுத்தளத்திற்குக் கொண்டுவராமல் இருக்க அவர்களுக்கு நிறையவே அவகாசம் கிடைத்திருக்கிறது. தங்களுடைய நிலையை என்னிடமும் குழுவிலும் நேரடியாக விரித்துச் சொல்லியிருக்கலாமல்லவா?

    கிட்டத்தட்ட இந்த நிகழ்வில் நான் செய்வது நிழல்யுத்தமாகவே முழுதும் நடந்துகொண்டிருக்கிறது (உங்களையும் சேர்த்துத்தான் :) ). சிவக்குமார் தமிழினிக்ஸில் வடிகட்டி சில விஷயங்களைச் சொல்வார், சுஜாதா “எல்லாமே என்னால்” தோற்றமடைய எழுதுவார், பிறகு சஷிதர் குழுவில் இருக்கும் ஒரே நபராகச் சுட்டப்படுவார், கடைசியில் ஜெயராதாதான் இந்தத் திட்டத்தைத் தயாரித்தவர் என்று தெரியவரும்.

    திறந்த ஆணைமூலத்திற்காகத் தமிழில் பல்கலைக்கழக மானியம் பெற்ற திட்டம் இன்னும் சிறப்பாக, திறந்த வழியில் நடக்கலாமே, நாங்களும் எங்களால் இயன்ற அளவிற்கு ஒத்துழைப்போமே (ஒத்துழைக்கத்தான் போகிறோம்). என்ற ஆதங்கம். உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ தெரியவில்லை!!

    {>>தனக்கு இருக்கும் சமூக அந்தஸ்தை வைத்துக் கொண்டு அவரால் தமிழ் லினக்ஸ் திட்டத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்க முடியும்

    முடியும்தான்! ஆனால் அதை அவர் விரும்பவில்லை என கருதுகிறேன்}.

    {>>”சுஜாதாவின் தமிழ் கம்யூட்டர்”
    ஊடகத்தில் வரும் செய்திகளுக்கும் அவர் பொருப்பேற்க வேண்டுமா?}

    ஊடகத்தில் அப்படி ஒரு அபிப்பிராயம் உருவாக அவர் எவ்வளவு முயற்சிசெய்கிறார் என்பதை மறக்கவேண்டுமா? ஹரி சொல்வதைப்போல எழுத்துக்கலையில் முதிர்ந்த ஒருவர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.

    {பிளத்தல்: Resource/String பிளத்தல் பற்றி தெரிந்தால் தெரிவியுங்கள்}.

    திறந்த ஆணைமூலம் தயாரிப்பவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இதை இப்படி வார்த்தையாகப் பொருள் கொள்வதன் அபத்தம் உரைக்க வேண்டுமே?

    உதாரணமாக, KDE தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு தமிழ் கேடிஈ குழு ஆரம்பிக்கிறேன் என்று எழுதிப்பாருங்கள், கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? The Linux Documentation Project க்கு Linux Kernel Howto என்று ஒரு உதவி ஆவணம் எழுதுவதாகச் சொன்னால் அவர்கள் உங்களுக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறீகள்?

    ஏதாவது ஒரு பெரிய தளையறு திட்டத்தில் போய் இரண்டு உள்ளூர்மயமாக்கல், ஆவணப்படுத்தல் என்று இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் எளிது. எனவே பிளத்தல் நிரலுக்கு மாத்திரமல்ல திட்டங்களுக்கும்தான் – திறந்த ஆணைமூலம் எல்லாவற்றுக்கும்தான்.

    {>>http://www.zynot.org/info/fork.html அருமையான கட்டுரை. சுட்டிக்கு நன்றி. (இதுதான் விவாதங்களின் பெரும்பயன்! இவ்விவாதத்தில் கலந்துகொண்டதால் இக்கட்டுரையைப் படிக்கும் அரும்பாக்கியம் பெற்றேன். மீண்டும் நன்றிகள்!). வெல்ச் (Welch) அவர்களும் Source பிளத்தலைப்பற்றியே கதைக்கிறார். பிளத்தல் என ழ-கணினி குழுவினர் ஏற்கும்பட்சத்தில் இதைபோல கட்டுரையை அவர்களின் இணையத்தில் இட்டால் மகிழ்வீர்களா?}

    மீண்டும் சிரிப்புத்தான் வருகிறது; வெல்ச் ஜெண்டூ லினக்ஸை இரகசியமாக ஒருநாள் பிளந்துவிட்டு, வலையில் “நான் ஏன் பிளத்தேன்” என்று விளக்கம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அதைப் பிளப்பதற்கு முன்னால் ஜெண்டூவின் முதிய நிரலர்களுடன் அவரும் அவர் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர்களும் விவாதித்திருக்க மாட்டார்கள் என்று ஊகிக்கிரீகளா? இன்னும் கொஞ்சம் வரலாற்றில் பின்னால் போய்ப் பார்த்தால் EMACS – GNU EMACS, NCSA httpd – Apache போன்ற பிளவுகளெல்லாம் எந்த அளவிற்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றன, அந்த விவாதஙக்ள் நம் அறிவை எந்த அளவிற்கு முன்னெ எடுத்துச் சென்றிருக்கின்றன என்பதைப் போன்று நிறையப் படிக்க முடியும். நான் ஏன் பிளந்தேன் என்று எழுதுவதைவிட ஏன் பிளக்கவேண்டும் என்று சிந்தப்பதும், அதைத் தவிர்க்க மற்றவர்களுடன் ஒத்துழைப்பதும் மிகவும் முக்கியம். பிளவினால் தீமை என்று இல்லை; PhpNuke – PostNuke பிளவு எப்படி ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது என்பது சுவாரசியம். gcc -> pgcc – > gecs -> gcc எப்படிப் ப

    0 Responses to Tamil Linux – More Questions/Answers -3

    1. Pari
      January 31, 2004 at 8:16 pm

      வெங்கட்,

      இது மாதிரியான கேள்விகளுக்கு மாங்கு மாங்கென்று பதில் சொல்வதைவிட, ஒரு FAQ மாதிரி தயாரித்து உங்கள் வலைப்பக்கத்தில் இட்டால் என்ன? இந்தப்பிரச்சினையைப்பற்றி கேள்விப்பட்டு புதுசுபுதுசாய் கேள்வி கேட்பவர்கள் தெரிந்துகொள்ள வசதியாய் இருக்குமே?

    2. venkat
      February 2, 2004 at 10:26 pm

      test. Is my movabletype back into life?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *